கிறிஸ்துவின் அப்போஸ்தலர்
எனவே, மக்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், இறைவனின் இரகசியமான உண்மைகளைப் பிரசித்தப்படுத்துவதற்கு பொறுப்புடையவர்கள் என்றும் எண்ணவேண்டும். 1 பேது 4:101 தீமோ 3:9தீத் 1:7எபே 6:192 கொரி 4:5கொலோ 1:25-271 கொரி 9:16-18ரோம 16:25 எப்பொழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர், உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம். மத் 25:21லூக் 12:42லூக் 16:10-12கொலோ 4:17எண் 12:72 கொரி 2:17மத் 25:23நீதி 13:17 உங்களாலேயாவது அல்லது எந்த மனிதருடைய நீதிமன்றத்தினாலேயாவது, நான் நியாயந்தீர்க்கப்படுவதை அற்பமாகவே எண்ணுகிறேன்; நானும் என்னைக்குறித்து நியாயத்தீர்ப்புச் செய்யவில்லை. 1 கொரி 2:15யோவா 7:241 சாமு 16:71 கொரி 3:13 என் மனசாட்சி சுத்தமாயிருக்கிறது, அதனால் நான் குற்றமற்றவன் என்றில்லை. கர்த்தரே என்னை நியாயந்தீர்க்கிறவர். சங் 143:21 யோவா 3:20-21நீதி 21:2சங் 130:32 கொரி 1:12சங் 19:121 கொரி 4:52 கொரி 5:10 எனவே, குறிக்கப்பட்ட காலம் வருமுன்னே, நீங்கள் யாரையும் நியாயந்தீர்க்கவேண்டாம்; கர்த்தர் வரும்வரை காத்திருங்கள். அவர் இருளில் மறைந்திருப்பவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார். மனிதருடைய உள்ளங்களின் நோக்கங்களையும் வெளியரங்கப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியை இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வான். யாக் 5:72 கொரி 5:101 கொரி 3:13எபி 4:132 கொரி 10:18ரோம 2:16பிரச 12:14ரோம 2:1
இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்கள் நன்மையைக் கருத்தில்கொண்டே, என்னையும் அப்பொல்லோவையும் ஒரு எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டு, இவற்றை எழுதியிருக்கிறேன். இதனால், “எழுதியிருக்கிறதற்குமேல் போகவேண்டாம்” என்பதன் கருத்தை, நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனைப்பற்றி இன்னொருவர் இகழமாட்டீர்கள். 2 கொரி 11:42 கொரி 12:192 கொரி 12:6கொலோ 2:18ரோம 12:31 தெச 1:5யோவா 3:26-271 கொரி 1:31 ஏனெனில், மற்ற எவரையும்விட உங்களை வித்தியாசப்படுத்துபவர் யார்? நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எது உங்களிடம் இருக்கிறது? நீங்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தால், அவற்றை ஒரு வரமாகப் பெற்றீர்கள் என்று எண்ணாமல், எப்படி பெருமைபாராட்டுகிறீர்கள்? யோவா 3:271 பேது 4:10யாக் 1:171 நாளாக 29:11-16யோவா 1:16ரோம 12:6நீதி 2:6லூக் 19:13
உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் ஏற்கெனவே நீங்கள் பெற்றுக்கொண்டீர்களோ! நீங்கள் செல்வந்தர்களாகிவிட்டீர்களோ! நீங்கள் எங்களை விட்டுவிட்டு அரசர்களாகிவிட்டீர்களோ! ஆனால் நாங்களோ அப்படியல்ல. நீங்கள் உண்மையாகவே அரசர்களாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அப்பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து அரசாளலாமே. நீதி 13:71 கொரி 5:62 கொரி 13:9கலா 6:3லூக் 6:25ரோம 12:31 கொரி 1:51 தெச 2:19-20 ஆனால் எனக்கோ, கொலைக்களத்திற்கு சாகும்படி கொண்டுசெல்லப்படுகிறவர்களின் வரிசையின் இறுதியில், அப்போஸ்தலர்களாகிய எங்களையும் இறைவன் நிறுத்தி, ஒரு காட்சிப் பொருளானோம் என காணப்படப்பண்ணினர். நாங்கள் முழு உலகத்திற்கும், இறைத்தூதர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு வேடிக்கையானோம். எபி 10:332 கொரி 4:8-12ரோம 8:361 கொரி 15:30-322 கொரி 1:8-10எபி 1:14பிலி 1:29-301 தெச 3:3 கிறிஸ்துவுக்காகவே நாங்கள் மூடர்களாயிருக்கிறோம். ஆனால், நீங்களோ கிறிஸ்துவில் எவ்வளவு ஞானமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்! நாங்கள் பெலவீனர், நீங்களோ பெலசாலிகள்! நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், நாங்களோ அவமதிக்கப்படுகிறோம்! 1 கொரி 2:31 கொரி 3:182 கொரி 13:9அப் 17:18அப் 26:241 பேது 4:142 கொரி 11:19ஓசி 9:7 இந்த நேரத்திலும், நாங்கள் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் பழைய உடைகளையே உடுத்திக்கொண்டும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களும், வீடற்றவர்களுமாய் இருக்கிறோம். ரோம 8:352 கொரி 11:23-27பிலி 4:122 தீமோ 3:11மத் 8:202 கொரி 6:4-5யோபு 22:61 கொரி 9:4 நாங்கள் எங்கள் சொந்தக் கைகளினால் கடுமையாக உழைக்கிறோம். மற்றவர்கள் எங்களை சபிக்கும்போது, நாங்களோ ஆசீர்வதிக்கிறோம்; நாங்கள் துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம்; 1 பேது 3:9மத் 5:11ரோம 12:141 பேது 4:12-14அப் 18:3லூக் 6:28ரோம 12:201 பேது 2:23 மற்றவர்கள் எங்களை அவதூறாய்ப் பேசுகிறபொழுது, நாங்கள் தயவுடன் பதிலளிக்கிறோம். நாங்கள் இதுவரை உலகத்தின் கழிவுப் பொருட்களாகவும், பூமியின் குப்பையாகவும் எண்ணப்படுகிறோம். புலம் 3:45அப் 22:22
பவுலின் முறையீடும் எச்சரிக்கையும்
உங்களை வெட்கப்படுத்தும்படியாக நான் இவற்றை உங்களுக்கு எழுதவில்லை. ஆனால் என் அன்பான பிள்ளைகளென எண்ணி, உங்களை எச்சரிப்பதற்காகவே இதை எழுதுகிறேன். 1 தெச 2:113 யோவா 1:41 கொரி 4:151 கொரி 9:151 தெச 5:142 கொரி 12:19கொலோ 1:281 கொரி 15:34 கிறிஸ்துவில் உங்களுக்குப் பத்தாயிரம் வேதாகம ஆசிரியர்கள் இருக்கிறபோதிலும், உங்களுக்கு ஒரு தகப்பனே இருக்கிறார். நற்செய்தியின் மூலமாக நானே உங்களுக்குக் கிறிஸ்து இயேசுவுக்குள் தகப்பனானேன். 1 கொரி 3:10கலா 4:191 கொரி 9:141 கொரி 9:231 பேது 1:231 கொரி 3:61 கொரி 9:121 கொரி 9:18 ஆகவே நீங்களும் என்னைப்போலவே நடந்துகொள்ள வேண்டுமென நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். 1 கொரி 11:12 தெச 3:9பிலி 3:171 தெச 1:6எபி 13:7பிலி 4:9யோவா 10:4-51 பேது 5:3 இதற்காகவே, என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவன் எனக்கு அன்பானவன், அவன் கர்த்தரில் உண்மையுள்ளவன். அவன் கிறிஸ்து இயேசுவில், என் வாழ்க்கை முறையை உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். என் வாழ்க்கைமுறை எல்லா இடங்களிலும், எல்லாத் திருச்சபைகளிலும் நான் போதித்து வருவதன்படி அமைந்திருக்கிறது. 1 கொரி 16:101 தீமோ 1:21 கொரி 7:172 தீமோ 1:21 கொரி 14:331 கொரி 16:11 கொரி 11:21 கொரி 7:25
நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என்று எண்ணி, உங்களில் சிலர் அகந்தைகொண்டிருக்கிறீர்கள். 1 கொரி 4:6-81 கொரி 5:21 கொரி 4:21 ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால், நான் மிகவிரைவில் உங்களிடம் வருவேன். அப்பொழுது, இந்த அகந்தைகொண்டவர்கள் பேசுவதை மட்டுமல்ல, அவர்களுடைய பெலத்தையும் அறிந்துகொள்வேன். 2 கொரி 13:1-4அப் 18:21அப் 19:211 கொரி 11:341 கொரி 14:51 கொரி 2:61 கொரி 4:182 கொரி 1:23 ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, பெலத்திலே இருக்கிறது. 1 கொரி 2:41 தெச 1:52 கொரி 10:4-5ரோம 14:17ரோம 1:16ரோம 15:191 கொரி 1:24 நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நான் உங்களிடம் பிரம்புடன் வரவேண்டுமா? அல்லது அன்புடனும், சாந்தமுள்ள ஆவியுடனும் வரவேண்டுமா? 2 கொரி 13:22 கொரி 13:101 தெச 2:72 கொரி 12:20-212 கொரி 1:232 கொரி 2:3யாக் 3:172 கொரி 10:1-2