ரோமர் 15

Romans 15

விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது. 1 தெச 5:14ரோம 14:11 கொரி 9:22கலா 6:1-21 கொரி 12:22-241 யோவா 2:142 தீமோ 2:1ரோம 4:20 நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் நிமித்தம் விசுவாசத்தில் வளரச்செய்யும்படி, அவனைப் பிரியப்படுத்த வேண்டும். 1 கொரி 10:24ரோம 14:19பிலி 2:4-51 கொரி 10:331 கொரி 9:19-221 கொரி 13:5தீத் 2:9-10 கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” 1 என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன. சங் 69:9பிலி 2:8யோவா 4:34யோவா 5:30யோவா 6:38சங் 89:50-512 கொரி 8:9யோவா 12:27-28 முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம். 1 கொரி 10:112 தீமோ 3:16-17ரோம 4:23-242 பேது 1:20-21எபி 10:35-36ரோம 12:121 கொரி 9:9-10ரோம 8:24-25

பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. பிலி 2:4-5ரோம 15:131 பேது 3:8எபே 5:2ரோம 12:162 கொரி 13:111 கொரி 1:10சங் 86:5 அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள். யோவா 10:29-30அப் 4:24எபே 1:3வெளி 1:62 கொரி 11:311 பேது 1:32 கொரி 1:3ரோம 15:9-11

ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும். மத் 10:40யோவா 13:34ரோம 14:1-3ரோம 5:2லூக் 9:48மாற் 9:37எபே 1:6-82 தெச 1:10-12 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவன் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக, கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். இவ்விதம் இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தினார். கலா 4:4-5மத் 15:242 கொரி 1:20யோவா 1:11அப் 3:25-26யோவா 10:16ரோம 3:3ரோம 15:16 இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: 2 சாமு 22:50சங் 18:49ரோம 3:29மத் 9:8

“ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்;

நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.” 2

மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: சங் 67:3-4உபா 32:43ஏசா 42:10-12சங் 138:4-5சங் 68:32ஏசா 24:14-16சங் 66:1-4சங் 98:3-4

“யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.” 3

மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: சங் 117:1

“யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்;

ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.” 4

இன்னும் ஏசாயா, ஏசா 11:10ஏசா 11:1மத் 12:21வெளி 22:16வெளி 5:51 கொரி 15:19மீகா 4:1-3தானி 7:14

“ஈசாயின் வேர் முளைத்தெழும்பும்.

ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்;

யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” 5

என்று சொல்கிறான்.

எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள். 2 தெச 2:16-17ரோம 12:122 கொரி 9:8கலா 5:22ரோம 14:17யோவா 14:1ரோம 15:5யோவா 14:27

பவுலின் சமாதான ஊழியம்

எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நன்மையினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவுபெற்றவர்களென்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன். 2 பேது 1:12கொலோ 3:161 கொரி 8:11 யோவா 2:211 கொரி 1:51 கொரி 8:101 கொரி 8:71 தெச 5:11 ஆனால் நான் சில விஷயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைப்பூட்டுவதற்காகவேத் துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். ஏனெனில் இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி, ரோம 12:31 கொரி 15:10ரோம 1:5ரோம 12:61 யோவா 5:131 பேது 4:10-112 பேது 3:151 கொரி 3:10 யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன். ரோம 11:13ரோம 1:1அப் 9:151 தீமோ 1:112 தீமோ 1:11பிலி 2:17அப் 20:24ஏசா 66:19-20

ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன். 2 கொரி 2:14-162 கொரி 12:11-212 கொரி 7:42 கொரி 12:12 கொரி 3:4-6எபி 5:1பிலி 3:32 கொரி 11:16-30 யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற அப் 15:12ரோம 1:5அப் 21:19நீதி 25:14கலா 2:82 தெச 2:17ரோம 16:261 கொரி 3:6-9 அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன். 2 கொரி 12:12எபி 2:4அப் 19:11-12கலா 3:52 தீமோ 4:171 கொரி 12:4-11அப் 20:6அப் 17:10 வேறொருவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் நான் கட்டக்கூடாது என்பதற்காக கிறிஸ்துவைக்குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே, நற்செய்தியை அறிவிப்பதே எப்பொழுதும் என் விருப்பமாயிருக்கிறது. 2 கொரி 10:13-161 கொரி 3:9-15எபே 2:20-22 வேதவசனத்தில் எழுதியிருக்கிறபடியே: ஏசா 52:15ஏசா 65:1

“அவரைக்குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள்,

கேள்விப்படாதவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.” 6

இதன்படியே நான் இப்படிச் செய்தேன்.

இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன. ரோம 1:131 தெச 2:17-18

ரோம் நகரத்திற்குச் செல்ல பவுலின் திட்டம்

ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணிசெய்ய வேண்டிய எந்தவொரு இடமும் இல்லை. அத்துடன் பலவருடங்களாக நான் உங்களைக் காணவும் ஆவலாயிருக்கிறேன். ரோம 15:32அப் 19:21ரோம 1:10-12ரோம 15:291 தெச 3:102 தீமோ 1:4 எனவே நான் ஸ்பெயினுக்குப் போகும்போது, உங்களிடமும் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்துவிட்டு, அங்கிருந்து உங்கள் உதவியோடு, எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன். ரோம 15:28ரோம 1:12அப் 15:31 கொரி 16:5-72 கொரி 1:16அப் 19:21அப் 21:53 யோவா 1:6 ஆனால் இப்பொழுது எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு பணிசெய்வதற்காக நான் அங்கு போகின்றேன். அப் 19:21அப் 24:17அப் 20:22அப் 20:161 கொரி 16:1-3அப் 18:21கலா 2:10ரோம 15:26-31 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறார்கள். 2 கொரி 8:1-92 கொரி 9:2அப் 11:27-302 கொரி 9:12யாக் 2:5-61 கொரி 16:15அப் 16:9அப் 18:12 அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கிறார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதினால், இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 1 கொரி 9:11கலா 6:6பிலே 1:19ரோம 11:17 எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்டபின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியபின், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன். பிலி 4:17ரோம 15:24கொலோ 1:6நீதி 19:21புலம் 3:37யாக் 4:13-15 நான் உங்களிடம் வரும்போது, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம். எபே 4:13ரோம 1:10-12எபே 1:3சங் 16:11எபே 3:19எபே 3:8எசேக் 34:26

பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி, எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். கொலோ 4:122 கொரி 1:111 தெச 5:252 கொரி 4:11பிலி 2:12 தெச 3:1ஆதி 32:24-291 தீமோ 6:13-14 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுங்கள். 2 தெச 3:22 கொரி 8:42 கொரி 9:1ரோம 15:25அப் 21:17-311 தெச 2:152 தீமோ 3:112 தீமோ 4:17 அப்பொழுது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து, உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன். 1 கொரி 16:182 கொரி 7:13அப் 18:21பிலே 1:20பிலே 1:72 தீமோ 1:161 கொரி 4:19அப் 27:1 சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென். 2 கொரி 13:11பிலி 4:91 தெச 5:232 தெச 3:16எபி 13:20ரோம 16:202 கொரி 13:141 கொரி 14:33