வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; 1 கொரி 10:4சங் 81:12 சாமு 22:47சங் 150:6சங் 96:1-21 நாளாக 16:9யாத் 15:21சங் 47:6-7
நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.
நன்றியுடன் அவர்முன் வருவோம்; எபே 5:19சங் 100:4எரே 31:12-13சங் 105:2மீகா 6:6சங் 100:2சங் 17:13யாக் 5:13
இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; சங் 96:4எரே 10:6-7சங் 145:3சங் 135:5சங் 97:9யாத் 18:11மத் 5:35சங் 47:2
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார்.
பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; சங் 135:6ஆப 3:6ஆப 3:10நாகூ 1:5யோபு 9:5மீகா 1:4யோபு 11:10சங் 65:6
மலை உச்சிகளும் அவருக்கே உரியவை.
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; ஆதி 1:9-10நீதி 8:29எரே 5:22யோபு 38:10-11யோனா 1:9சங் 146:6சங் 33:7நீதி 8:26
வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக பிலி 2:10சங் 100:3எபே 3:14சங் 95:11 கொரி 6:20தானி 6:10ஏசா 54:52 நாளாக 6:13
நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்;
நாம் முழங்காலிடுவோம்.
அவரே நம் இறைவன்; எபி 4:7எபி 3:15வெளி 3:20எபி 3:7-11யோவா 10:14-16சங் 48:141 பேது 2:25சங் 74:1
நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும்
அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம்.
இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,
“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், யாத் 17:7எபி 3:8-9எண் 20:13எண் 14:11எபி 3:15-19எண் 14:221 சாமு 6:6உபா 6:16
பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும்,
உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்; எண் 14:221 கொரி 10:9சங் 78:56சங் 78:17-18சங் 78:40-41யோவா 15:24மத் 11:20-22
நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள்.
நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; எபி 3:17எபி 3:9-10நீதி 1:22-29அப் 13:18ஏசா 63:17அப் 7:36உபா 2:14-16எரே 9:6
‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும்,
என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன்.
எனவே கோபங்கொண்டு, எபி 4:3எண் 14:23எபி 3:11எபி 4:5எபி 3:18எரே 6:16மத் 11:28-29உபா 1:34-35
‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று,
ஆணையிட்டு அறிவித்தேன்.”