2 கொரிந்தியர் 1

2 Corinthians 1

இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலாகிய நானும், 2 தீமோ 1:1எபே 1:1பிலி 1:1தீத் 1:11 கொரி 16:101 கொரி 6:111 தெச 1:7-81 தீமோ 1:1

நம்முடைய சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்திலுள்ள இறைவனுடைய திருச்சபைக்கும், அகாயா நாடு முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:

நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:7எபே 6:23பிலி 1:2பிலே 1:31 நாளாக 12:181 கொரி 1:31 தெச 1:12 தெச 1:2

ஆறுதலின் இறைவன்

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமானவருக்குத் துதி உண்டாவதாக; அவர் இரக்கத்தின் பிதாவும் எல்லா விதமான ஆறுதலின் இறைவனுமாயிருக்கிறார். எபே 1:31 பேது 1:3ரோம 15:5-6மீகா 7:18சங் 86:5தானி 9:9எபே 1:17சங் 86:15 அவரே நம்மை நம்முடைய எல்லாக் கஷ்டங்களிலும் ஆறுதல்படுத்துகிறார். எனவே நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, பல்வேறு கஷ்டங்களில் உள்ளவர்களை, எங்களால் ஆறுதல்படுத்தக் கூடியதாயிருக்கிறது. 1 தெச 5:112 தெச 2:16-17ஏசா 51:122 கொரி 7:6-7ஏசா 40:1சங் 32:7யோவா 14:18எபி 12:12 ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகள் பெருகிவருகிறதுபோல, கிறிஸ்துவின்மூலம் நமக்கு அனுதினம் ஆறுதலும் பெருகுகிறது. கொலோ 1:24பிலி 3:102 தெச 2:16-17பிலி 1:202 கொரி 4:10-11பிலி 2:11 கொரி 4:10-132 கொரி 11:23-30 நாங்கள் துன்பப்படுத்தப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்குமே; நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதல், நீங்களும் எங்களைப் போலத் துன்பங்களை அனுபவிக்கும்போது, அது உங்களிலும் பொறுமையான சகிப்புத் தன்மையை வளர்க்கிறது. 2 தீமோ 2:102 கொரி 4:15-182 கொரி 1:4எபே 3:13பிலி 1:19ரோம 8:282 கொரி 5:52 கொரி 12:15 மேலும் உங்களைப்பற்றிய எங்கள் எதிர்பார்ப்பு உறுதியாய் இருக்கிறது. ஏனெனில், எங்களுடைய துன்பங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோலவே, எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ரோம 8:17-182 தெச 1:4-7யாக் 1:121 தெச 1:3-4யாக் 1:2-42 தீமோ 2:121 கொரி 10:132 கொரி 1:14

பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி நீங்கள் அறியாதிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களால் தாங்கமுடியாத அளவுக்கு, அதிகமான சுமைகளால் நெருக்குண்டோம். இதனால் நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையையும் இழந்தோம். 2 கொரி 4:7-121 கொரி 15:321 கொரி 4:81 கொரி 16:9அப் 19:23-351 சாமு 27:11 சாமு 20:3 உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது. 2 கொரி 3:52 கொரி 4:7எபி 11:192 கொரி 12:7-10ரோம 4:17-25யோபு 40:14சங் 44:5-7எசேக் 37:1-14 அத்தகைய மரண ஆபத்திலிருந்து அவர் எங்களை விடுவித்தார். அவரே இன்னும் எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்று, அவரிலேயே எங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வைத்திருக்கிறோம். 1 தீமோ 4:102 பேது 2:9சங் 34:191 சாமு 17:372 தீமோ 4:17ரோம 15:31அப் 26:211 சாமு 7:12 ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள். பிலி 1:192 கொரி 4:15அப் 12:5கொலோ 4:32 தெச 3:1எபி 13:18பிலே 1:22ரோம 15:30-32

பவுல் திட்டங்களை மாற்றுதல்

இப்பொழுது, நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களுடனான உறவிலும், இறைவன் கொடுத்த பரிசுத்தத்துடனும், உண்மையுடனும் நடந்தோம் என்பதே எங்கள் பெருமை. இதற்கு எங்கள் மனசாட்சியும் சான்று கொடுக்கின்றது. நாங்கள் உலக ஞானத்தோடு அதைச் செய்யவில்லை. இறைவனுடைய கிருபையினாலேயே செய்தோம். 1 கொரி 2:132 கொரி 2:17யாக் 3:13-181 தெச 2:101 கொரி 15:101 பேது 3:212 கொரி 12:15-192 கொரி 4:2 எங்கள் கடிதங்களில், உங்களால் வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத எதையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை என்று நம்புகிறேன். 2 கொரி 4:2பிலே 1:62 கொரி 13:62 கொரி 5:11 நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள். 1 தெச 2:19-20பிலி 2:161 கொரி 1:81 தெச 3:13பிலி 1:10பிலி 4:11 தெச 5:23பிலி 1:6

நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன். ரோம 1:11ரோம 15:291 கொரி 4:191 கொரி 11:342 கொரி 6:1பிலி 1:25-26 நான் மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும்போதும் உங்களிடம் வரவும் பின்பு, உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன். 1 கொரி 16:5-7அப் 19:21-22அப் 21:5 இப்படி நான் திட்டமிட்டபோது, ஒரு பொறுப்பற்ற முறையில் செய்தேனா? அல்லது, ஒரே மூச்சில் “ஆம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லும் விதத்தில், நான் உலகரீதியாக என் திட்டங்களை வகுக்கிறேனா? மத் 5:37யாக் 5:122 கொரி 10:2-32 கொரி 1:18-20யோவா 8:15எரே 23:322 கொரி 1:12நியாயாதி 9:4

ஆனால் இறைவன் வாக்குமாறாதவராய் இருப்பது நிச்சயம்போலவே, உங்களுக்கு என் செய்தியும் “ஆம்” என்று சொல்லி, பின் “இல்லை” என்று சொல்கிற பேச்சு அல்ல என்பதும் நிச்சயம். 1 கொரி 1:9வெளி 3:7யோவா 7:28வெளி 3:142 கொரி 1:232 கொரி 11:312 கொரி 2:17யோவா 8:26 நானும், சில்வானும், தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்த, இறைவனின் மகனான இயேசுகிறிஸ்து, “ஆம்” அப்படித்தான் என்று சொல்லி, பின் “இல்லை” அது அப்படியல்ல என்று சொல்லுகிறவர் அல்ல. மாறாக, “ஆம்” என்று அவர் சொன்னது, எப்பொழுதும் அவரில் “ஆம்” என்றே இருக்கிறது. எபி 13:82 யோவா 1:9வெளி 1:17வெளி 1:81 யோவா 5:20வெளி 2:18அப் 18:51 யோவா 1:3 இறைவன் எத்தனை வாக்குத்தத்தங்களைக் கொடுத்தாலும், அவை எல்லாம் கிறிஸ்துவில் “ஆம்” என்றே இருக்கின்றன. இதனாலேயே இறைவனுக்கு மகிமையுண்டாக, அவர்மூலம் நாங்கள் “ஆமென்” என்று சொல்கிறோம். 1 யோவா 2:24-25கலா 3:22வெளி 7:12எபி 13:8எபே 1:6எபே 1:12-14வெளி 3:14ரோம 11:36 இப்பொழுதும் எங்களையும், உங்களையும் இறைவனே கிறிஸ்துவில் உறுதியாய் நிற்கச்செய்கிறார். அவர் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார். 1 யோவா 2:271 யோவா 2:201 பேது 5:10ரோம 8:9ஏசா 61:12 தெச 3:3ஏசா 9:72 கொரி 5:5 அவர் தமது உரிமையின் அடையாளமான முத்திரையை நம்மீது பதித்திருக்கிறார். வரப்போகிறவற்றிற்கு உத்தரவாதமாக, அவர் தமது ஆவியானவரை நமது இருதயங்களில் ஒரு நிலையான வைப்பாக வைத்திருக்கிறார். எபே 4:302 கொரி 5:5எபே 1:13-14யோவா 6:27ரோம 8:14-16வெளி 9:4ரோம 8:23ரோம 8:9

நான் உங்களைக் கண்டித்து துன்பம் கொடுக்காமல் இருப்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பிவராமல் இருந்தேன் என்பதற்கு, இறைவனே எனக்குச் சாட்சி. கலா 1:201 கொரி 4:212 கொரி 13:102 கொரி 13:2ரோம 1:92 கொரி 10:6-112 கொரி 12:20பிலி 1:8 நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களுடன் ஒத்துழைக்கிறோம். ஏனெனில், நீங்கள் விசுவாசத்திலேயே உறுதியாய் நிற்கிறீர்கள். 1 பேது 5:31 கொரி 15:12 தீமோ 2:24-262 கொரி 4:5பிலி 1:25-26ரோம 5:2மத் 23:8-10மத் 24:49