1 தெசலோனிக்கேயர் 5

1 Thessalonians 5

கர்த்தருடைய நாள்

இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. அப் 1:71 தெச 4:9மத் 24:36மத் 24:3மாற் 13:30-322 கொரி 9:1யூதா 1:3 ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே. வெளி 16:152 பேது 3:10மத் 24:42-44வெளி 3:3லூக் 12:39-40மத் 25:13மாற் 13:34-35எரே 23:20 “சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. லூக் 21:34-35மத் 24:37-39லூக் 17:26-30வெளி 18:7-82 தெச 1:9எபி 2:3சங் 73:18-202 பேது 2:4

ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது. 1 யோவா 2:81 பேது 2:9-102 பேது 3:10கொலோ 1:13உபா 19:6உபா 28:15உபா 28:45எரே 42:16 நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல. எபே 5:8அப் 26:18யோவா 12:36லூக் 16:8 ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக. 1 பேது 1:13மத் 24:42லூக் 22:461 பேது 5:8ரோம 13:11-14வெளி 16:151 கொரி 16:13எபே 5:14 ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள். ரோம 13:131 கொரி 15:342 பேது 2:13அப் 2:15தானி 5:4-5எபே 5:14ஏசா 21:4-5லூக் 21:34-35 ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம். ரோம 13:12-131 பேது 1:13எபே 6:11ஏசா 59:17எபி 10:35-361 கொரி 13:13எபி 6:191 தெச 5:5 ஏனெனில் இறைவன் நம்மை தமது கோபத்தின் தண்டனையைப் பெறுவதற்காக நியமிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெறவே நியமித்திருக்கிறார். 1 தெச 1:101 பேது 2:102 தீமோ 2:10அப் 13:48நீதி 16:41 தெச 3:3ரோம 9:11-231 பேது 2:8 நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார். ரோம 14:8-91 பேது 3:182 கொரி 5:15எபே 5:2மத் 20:281 பேது 2:241 தெச 4:172 கொரி 5:21 ஆகையால் நீங்கள் இப்பொழுது செய்கிறதுபோலவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுங்கள். எபே 4:29ரோம 15:2எபி 10:25எபி 3:131 தெச 4:18ரோம 14:191 கொரி 14:12எபே 4:12

இறுதி அறிவுரைகள்

பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள். எபி 13:17எபி 13:71 தீமோ 5:17-181 கொரி 16:181 கொரி 16:161 கொரி 15:10தீத் 1:31 கொரி 3:9 அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள். மாற் 9:50எபி 12:141 கொரி 9:7-11கலா 6:6யாக் 3:18யோவா 13:34-351 கொரி 4:1-2எபே 4:3 பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள். 2 தீமோ 4:2ரோம 14:1அப் 20:352 தெச 3:6-7ஏசா 35:3-41 கொரி 13:4-52 தெச 3:11-13கலா 6:1-2 ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள். 1 பேது 3:9கலா 6:10லேவி 19:183 யோவா 1:11ரோம 12:17-21எபி 12:141 பேது 3:11-131 பேது 2:22-23

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். ரோம 12:12பிலி 4:4மத் 5:122 கொரி 6:10லூக் 10:20 இடைவிடாது மன்றாடுங்கள். ரோம 12:12கொலோ 4:2எபே 6:18லூக் 18:1லூக் 21:361 பேது 4:7 எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம். எபே 5:20பிலி 4:6கொலோ 3:17எபி 13:15யோபு 1:211 பேது 4:2சங் 34:11 பேது 2:15

ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள். எபே 4:30அப் 7:512 தீமோ 1:61 தீமோ 4:14ஏசா 63:10நெகே 9:30சங் 51:11ஆதி 6:3 சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம். 1 கொரி 14:3-61 கொரி 14:11 கொரி 11:41 கொரி 14:37-39எண் 11:25-291 கொரி 14:22-25அப் 19:61 கொரி 12:28 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். 1 யோவா 4:1ரோம 12:2எபே 5:10லூக் 12:57அப் 17:11பிலி 4:8ரோம 12:91 கொரி 2:14-15 எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள். 2 கொரி 6:3பிலி 4:82 கொரி 8:20-211 கொரி 10:31-33ரோம 12:17யாத் 23:71 கொரி 8:131 தெச 4:12

சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக. யூதா 1:241 கொரி 1:8-9எபி 4:121 தெச 3:131 பேது 5:10எபே 5:26-27பிலி 1:6பிலி 1:10 உங்களை அழைத்த இறைவன் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 2 தெச 3:3எண் 23:19உபா 7:91 கொரி 1:91 பேது 5:102 தீமோ 2:13ஏசா 25:1புலம் 3:23

பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள். எபி 13:18-19பிலி 1:192 கொரி 1:11பிலே 1:22கொலோ 4:3எபே 6:18-20ரோம 15:302 தெச 3:1-3

எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள். ரோம 16:161 கொரி 16:20

இந்தக் கடிதத்தை எல்லா சகோதரருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கொலோ 4:162 தீமோ 4:11 இராஜா 22:161 தீமோ 1:31 தீமோ 5:211 தீமோ 5:72 நாளாக 18:15அப் 19:13

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ரோம 16:202 தெச 3:18ரோம 1:7ரோம 16:23