யோபு 5

Job 5

“நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்? யோபு 15:15யோபு 15:8-10யோபு 4:18ஏசா 41:21-23எபே 1:1எபி 12:1ஏசா 41:1உபா 33:2-3

பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்?

கோபம் மூடனைக் கொல்லும், பிரச 7:91 சாமு 18:8-9ஆதி 30:1ஓசி 7:11யோபு 18:4நீதி 12:16சங் 107:17சங் 14:1

பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும்.

மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன், சங் 73:18-20சங் 92:7அப் 1:20உபா 27:15-26எரே 12:1-3யோபு 24:18யோபு 27:8சங் 37:35-36

ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.

அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள், சங் 127:5யோபு 18:16-19சங் 119:155ஆமோ 5:12யாத் 20:5யோபு 1:19யோபு 10:7யோபு 27:14

வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள்.

பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை புலம் 2:16ஓசி 8:7எரே 51:44எரே 51:342 நாளாக 33:11உபா 28:33உபா 28:51ஏசா 62:8

முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்;

பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர்.

ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை; ஏசா 45:71 சாமு 6:9யோபு 34:29சங் 90:7ஆமோ 3:6உபா 32:27எபி 12:15ஓசி 10:4

தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.

தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, யோபு 14:1ஆதி 3:17-19பிரச 5:15-171 கொரி 10:13பிரச 1:8பிரச 2:22சங் 90:8-9

மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.

“ஆனாலும் நான், இறைவனைத் தேடி, சங் 50:15யோபு 22:21சங் 37:52 நாளாக 33:12-131 பேது 4:191 பேது 2:232 தீமோ 1:12யோபு 22:27

அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.

அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், சங் 40:5யோபு 9:10சங் 72:18சங் 86:10யோபு 11:7-9யோபு 37:5ஏசா 40:28யோபு 26:5-14

கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.

பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; அப் 14:17எரே 5:24எரே 14:22சங் 147:8சங் 65:9-11ஆமோ 4:7எரே 10:13யோபு 28:26

நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.

அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி, சங் 113:71 சாமு 2:7-8லூக் 1:52-53லூக் 6:21சங் 107:41உபா 33:27எசேக் 17:24யாக் 4:6-10

துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.

அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, சங் 21:11சங் 33:10-11ஏசா 8:10நீதி 21:30சங் 37:17அப் 12:11ஏசா 37:36நெகே 4:15

அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.

இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், 1 கொரி 3:19சங் 9:15-161 கொரி 1:19-20லூக் 1:51சங் 7:15-16எஸ்த 9:25சங் 18:26சங் 35:7-8

தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.

பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்; யோபு 12:25உபா 28:29ஏசா 59:10நீதி 4:19ஆமோ 8:9

இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.

இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து, சங் 35:10சங் 140:12சங் 109:31யோபு 4:10சங் 10:14சங் 10:17சங் 107:41சங் 72:4

வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.

ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, சங் 107:421 சாமு 2:8-9சங் 63:11யாத் 11:7ஏசா 14:32சங் 9:18ரோம 3:19சகரி 9:12

அநீதி தன் வாயை மூடும்.

“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; யாக் 1:12சங் 94:12நீதி 3:11-12வெளி 3:19யாக் 5:11எபி 12:5-11எரே 31:18

எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.

அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; ஓசி 6:1உபா 32:39ஏசா 30:26சங் 147:31 சாமு 2:6

அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.

ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; சங் 34:191 கொரி 10:13சங் 91:3-10நீதி 24:162 பேது 2:92 கொரி 1:8

அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.

பஞ்சத்தில் சாவிலிருந்தும் சங் 33:19ஓசி 13:14ஆதி 45:7சங் 37:191 இராஜா 17:6நீதி 10:3ஆப 3:17சங் 27:3

யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.

தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்; சங் 31:20சங் 91:5-7நீதி 12:18எரே 18:18சங் 55:21ஏசா 54:17யாக் 3:5-8சங் 57:4

பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய்.

அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; எசேக் 34:25ஏசா 35:9சங் 91:13ஓசி 2:18ஏசா 65:252இராஜா 19:21

நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.

வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், லேவி 26:6தானி 6:22ஏசா 11:6-9சங் 91:12-13ஓசி 2:18எசேக் 14:15-16ரோம 8:38-39

காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.

உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; சங் 121:7-8சங் 91:10யோபு 8:6உபா 28:6ஏசா 4:5-6யோபு 18:21யோபு 18:6சங் 107:4

உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.

உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய். சங் 112:2சங் 72:16உபா 28:4ஆதி 15:5யோபு 42:13-16லேவி 26:9சங் 127:3-5சங் 128:3-6

உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள்.

ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், யோபு 42:16-17நீதி 9:11சங் 91:16ஆதி 15:15நீதி 10:27ஆதி 25:8

உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.

“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். சங் 111:2நீதி 9:12யோபு 32:11-12உபா 10:13நீதி 2:3-5யோபு 12:2யோபு 15:17யோபு 15:9-10

நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”