ஏசாயா 41

Isaiah 41

இஸ்ரயேலரின் துணைவர்

“தீவுகளே, நீங்கள் எனக்குமுன் மவுனமாயிருங்கள்! ஏசா 1:18ஆப 2:20சகரி 2:13சங் 46:10ஏசா 41:6-7ஏசா 11:11ஏசா 34:1யோபு 38:3

நாடுகள் தமது பெலனைப் புதுப்பிக்கட்டும்!

அவர்கள் முன்வந்து பேசட்டும்;

நாம் எல்லோரும் நியாயந்தீர்க்கும் இடத்தில் ஒன்று கூடுவோம்.

“கிழக்கிலிருந்து ஒருவனை எழுப்பி, ஏசா 45:12 சாமு 22:43எஸ்றா 1:2ஏசா 40:24ஏசா 41:25ஏசா 46:112 நாளாக 36:23ஏசா 45:13

நேர்மையுடன் தனக்குப் பணிசெய்ய அவனை அழைத்தவர் யார்? 1

அவர் நாடுகளை அவனிடம் ஒப்படைத்து,

அரசர்களை அவன் முன்னே அடக்குகிறார்.

அவனோ அவர்களைத் தன் வாளினால் தூசியாக்கி,

தன் வில்லினால் காற்றில் பறக்கும் பதராக்குகிறான்.

அவன் தனக்குத் தீங்கு நேராமல், ஏசா 57:2யோபு 5:24

தான் முன்னர் போகாத வழியாக அவர்களைத் துரத்திச் செல்கிறான்.

இதைச் செய்தது யார்? ஆதியிலிருந்து தலைமுறைகளை அழைத்து, ஏசா 48:12வெளி 22:13வெளி 1:17ஏசா 44:6-7ஏசா 46:10ஏசா 41:26ஏசா 43:10வெளி 1:8

இதை நிறைவேற்றியது யார்?

முந்தினவராய் இருப்பவர் யெகோவாவாகிய நானே,

பிந்தினவராய் இருப்பதும் நானே.”

தீவுகள் அதைக்கண்டு பயப்படுகின்றன; எசேக் 26:15-16யோசு 5:1சங் 65:8சங் 66:3சங் 67:7யாத் 15:14ஆதி 10:5யோசு 2:10

பூமியின் எல்லைகள் நடுங்குகின்றன.

அவர்கள் நெருங்கி முன்னேறி வந்து,

ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து, 1 சாமு 4:7-9தானி 3:1-7ஏசா 35:4ஏசா 40:19ஏசா 44:12அப் 19:24-28யோவே 3:9-111 சாமு 5:3-5

“திடன்கொள்!” என்று தம் அடுத்தவருக்கு சொல்கிறார்கள்.

கைவினைஞன் கொல்லனை ஊக்குவிக்கிறான், ஏசா 40:19-20தானி 3:1-7ஏசா 44:12-15ஏசா 46:6-7நியாயாதி 18:17-18நியாயாதி 18:24எரே 10:3-5எரே 10:9

சுத்தியலால் தட்டி மிருதுவாக்குகிறவன்

பட்டறையில் இரும்பை வைத்து அடிப்பவனை உற்சாகப்படுத்தி,

“அது நன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்லி,

அது அசையாதபடி ஆணிகளால் அடித்து இறுக்குகிறான்.

“ஆனால் நீயோ, இஸ்ரயேலே, என் அடியவனே, யாக் 2:232 நாளாக 20:7உபா 14:2யாத் 19:5-6யோவா 15:14-15ஏசா 44:21ஏசா 51:2ஏசா 29:22

நான் தெரிந்தெடுத்த யாக்கோபே,

என் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே,

நான் பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை எடுத்து, 1 சாமு 12:22சங் 94:14உபா 7:6-7யாக் 2:5யோசு 24:2-41 கொரி 1:26-29ரோம 11:1-2ஏசா 41:2

அதன் தொலைதூரத்திலிருந்து உன்னை அழைத்தேன்.

நான், ‘நீ என் ஊழியக்காரன்’;

நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னைப் புறக்கணிக்கவில்லை என்றேன்.

ஆகையால் பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; யோசு 1:9ஏசா 43:1-2ரோம 8:31உபா 31:6-8பிலி 4:13ஏசா 40:29-312 கொரி 12:9ஏசா 41:13-14

கலங்காதே, நானே உன் இறைவன்.

நான் உன்னைப் பெலப்படுத்தி, உனக்கு உதவி செய்வேன்;

எனது நீதியின் வலது கரத்தால் நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன்.

“கடுங்கோபத்தோடு உன்னை எதிர்ப்பவர்கள் யாவரும் யாத் 23:22ஏசா 45:24வெளி 3:9அப் 16:39ஏசா 54:17அப் 13:8-11தானி 4:35யாத் 11:8

நிச்சயமாக வெட்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்படுவார்கள்.

உன்னை எதிர்ப்பவர்கள் இருந்த இடம்

தெரியாமலேயே அழிந்துபோவார்கள்.

உனது பகைவரைத் தேடினாலும் சங் 37:35-36யோபு 20:7-9ஏசா 17:14

நீ காணமாட்டாய்,

உன்னை எதிர்த்துப் போரிடும் யாவரும்

இருந்த இடம் தெரியாமலே போய்விடுவார்கள்.

ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன். ஏசா 41:10சங் 73:23சங் 63:8சங் 109:31ஏசா 42:62 தீமோ 4:17ஏசா 45:1உபா 33:26-29

நானே உனது வலதுகையைப் பிடித்து,

பயப்படாதே,

உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர்.

பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே, ஏசா 43:14ஏசா 54:5சங் 22:6எரே 50:34யோபு 25:6சங் 19:14யோபு 19:25கலா 3:13

இஸ்ரயேல் என்னும் சிறுகூட்டமே,

நான், நானே உனக்கு உதவி செய்வேன்” என்று,

உனது மீட்பரும் இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா அறிவிக்கிறார்.

“இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன், மீகா 4:132 கொரி 10:4-5சகரி 4:7ஆப 3:12ஏசா 21:10ஏசா 28:27சங் 18:42

அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி.

நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்;

நீ குன்றுகளைப் பதராக்குவாய்.

நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய், எரே 51:2ஏசா 45:24-25ஏசா 61:10-11ஆப 3:18எரே 15:7எரே 9:23-241 கொரி 1:30-311 சாமு 2:1-2

புயல்காற்று அவைகளை வாரிக்கொண்டு போகும்.

ஆனால் நீயோ, யெகோவாவில் அகமகிழ்ந்து,

இஸ்ரயேலின் பரிசுத்தரில் மேன்மை அடைவாய்.

“ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்; ஏசா 55:1ஏசா 44:3ஏசா 30:19மத் 5:6ஏசா 42:16ஏசா 61:1சங் 34:6சங் 72:12-13

ஆனால் அங்கு ஒன்றுமிராது.

அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும்.

ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்;

இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.

நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும், ஏசா 35:6-7சங் 107:35ஏசா 58:11ஏசா 30:25எசேக் 47:1-8ஏசா 43:19-20வெளி 7:17ஏசா 44:3

பள்ளத்தாக்குகளில் நீரூற்றுக்களையும் உண்டாக்குவேன்.

பாலைவனத்தை நீர்த்தடாகமாகவும்,

வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுவேன்.

நான் பாலைவனத்திலே கேதுருக்களையும், ஏசா 55:13ஏசா 37:31-32ஏசா 35:1ஏசா 60:13ஏசா 60:21ஏசா 61:11எசேக் 17:22-24ஏசா 27:6

சித்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நாட்டுவேன்.

பாழ்நிலங்களில் தேவதாரு மரங்களையும், சவுக்கு மரங்களையும்,

புன்னை மரங்களையும் நான் சேர்த்து நாட்டுவேன்.

யெகோவாவின் கரம்தான் இப்படிச் செய்தது, யோபு 12:9ஏசா 43:21ஏசா 44:23சங் 109:27யாத் 9:162 தெச 1:10ஏசா 43:7-13ஏசா 45:6-8

இஸ்ரயேலின் பரிசுத்தரே இவற்றை உண்டாக்கினார் என்று,

மக்கள் பார்த்து அறிந்துகொள்ளவும்,

சிந்தித்து விளங்கிக்கொள்ளவுமே இப்படிச் செய்வேன்.

“உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்” யோபு 23:3-4யோபு 38:3மீகா 6:1-2யோபு 31:37யோபு 40:7-9

என்று யெகோவா சொல்லுகிறார்.

“உங்களுடைய நியாயங்களை எடுத்துக் கூறுங்கள்”

என்று யாக்கோபின் அரசர் சொல்கிறார்.

“உங்களுடைய விக்கிரகங்களைக் கொண்டுவாருங்கள், ஏசா 45:21ஏசா 46:10ஏசா 44:7ஏசா 48:14ஏசா 42:9ஏசா 43:9-12யோவா 13:19யோவா 16:14

இனி நடக்கப் போகிறதை அவை தெரிவிக்கட்டும்.

முன்பு நடந்தவற்றை அவை எங்களுக்குச் சொல்லட்டும்,

அப்பொழுது நாம் அவைகளைச் சிந்தித்து,

அவைகளின் முடிவுகளை அறிவோம்,

அல்லது இனி நடக்கப்போவதை அவை தெரிவிக்கட்டும்.

நீங்கள்தான் தெய்வங்கள் என்று நாம் அறியும்படி, ஏசா 42:9யோவா 13:19எரே 10:5ஏசா 44:7-8ஏசா 45:3ஏசா 45:7-8ஏசா 46:7ஏசா 46:9-10

இனி நடக்கப்போவதை எங்களுக்குத் தெரிவியுங்கள்;

நல்லதோ, கெட்டதோ எதையேனும் செய்யுங்கள்.

அப்பொழுது நாங்கள் கலங்கி, பயத்தால் நிரப்பப்படுவோம்.

ஆனால் நீங்களோ, வெறுமையிலும் வெறுமையானவர்கள். 1 கொரி 8:4சங் 115:8ஏசா 41:29எரே 10:14எரே 10:8உபா 27:15உபா 7:26ஏசா 37:19

உங்கள் செயல்களெல்லாம் முற்றிலும் பயனற்றவை,

உங்களைத் தெரிந்தெடுப்பவன் அருவருப்பானவன்.

“நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பப் பண்ணியிருக்கிறேன்; அவன் வருகிறான். ஏசா 41:22 சாமு 22:43ஏசா 10:6ஏசா 44:28ஏசா 46:10-11மீகா 7:10சகரி 10:5எஸ்றா 1:2-3

அவன் சூரிய உதயத்தில் இருந்து என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுகிறான்.

அவன் ஆளுநர்களை சுண்ணாம்புக் கலவையைப்போல் மிதிக்கிறான்;

குயவன் களிமண்ணை மிதித்துத் துவைப்பதுபோல் அவர்களை மிதிக்கிறான்.

இதை நாம் அறியும்படியாக ஆதியில் சொன்னது யார்? ஏசா 41:22ஏசா 44:7ஏசா 45:21ஆப 2:18-20ஏசா 43:9

அல்லது, ‘அவர் சொன்னது சரி’ என்று நாம் சொல்லும்படியாக இதை முன்பே கூறியது யார்?

இதைக்குறித்து ஒருவருமே சொல்லவில்லை;

ஒருவருமே முன்னறிவிக்கவுமில்லை,

உங்களிடமிருந்து ஒரு வார்த்தையையும் கேட்டவர்களும் இல்லை.

‘இதோ, அவர்கள் வருகிறார்கள்’ என்று ஏசா 40:9ஏசா 52:7ஏசா 44:28ஏசா 48:3நாகூ 1:15எஸ்றா 1:1-2ஏசா 41:4ஏசா 43:10

நானே சீயோனிடம் முதன் முதலாகச் சொன்னேன்.

நானே நற்செய்தியின் தூதுவனை எருசலேமுக்குக் கொடுத்தேன்.

தெய்வங்களுக்குள்ளே நான் பார்த்தேன், ஆனால் அங்கு ஒருவருமில்லை. ஏசா 63:5தானி 2:10-11தானி 4:7-8தானி 5:8ஏசா 40:13-14ஏசா 50:2ஏசா 59:16

ஆலோசனை கூற அவர்களில் ஒருவரும் இல்லை,

நான் கேட்கும்போது எனக்கு விடையளிக்கவும் ஒருவரும் இல்லை.

இதோ, இவர்கள் எல்லோருமே மாயை! எரே 5:13ஏசா 41:24ஆப 2:18ஏசா 44:9-20எரே 10:2-16சங் 115:4-8சங் 135:15-18

அவர்களின் செயல்கள் வீணானவை;

அவர்களின் உருவச்சிலைகள் காற்றும் வெறுமையுமே.