ஏசாயா 43

Isaiah 43

இஸ்ரயேலின் ஒரே மீட்பர்

இப்போது யெகோவா சொல்வது இதுவே: சங் 100:3ஏசா 43:7சகரி 13:9ஏசா 54:4-5தீத் 2:14வெளி 5:9ஏசா 45:3-4எபே 2:10

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்,

இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது,

“பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்;

நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன்.

நீ தண்ணீரைக் கடக்கும்போது, ஏசா 41:10யோசு 1:9சங் 66:12சங் 23:4தானி 3:25-272 கொரி 12:9-10சங் 91:151 பேது 4:12-13

நான் உன்னுடன் இருப்பேன்;

நீ ஆறுகளைக் கடக்கும்போது,

அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது;

நீ நெருப்பில் நடக்கும்போதும்

எரிந்து போகமாட்டாய்.

நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.

ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா, ஏசா 60:16ஏசா 45:152 நாளாக 14:9-14ஏசா 49:26யாத் 20:2நீதி 21:18ஏசா 45:21யூதா 1:25

இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்;

நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும்,

உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன்.

நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்; உபா 7:6-81 பேது 2:9எரே 31:3வெளி 3:9ஆதி 12:2ஓசி 11:1யோவா 16:27உபா 32:9-14

நான் உன்னில் அன்பாயிருக்கிறபடியினால்,

உனக்குப் பதிலாக மனிதரையும்,

உன் உயிருக்கு மாற்றீடாக நாடுகளையும் கொடுப்பேன்.

பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; உபா 30:3லூக் 13:29எசேக் 39:25-29ஏசா 49:12ஏசா 44:2ஏசா 60:1-11அப் 18:9-10எசேக் 36:24-27

நான் கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கொண்டுவருவேன்,

மேற்கிலிருந்து உங்களை ஒன்றுசேர்ப்பேன்.

நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும், 2 கொரி 6:17-18எரே 3:14எரே 3:18-19கலா 3:26-29ஓசி 1:10-11ரோம 9:7-8ஏசா 18:7சங் 107:3

தெற்கைப் பார்த்து, ‘அவர்களை பிடித்து வைத்துக்கொள்ளாதே’ என்றும் சொல்வேன்.

எனது மகன்களைத் தூரத்திலிருந்தும்,

எனது மகள்களைப் பூமியின் கடைசிகளிலிருந்தும் கொண்டுவாருங்கள்.

என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள். எபே 2:10ஏசா 43:21எபே 1:121 பேது 2:9ரோம 9:23ஏசா 62:2-5ஏசா 43:1சங் 100:3

இவர்களை நானே என் மகிமைக்காகப் படைத்தேன்.

இவர்களை நானே உருவாக்கி உண்டாக்கினேன்.”

கண்களிருந்தும் குருடராயும், ஏசா 6:9எசேக் 12:22 கொரி 4:4-6உபா 29:2-4ஏசா 42:18-20எரே 5:21ஏசா 44:18-20

காதுகளிருந்தும் செவிடராயும் இருப்போரை வெளியே கொண்டுவாருங்கள்.

எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள், ஏசா 44:7-9ஏசா 46:10ஏசா 41:21-26ஏசா 41:1ஏசா 43:26யோவே 3:11சங் 50:11 இராஜா 18:21-24

சகல மக்களும் சபையாய் கூடுகிறார்கள்;

அவர்களுடைய தேவர்களில் இதை முன்னறிவித்தவர் யார்?

இந்த பூர்வகாரியங்களை தெரிவித்தவர் யார்?

அவர்கள் தாங்கள் சரியென நிரூபிப்பதற்குத் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவரட்டும்;

அப்பொழுது மற்றவர்கள் அதைக்கேட்டு, “அது உண்மை” என்று சொல்லட்டும்.

“நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். ஏசா 41:4ஏசா 45:6ஏசா 46:8-9ஏசா 43:12அப் 1:8ஏசா 40:21-22ஏசா 44:6-8பிலி 2:7

“நீங்கள், நான் தெரிந்துகொண்ட என் ஊழியராய் இருக்கிறீர்கள்.

அதனால், நீங்கள் என்னை அறிந்து விசுவாசித்து,

நானே அவரென்று விளங்கிக்கொள்ளுவீர்கள்.

எனக்குமுன் ஒரு தெய்வம் உருவாக்கப்படவும் இல்லை,

எனக்குப்பின் எதுவும் இருக்கப்போவதுமில்லை.

நான், நானே யெகோவா, ஓசி 13:4ஏசா 44:6ஏசா 43:3ஏசா 45:21-22அப் 4:12வெளி 7:10-12ஏசா 12:2உபா 6:4

என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை.

நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்; உபா 32:12ஏசா 44:8சங் 81:9-10ஏசா 43:10ஏசா 37:20ஏசா 37:7ஏசா 46:9-10ஏசா 48:4-7

உங்கள் மத்தியிலிருக்கும் எந்த அந்நிய தெய்வமுமல்ல.

நானே இறைவன் என்பதற்கு நீங்களே எனது சாட்சிகள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

“ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர். ஏசா 14:27ஏசா 46:10சங் 90:2எபி 13:8யோவா 8:581 தீமோ 1:17உபா 32:39யோபு 9:12

எனது கரத்திலிருந்து மக்களை விடுவித்துக்கொள்ள யாராலும் முடியாது.

நான் செயலாற்றும்போது அதை மாற்ற யாரால் முடியும்?”

இறைவனின் இரக்கம்

உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய ஏசா 23:13ஏசா 44:6எரே 51:24ஏசா 44:24எசேக் 27:29-36ஏசா 43:1ஏசா 43:3-4ஏசா 54:5-8

யெகோவா கூறுவது இதுவே:

“உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி,

பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்;

அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன்.

நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்; ஆப 1:12ஏசா 43:1ஏசா 48:17எரே 51:5மத் 25:34சங் 74:12வெளி 3:7ஏசா 30:11

இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.”

கடலிலே ஒரு வழியையும், ஏசா 43:2ஏசா 51:10சங் 77:19எரே 31:35ஏசா 51:15ஏசா 63:11-13நெகே 9:11சங் 106:9

பெரு வெள்ளத்திலே

ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே;

தேர்களையும் குதிரைகளையும், யாத் 14:4-9ஏசா 1:31எசேக் 38:8-18சங் 118:12சங் 76:5-6வெளி 20:8-9யாத் 14:23-28யாத் 15:4

இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும்,

அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து,

திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:

“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்; ஏசா 65:172 கொரி 3:101 நாளாக 16:12உபா 8:2ஏசா 46:9எரே 16:14-15உபா 7:18எரே 23:7-8

கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்.

இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! ஏசா 48:6ஏசா 42:92 கொரி 5:17வெளி 21:5ஏசா 41:18லூக் 3:4-5ஏசா 35:6-10எரே 31:22

அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா?

நான் பாலைவனத்தில் பாதையையும்,

பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.

நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு ஏசா 41:17ஏசா 48:21ஏசா 49:101 பேது 2:9ஏசா 13:22யோவா 4:14வெளி 17:141 நாளாக 16:13

பாலைவனத்தில் தண்ணீரையும்,

பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன்.

அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும்

என்னை கனம்பண்ணும்.

இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி, 1 பேது 2:9எபி 13:151 கொரி 6:19-20சங் 102:18லூக் 1:74-751 கொரி 10:31ஏசா 61:3கொலோ 1:16

எனக்காக நானே உருவாக்கினேன்.

“அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை. மீகா 6:3மல்கி 3:14மல்கி 1:13யாக் 4:2-3எரே 10:25தானி 9:13ஓசி 14:1-2ஓசி 7:10-14

இஸ்ரயேலே, நீ எனக்காகப் பணிசெய்து களைக்கவுமில்லை.

நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை; ஆமோ 5:25சகரி 7:5-6ஆமோ 5:21-22ஏசா 66:3எரே 7:22லேவி 2:1மல்கி 1:13-14மல்கி 1:6-8

உங்கள் பலிகளால் என்னைக் கனம்பண்ணவும் இல்லை.

நானோ எனக்குத் தானிய காணிக்கைகளைக் கொடுக்கும்படி

உங்களைக் கஷ்டப்படுத்தவும் இல்லை;

தூபங்காட்டும்படி நான் உங்களை வற்புறுத்தி சலிப்படையச் செய்யவுமில்லை.

நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை; ஏசா 7:13எரே 6:20ஏசா 1:14எசேக் 6:9ஏசா 63:10மல்கி 2:13-17சங் 50:9-13சங் 95:10

உங்கள் பலிகளின் கொழுப்புகளை எனக்குத் தாராளமாய் தரவுமில்லை.

ஆனால், உங்கள் பாவங்களினால் என்னைப் பாரமடையச் செய்திருக்கிறீர்கள்;

உங்கள் குற்றங்களினால் என்னைச் சலிப்படையச் செய்திருக்கிறீர்கள்.

“நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்; எபி 8:12மீகா 7:18-19எபி 10:17எரே 31:34ஏசா 1:18ஏசா 44:22சங் 25:7சங் 79:8-9

நான் உங்கள் பாவங்களை இனியொருபோதும் நினைவில் வைப்பதில்லை,

இதை நான் எனக்காகவே செய்கிறேன்.

கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள், ஏசா 1:18ஏசா 43:9ரோம 8:33சங் 141:2எரே 2:21-35ஏசா 41:1யோபு 40:7-8ரோம 10:3

நாம் இந்த காரியத்தைப்பற்றி ஒன்றுகூடி வாதாடுவோம்;

நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கு ஆதாரங்களைச் சொல்லுங்கள்.

உங்கள் 1 ஆதிமுற்பிதா பாவம் செய்தான்; ஏசா 28:7எரே 5:31எசேக் 16:3எசேக் 22:25-28புலம் 4:13-14அப் 5:17-18அப் 7:51ஓசி 4:6

உங்களுக்காகப் பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள்.

ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்; எரே 24:9ஏசா 65:15சகரி 8:131 தெச 2:16உபா 28:15-20ஏசா 47:6புலம் 2:2சங் 79:4

யாக்கோபை அழிவுக்கும்,

இஸ்ரயேலை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன்.