சங்கீதங்கள் 138

Psalms 138
சங்கீதம் 138

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; சங் 111:11 கொரி 14:15சங் 95:3யோவா 10:34-36சங் 119:46சங் 82:6சங் 86:12-13சங் 96:4

“தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன்.

நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, மத் 5:18சங் 56:10ஏசா 42:21மத் 24:35சங் 56:41 இராஜா 8:29-30சங் 28:2சங் 5:7

உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும்,

உமது பெயரைத் துதிப்பேன்;

ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக

உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர்.

நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; 1 பேது 5:10சங் 18:6சங் 34:4-6ஏசா 40:29-31பிலி 4:13சகரி 10:12ஏசா 12:2ஏசா 41:10

நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர்.

யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் சங் 102:15சங் 72:11சங் 22:22சங் 22:27ஏசா 49:23ஏசா 60:16ஏசா 60:3-5சங் 102:22

உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும்.

யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், சங் 21:5வெளி 4:11வெளி 7:12மல்கி 1:11யாத் 15:11ஏசா 6:1-3வெளி 5:12-14யாத் 33:18-19

அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.

யெகோவா உயர்ந்தவராக இருந்தும், சங் 113:5-61 சாமு 2:7-8ஏசா 57:15நீதி 3:34யாக் 4:6ஏசா 66:2லூக் 14:11தானி 4:37

தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்;

ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார்.

துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், ஏசா 41:10சங் 23:3-4சங் 71:20-21சங் 85:6அப் 2:33ஏசா 5:25மீகா 7:8-10சங் 144:1-2

நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர்.

என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்;

உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர்.

யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; பிலி 1:6சங் 57:21 தெச 5:24ஏசா 26:12சங் 136:1சங் 103:17எரே 32:39-401 பேது 4:19

யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது;

உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.