எனவே இப்படிப்பட்ட பெருந்திரளான சாட்சிகள் ஒரு மேகத்தைப்போல் நம்மைச்சுற்றி இருக்கிறதினால், நம்மைத் தடைசெய்கிற எல்லா பாரத்தையும், நம்மை இலகுவாய் சிக்கவைக்கிற பாவத்தையும் அகற்றிவிட்டு, நமக்காக நியமிக்கப்பட்டிருக்கிற இந்த ஓட்டப் பந்தயத்தில், விடாமுயற்சியுடன் ஓடுவோம். 2 தீமோ 4:71 கொரி 9:24-27பிலி 2:16லூக் 21:34எபி 10:35-39பிலி 3:10-14கலா 5:71 பேது 2:1 விசுவாசத்தைத் தொடங்குகிறவரும், அதை நிறைவு செய்பவருமாகிய இயேசுவின்மேல் நமது கண்களை பதிய வைப்போம். அவர் தமக்கு முன்பாக இருந்த மகிழ்ச்சியை நினைத்து, அவமானத்தை பொருட்படுத்தாமல் சிலுவையை சகித்து இறைவனுடைய அரியணையின், வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். மீகா 7:71 பேது 3:181 பேது 2:23-24எபி 1:3பிலி 1:6எபே 5:2எபி 9:28பிலி 2:8-11 நீங்கள் மனந்தளர்ந்து சோர்ந்துபோகாதபடிக்கு பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக்குறித்துச் சிந்தியுங்கள். கலா 6:92 கொரி 4:16வெளி 2:31 கொரி 15:58எபி 12:2எபி 3:1யோவா 15:18-242 கொரி 4:1
இறைவன் தமது மக்களைத் திருத்துகிறார்
பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு, நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. 1 கொரி 10:13எபி 10:32-34வெளி 2:132 தீமோ 4:6-7எபி 12:2மத் 24:9வெளி 12:11வெளி 18:24 ஒரு தந்தை தனது மகனைக் கூப்பிடுவதைப்போல, உங்களைக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்: நீதி 3:11-12யோபு 5:17-18வெளி 3:191 கொரி 11:32சங் 94:12யாக் 1:122 கொரி 4:8-9சங் 118:18
“என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது,
அதை அலட்சியப்படுத்தாதே;
அவர் உன்னைக் கண்டிக்கும்போது, மனந்தளர்ந்து போகாதே.
ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். வெளி 3:19நீதி 3:12சங் 119:75நீதி 13:24சங் 94:122 சாமு 7:14எரே 10:24உபா 8:5
தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.” 1
கஷ்டங்கள் வரும்போது அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து, சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கிறான்? உபா 8:5நீதி 19:18நீதி 13:24நீதி 29:15நீதி 29:17நீதி 23:13-142 சாமு 7:14யோபு 34:31-32 பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால், அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல், முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள். எபி 12:61 பேது 5:9-10சங் 73:1சங் 73:14-15 மேலும், நம்மைத் தண்டித்துத் திருத்திய சரீரத்தின் தந்தைமார்கள் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கிறவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்? எண் 16:22எண் 27:16ஏசா 42:5யோவா 3:6யோபு 12:10சகரி 12:1யாத் 20:12ஏசா 38:16 நம்முடைய சரீரத்தின் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்; ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக, நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார். 2 பேது 1:4லேவி 11:44-45தீத் 2:14எபே 5:26-27எசேக் 36:25-27லேவி 19:2கொலோ 1:22எபே 4:24 நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் சந்தோஷமாயிருக்காமல், வேதனையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது, பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு நீதிநிறைந்த சமாதான அறுவடையை தரும். ரோம 5:3-52 கொரி 4:17எபி 12:5-61 பேது 1:6எபி 12:10சங் 118:18ஏசா 32:17யாக் 3:17-18
ஆகவே, தளர்ந்துபோன உங்கள் கைகளையும் பலவீனமான உங்கள் முழங்கால்களையும் பெலப்படுத்துங்கள். ஏசா 35:3எபி 12:31 தெச 5:14யோபு 4:3-4எசேக் 21:7எசேக் 7:17எபி 12:5தானி 5:6 முடமானவர்கள் முற்றும் ஊனமடைந்து போகாமல் குணமடையும்படி, உங்கள் பாதைகளை சரியான நிலைக்குக் கொண்டுசெல்லுங்கள். 2 நீதி 4:26-27கலா 6:1ஏசா 35:3ஏசா 35:6ஏசா 40:3-4யாக் 5:16யூதா 1:22-23எரே 31:8-9
எச்சரிப்பும் உற்சாகமும்
எல்லோருடனும் சமாதானமாய் வாழவும், உங்கள் நடத்தையில் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் எல்லா முயற்சியையும் செய்யுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவரும் கர்த்தரைக் காணமுடியாது. 2 கொரி 7:11 பேது 1:15-161 தெச 4:7மத் 5:8-91 பேது 3:11ரோம 12:18நீதி 16:7ரோம 14:19 இறைவனுடைய கிருபையை ஒருவரும் இழந்து போகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் குழப்பத்தை விளைவித்து, பலரைக் கறைப்படுத்தும் கசப்புணர்வு வேரூன்றி முளைக்க இடங்கொடாதேயுங்கள். எபி 3:12உபா 29:18கலா 5:42 கொரி 6:12 யோவா 1:81 கொரி 15:332 பேது 3:141 கொரி 5:6 உங்களில் யாரும் முறைகேடான பாலுறவில் ஈடுபடாதபடி கவனமாயிருங்கள். ஒருவேளைச் சாப்பாட்டிற்காக மூத்த மகனுக்குரிய தன் பிறப்புரிமையை விற்றுவிட்ட ஏசாவைப்போல், பக்தியில்லாதவனாய் இராதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆதி 25:31-341 கொரி 6:15-20எபி 13:4வெளி 22:15மாற் 7:211 தெச 4:3-7அப் 15:291 கொரி 10:8 நீங்கள் அறிந்திருக்கிறபடி, அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும், அவனுக்கு அந்நிலையை மாற்றமுடியவில்லை. நீதி 1:24-31மத் 25:11-12மத் 7:23எபி 10:26-29எபி 6:8ஆதி 27:30-41எபி 6:4-6எரே 6:30
பயமலையும் மகிழ்மலையும்
நீங்கள் இப்பொழுது வந்திருப்பது தொடக்கூடியதும், நெருப்பு பற்றி எரிகிறதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல. உபா 4:11யாத் 24:17உபா 5:22-26யாத் 20:182 கொரி 3:9யாத் 19:12-22ரோம 6:142 தீமோ 1:7 அங்கே எக்காளம் முழங்கியது, ஒரு குரல் வார்த்தைகளைப் பேசியது. கேட்டவர்கள் இன்னொருமுறை அந்தக் குரலைத் தாங்கள் கேட்கக்கூடாது என்று, மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். உபா 18:161 கொரி 15:52உபா 4:12யாத் 20:1-19உபா 4:33உபா 5:3-22யாத் 20:221 தெச 4:16 ஏனெனில், “அந்த மலையை ஒரு மிருகம் தொட்டாலும், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்” 3 என்று சொல்லப்பட்டக் கட்டளையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. யாத் 19:12-13உபா 33:2யாத் 19:16கலா 2:19கலா 3:10ரோம 3:19-20 அந்தக் காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததினாலே மோசே, “நான் பயத்தினால் நடுங்குகிறேன்” 4 என்று சொன்னான். யாத் 19:16உபா 9:19ஏசா 6:3-5யாத் 19:19சங் 119:120வெளி 1:17தானி 10:17தானி 10:8
ஆனால் நீங்களோ, இப்பொழுது ஜீவனுள்ள இறைவனின் நகரமாயிருக்கிற பரலோக எருசலேமாகிய சீயோன் மலைக்கே வந்திருக்கிறீர்கள். ஆயிரம் ஆயிரமான இறைத்தூதர்கள் மகிழ்ச்சியாய் சபை கூடுதலுக்கும், கலா 4:26பிலி 3:20சங் 48:2வெளி 14:1ஏசா 51:11எபி 11:10எபி 13:14யோவே 2:32 பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்ற முதற்பேறானவர்களின் திருச்சபைக்கும், எல்லா மனிதருக்கும் நீதிபதியாய் இருக்கிற இறைவனிடத்திற்கும், முழு நிறைவடைந்த நீதிமான்களின் ஆவிகளினிடத்திற்கும், யாக் 1:18எபி 11:40லூக் 10:20யாத் 4:22ஆதி 18:25வெளி 14:4வெளி 20:15சங் 94:2 புதிய உடன்படிக்கையின் நடுவரான இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தத்தைவிட மேன்மையான வார்த்தையைப்பேசும் இயேசுவின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினிடத்திற்குமே நீங்கள் வந்திருக்கிறீர்கள். எபி 9:15எபி 11:28எபி 8:6எபி 11:4ஆதி 4:10மத் 26:281 தீமோ 2:5மத் 23:35
ஆகவே உங்களிடம் பேசுகிற இறைவனை மறுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே அவர்களை எச்சரித்த, மோசேயுடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்கள் தப்பிப் போகவில்லை. அப்படியானால், பரலோகத்திலிருந்து எச்சரிக்கிறவருக்கு செவிகொடுக்க மறுத்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? எபி 8:5உபா 30:17எபி 2:1-3எபி 11:7நீதி 13:18சகரி 7:11யாத் 20:221 இராஜா 12:16 அக்காலத்தில் இறைவனுடைய குரல் பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “நான் இன்னும் ஒருமுறை பூமியை மட்டுமல்ல, வானத்தையும் சேர்த்து அசைப்பேன்” 5 என்று இறைவன் வாக்களித்துள்ளார். ஆகா 2:6-7ஏசா 13:13யாத் 19:18ஏசா 2:19யோவே 3:16ஆப 3:10எபி 12:27சங் 114:6-7 “இன்னொருமுறை” என்ற வார்த்தை, அசைக்கப்படக் கூடிய படைப்புகள் அகற்றப்படும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. இதனால், அசைக்கப்பட முடியாதவை தொடர்ந்து நிலைத்திருக்கும். 1 கொரி 7:31மத் 24:35வெளி 21:12 பேது 3:10-11வெளி 11:15எசேக் 21:27சங் 102:26-27
ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகிறவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், பயபக்தியுடன், ஆராதிப்போம். ரோம 12:1-2சங் 2:11எபி 13:15தானி 2:44எபி 4:16எபி 10:22-23வெளி 1:61 பேது 2:5 ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார். 6 உபா 4:24உபா 9:32 தெச 1:8எபி 10:27ஏசா 66:15யாத் 24:17தானி 7:9சங் 97:3