பவுல், சில்வான், தீமோத்தேயு, ரோம 1:72 தெச 1:1அப் 18:5அப் 20:41 பேது 5:122 கொரி 1:19அப் 16:1-3அப் 17:11
ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது:
கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
தெசலோனிக்கேயருக்கு நன்றி செலுத்துதல்
நாங்கள் எங்களுடைய மன்றாட்டுகளில் உங்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். ரோம 1:8-9எபே 1:15-16பிலே 1:4கொலோ 1:3பிலி 1:3-41 கொரி 1:4ரோம 6:17 நமது இறைவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு முன்பாக, உங்கள் விசுவாசத்தினால் வரும் செயலையும், அன்பினால் உண்டாகிய வேலையையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உங்களுக்குண்டான சகிப்புத்தன்மையையும் நாங்கள் நினைவுகூருகிறோம். 1 கொரி 13:13வெளி 2:19கலா 5:6ரோம 8:24-252 தெச 1:111 யோவா 5:3கலா 6:9ரோம 15:13
இறைவனால் அன்பு செலுத்தப்படுகிற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று எங்களுக்குத் தெரியும். 2 தெச 2:132 பேது 1:10தீத் 3:4-5ரோம 9:25கொலோ 3:12எபே 1:4எபே 2:4-5ரோம 1:7 ஏனெனில், எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வெறும் வார்த்தைகளோடு வரவில்லை. அந்த நற்செய்தி வல்லமையுடனும், பரிசுத்த ஆவியானவருடனும், உறுதியான நம்பிக்கையுடனும் உங்களிடத்தில் வந்தது. உங்களுக்காக நாங்களும் உங்களிடையே எப்படி வாழ்ந்தோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். 2 தெச 3:7-9மாற் 16:201 கொரி 2:2-51 தெச 2:132 தெச 2:141 கொரி 4:201 பேது 1:12கொலோ 2:2 உங்களுக்கு ஏற்பட்ட கடுந்துன்பத்தையும் பொருட்படுத்தாமல், நற்செய்தியை பரிசுத்த ஆவியானவர் கொடுத்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கிறவர்களானீர்கள். 1 கொரி 11:11 கொரி 4:16அப் 13:52கலா 5:222 தெச 3:93 யோவா 1:11எபே 5:1ரோம 5:3-5 இவ்விதமாய் நீங்கள் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு முன்மாதிரிகளானீர்கள். தீத் 2:71 பேது 5:31 தீமோ 4:121 தெச 1:82 கொரி 11:9-10அப் 16:122 கொரி 1:1அப் 1:13 உங்களிடமிருந்தே கர்த்தரின் செய்தி மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்திருக்கிறது. இறைவனில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமும் எங்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே, அதைக்குறித்து நாங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை. ரோம 1:8ரோம 10:14-182 தெச 1:43 யோவா 1:12ஏசா 52:7வெளி 14:62 தெச 3:1யாத் 18:9 ஏனெனில் அவ்விடத்திலுள்ள மக்களே நீங்கள் எப்படி வரவேற்றீர்கள் என்பதைப்பற்றி அவர்களே அறிவிக்கிறார்கள். நீங்கள் எவ்விதமாய் உண்மையான உயிருள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, இறைவன் அல்லாதவைகளைக் கைவிட்டு இறைவனிடம் திரும்பினீர்கள் என்பது பற்றியும் அறிவிக்கிறார்கள். 1 தீமோ 4:101 கொரி 12:2கலா 4:8-91 தெச 2:13சகரி 8:20-23செப்ப 2:111 தெச 2:1அப் 14:15 அத்துடன், இறைவன் இறந்தோரிலிருந்து எழுப்பிய தமது மகனாகிய இயேசு, பரலோகத்திலிருந்து வரும்வரை நீங்கள் காத்திருப்பதைப் பற்றியும் அறிவிக்கிறார்கள். இந்த இயேசுவே வரப்போகும் கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர். 1 தெச 5:9ஏசா 25:8-9ரோம 5:9-10மத் 3:71 தெச 4:16-17அப் 2:241 பேது 1:31 பேது 3:18