யூதாவின் அரசர்களான யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே. சமாரியாவையும், எருசலேமையும் குறித்து அவன் கண்ட தரிசனம்: எரே 26:18ஏசா 1:1ஓசி 1:1ஆமோ 1:12 நாளாக 27:1-9ஆமோ 2:4-8ஆமோ 3:1-2ஆமோ 6:1
மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள், ஏசா 1:2சங் 11:4ஆப 2:20எரே 22:29யோனா 2:7மல்கி 3:5மீகா 6:1-2மாற் 7:14-15
பூமியே, அதில் உள்ளவர்களே, செவிகொடுங்கள்,
ஆண்டவராகிய யெகோவா உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகிறார்,
யெகோவா பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகிறார்.
சமாரியா, எருசலேமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு,
நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார். ஆமோ 4:13ஏசா 26:21உபா 32:13ஆப 3:19சங் 115:3உபா 33:29எசேக் 3:12ஓசி 5:14-15
அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார்.
நெருப்பின் முன் மெழுகு போலவும், நாகூ 1:5சங் 97:5ஆமோ 9:5ஆப 3:10ஆப 3:6ஏசா 64:1-3நியாயாதி 5:4சங் 68:2
மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும்
மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன.
பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன.
யாக்கோபின் மீறுதல்களினாலும், ஆமோ 8:14எரே 2:191 தெச 2:15-161 இராஜா 13:322 நாளாக 28:2-42 நாளாக 28:23-252இராஜா 17:7-23ஏசா 50:1-2
இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன.
யாக்கோபின் மீறுதல் என்ன?
சமாரியா அல்லவா?
யூதாவின் வழிபாட்டு மேடை எது?
எருசலேம் அல்லவா?
“எனவே யெகோவா சொல்கிறதாவது: எசேக் 13:14மீகா 3:122இராஜா 19:25புலம் 4:1ஆமோ 5:11ஆப 3:13ஓசி 13:16ஏசா 25:12
நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன்.
திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன்.
அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன்.
சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும் உபா 23:18ஓசி 2:12ஓசி 10:5-6ஓசி 8:6வெளி 18:32 நாளாக 31:12 நாளாக 34:6-72இராஜா 23:14-15
துண்டுகளாய் நொறுக்கப்படும்;
அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம்
நெருப்பில் சுட்டெரிக்கப்படும்;
அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன்.
அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால்,
பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.”
மீகாவின் அழுகையும் புலம்பலும்
சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்; ஏசா 20:2-4ஏசா 22:4ஏசா 13:21ஏசா 16:9ஏசா 21:3எரே 4:19எரே 48:36-39எரே 9:1
வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன்.
நரியைப்போல் ஊளையிட்டு,
ஆந்தையைப்போல் அலறுவேன்.
ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது; எரே 30:11-152 நாளாக 32:1-23ஏசா 8:7-8எரே 15:18மீகா 1:122இராஜா 18:9-13ஏசா 1:5-6ஏசா 10:28-32
அது யூதாவரை வந்துள்ளது.
என் மக்கள் வாழும்
எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது.
அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்; 2 சாமு 1:20எரே 6:26ஆமோ 5:13ஆமோ 6:10யோபு 2:8யோசு 18:23புலம் 3:29
கொஞ்சமும் அழவே வேண்டாம்.
பெத் அப்பிராவிலே
புழுதியில் புரளுங்கள்.
சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள். ஏசா 20:4எசேக் 16:37எசேக் 23:29ஏசா 16:2ஏசா 47:2-3எரே 13:22எரே 48:6எரே 48:9
சாயனானில் வாழ்கிறவர்கள்
வெளியே வரமாட்டார்கள்.
பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது.
அதற்குரிய பாதுகாப்பு
உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று.
மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து, எரே 14:19ஆமோ 3:6மீகா 1:9ஏசா 45:7ஏசா 59:9-11எரே 8:15யோபு 30:261 சாமு 4:13
விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது.
அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது.
லாகீசில் வாழ்கிறவர்களே, 2இராஜா 18:172 நாளாக 32:9யோசு 10:31 இராஜா 13:33-341 இராஜா 14:161 இராஜா 16:312 நாளாக 11:92இராஜா 16:3-4
குதிரைகளை தேரில் பூட்டுங்கள்!
நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம்.
ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன.
ஆதலால் யூதாவின் மக்களே, யோசு 15:442இராஜா 16:8சங் 118:8-92 நாளாக 16:1-32இராஜா 18:14-162 சாமு 8:2ஏசா 30:6எரே 15:18
நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள்.
அக்சீப் பட்டணம்
இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும்.
மரேஷாவில் வாழ்கிறவர்களே, 1 சாமு 22:1யோசு 15:44யோசு 15:352 நாளாக 11:7ஏசா 10:3ஏசா 10:5-6ஏசா 7:17-25எரே 49:1
உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார்.
இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள்
அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள்.
நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி, ஏசா 22:12எரே 7:29யோபு 1:20ஆமோ 8:10எரே 16:62இராஜா 17:6உபா 28:41உபா 28:56-57
உங்கள் தலையை மொட்டையடியுங்கள்;
அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால்,
கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.