சங்கீதங்கள் 102

Psalms 102
சங்கீதம் 102

பலவீனமடைந்து யெகோவாவுக்கு முன்பாக புலம்பலை ஊற்றும் ஒரு சிறுமைப்பட்டவனின் மன்றாட்டு.

யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; சங் 18:6சங் 130:1-2யாத் 2:23சங் 142:2-3சங் 61:2சங் 39:12எபி 5:7லூக் 22:44

உதவிக்காக என் கதறுதல் உம்மிடம் வந்துசேர்வதாக.

நான் துன்பத்தில் இருக்கும்போது சங் 69:17சங் 27:9ஏசா 8:17சங் 70:11 கொரி 10:13அப் 12:5-25சங் 104:29சங் 143:7

உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;

நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி,

விரைவாய் எனக்குப் பதிலளியும்.

என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன; யாக் 4:14புலம் 1:13சங் 31:10யோபு 30:30சங் 37:20சங் 22:14-15புலம் 3:4சங் 119:83

என் எலும்புகள் தகதகக்கும் தணல்கள்போல் எரிகின்றன.

என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று; ஏசா 40:7சங் 37:21 சாமு 1:7-8அப் 9:9எஸ்றா 10:6மத் 26:37-38சங் 77:32 சாமு 12:17

நான் என் உணவைச் சாப்பிடவும் மறக்கிறேன்.

என் உரத்த பெருமூச்சினால் யோபு 19:20நீதி 17:22புலம் 4:8சங் 32:3-4சங் 38:8-10சங் 6:8சங் 6:6

நான் எலும்பும் தோலுமானேன்;

நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்; ஏசா 38:14செப்ப 2:14வெளி 18:2ஏசா 34:11-15யோபு 30:29-30மீகா 1:8

பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன்.

நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்; சங் 77:4புலம் 3:28-30மாற் 14:33-37உபா 28:66-67யோபு 7:13-16சங் 130:6சங் 22:2சங் 38:11

நான் வீட்டுக்கூரைமேல் தனித்திருக்கும் ஒரு பறவைபோல் ஆனேன்.

என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்; அப் 26:11அப் 23:12-35ஏசா 65:15சங் 69:9-10அப் 7:54சங் 2:1சங் 31:11-13சங் 69:20

எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள்.

நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு, சங் 42:3யோபு 3:24சங் 80:5ஏசா 44:20புலம் 3:15-16புலம் 3:48-49மீகா 1:10மீகா 7:17

என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன்.

உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன். சங் 38:32 கொரி 4:9புலம் 3:39-42சங் 147:6சங் 90:7-9ரோம 3:191 சாமு 2:7-82 நாளாக 25:8

நீர் என்னை தூக்கி, ஒரு பக்கமாய் வைத்துவிட்டீர்.

என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது; யோபு 14:2சங் 109:231 பேது 1:24சங் 144:4ஏசா 40:6-8யாக் 1:10யாக் 4:14பிரச 6:12

நான் புல்லைப்போல் வாடிப் போகின்றேன்.

ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்; சங் 135:13யாத் 3:15எபி 13:8புலம் 5:19சங் 9:7வெளி 1:17-18ஏசா 44:6ஏசா 60:15

உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.

நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்; கலா 4:4ஏசா 40:2ஏசா 60:1சங் 44:26சகரி 2:10-12சங் 69:35-362 பேது 3:8ஏசா 60:10-14

இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம்,

நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது.

சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன; நெகே 4:2எஸ்றா 1:5எஸ்றா 3:1-3எஸ்றா 7:27நெகே 1:3நெகே 2:17நெகே 2:3நெகே 4:10

அதின் தூசியின்மேலும் அவர்கள் அனுதாபம் கொள்கிறார்கள்.

நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்; 1 இராஜா 8:43சங் 138:4ஏசா 60:3-22சங் 86:9சகரி 8:20-23சங் 67:2-4சங் 68:31-32சங் 72:11

பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது மகிமைக்கு மரியாதை செலுத்துவார்கள்.

யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி, ஏசா 60:1-2எரே 33:7சங் 147:2சகரி 2:6-13ஏசா 14:26ஏசா 2:2-3ஏசா 60:7ஏசா 61:3

தம் மகிமையில் காட்சியளிப்பார்.

ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்; நெகே 1:6சங் 22:24எரே 29:11-14சங் 72:12சங் 9:18உபா 32:36உபா 4:29தானி 9:3-21

அவர்களுடைய வேண்டுதல்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.

இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, சங் 22:30-31ரோம 15:4ஏசா 43:21சங் 78:4-61 பேது 2:9-102 பேது 1:15எபே 2:101 கொரி 10:11

இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக:

“யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்; உபா 26:15சங் 14:21 இராஜா 8:391 இராஜா 8:432 நாளாக 16:9எபி 8:1-2எபி 9:23-24யோபு 22:12

அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி,

அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும், சங் 79:11சங் 146:7யாத் 3:7ஏசா 61:1-32 நாளாக 33:11-132இராஜா 13:22-23எபே 2:2-3ஏசா 14:17

மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்.”

ஆகையால் மக்களும் அரசுகளும் சங் 22:221 பேது 2:9எபே 3:21ஏசா 51:11சங் 51:14-15சங் 79:13சங் 9:13-14எபே 2:4-7

யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது,

சீயோனில் யெகோவாவினுடைய பெயரும் மத் 24:14சகரி 8:20-23ஏசா 49:22-23ஏசா 60:3-22சங் 22:27சங் 72:8-11ரோம 15:19ஆதி 49:10

எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும்.

யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; 1 தீமோ 4:1-32 தெச 2:3-122 தீமோ 3:1-17யோபு 21:21சங் 89:38-47வெளி 11:2-19வெளி 12:13-17

என் நாட்களையும் குறுகச்செய்தார்.

அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது, ஆப 1:12சங் 39:13ஏசா 38:10-22சங் 102:12வெளி 1:8யோபு 36:26சங் 9:7சங் 90:1-2

“இறைவனே, என் வாழ்நாட்களின் இடையிலேயே என்னை எடுத்துக் கொள்ளாதிரும்;

உமது வருடங்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கின்றனவே.

நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; ஆதி 1:1யாத் 20:11எபி 1:10-12எரே 32:17எபி 3:3-4ஆதி 2:1யோபு 38:4-7நீதி 8:23-36

வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன.

அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; ஏசா 51:6மத் 24:35லூக் 21:33ஏசா 34:4வெளி 20:11ஏசா 66:22சங் 102:12வெளி 21:1

அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்;

உடையைப்போல் நீர் அவைகளை மாற்றுவீர்;

அவைகளெல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.

நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர், எபி 13:8யாக் 1:17மல்கி 3:6வெளி 1:8யோபு 36:26சங் 90:4வெளி 1:17-18யோவா 8:58

உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.

உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்; சங் 69:35-36சங் 45:16-17சங் 89:4சங் 90:16-17ஏசா 53:10ஏசா 59:20-21ஏசா 65:22ஏசா 66:22

அவர்களுடைய சந்ததியும் உமக்கு முன்பாக நிலைகொண்டிருக்கும்.”