எகிப்திற்கு எதிரான இறைவாக்கு
அசீரிய அரசன் சர்கோன், தனது தர்த்தான் படைத்தளபதியை அஸ்தோத் பட்டணத்திற்கு அனுப்பினான். அவன் வந்து அதைத் தாக்கிக் கைப்பற்றிய வருடத்தில், 2இராஜா 18:171 சாமு 5:11 சாமு 6:17ஆமோ 1:8எரே 25:20எரே 25:29-30 யெகோவா ஆமோஸின் மகன் ஏசாயா மூலம் பேசினார்: அந்த வேளையில் அவர் ஏசாயாவிடம், “உனது இடுப்பில் இருக்கும் துக்கவுடையையும், உனது செருப்பையும் கழற்றிவிடு” என்றார். அவனும் அப்படியே செய்து உடையின்றி வெறுங்காலுடன் திரிந்தான். 1 சாமு 19:24மத் 3:4மீகா 1:8எசேக் 24:17எசேக் 24:23சகரி 13:4ஏசா 13:1மீகா 1:11
பின்பு யெகோவா சொன்னதாவது: “எனது அடியவன் ஏசாயா உடையின்றியும், வெறுங்காலுடனும் மூன்று வருடங்கள் திரிந்திருக்கிறான். இது எகிப்திற்கும், எத்தியோப்பியாவிற்கும் விரோதமான முன்னெச்சரிப்பும் அடையாளமுமாகும். ஏசா 8:18எசேக் 4:5-6ஏசா 18:1-7ஏசா 37:9ஏசா 43:3எண் 14:34வெளி 11:2-3 இதேபோல் அசீரிய அரசன், எகிப்திய கைதிகளையும், நாடுகடத்தப்பட்ட எத்தியோப்பிய முதியோரையும் இளையோரையும் உடையின்றியும், வெறுங்காலுடனும், பின்பக்கம் மூடப்படாதவர்களாயும் கடத்திச் செல்வான். இவ்விதம் எகிப்து வெட்கமடையும். ஏசா 19:4எரே 13:22எரே 13:262 சாமு 10:4எசேக் 30:18ஏசா 3:17ஏசா 47:3எரே 46:26 அப்பொழுது எத்தியோப்பியாவில் நம்பிக்கை வைத்து, எகிப்தைக் குறித்து பெருமை பாராட்டியவர்கள், பயந்து வெட்கத்துக்குள்ளாவார்கள். ஏசா 30:3ஏசா 30:51 கொரி 3:212இராஜா 18:21எசேக் 29:6-7எரே 17:5எரே 9:23-24ஏசா 2:22 அந்த நாளிலே, இந்தக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ‘நாம் நம்பிக்கை வைத்தவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது பாருங்கள். அசீரிய அரசனிடமிருந்து விடுதலை பெறும்படி உதவிக்காக இவர்களிடமல்லவா ஓடினோம். அப்படியானால் நாம் எப்படித் தப்புவோம்?’ ” என்பார்கள். 1 தெச 5:3எபி 2:3மத் 23:33ஏசா 10:3ஏசா 28:17ஏசா 30:1-7ஏசா 30:15-16ஏசா 31:1-3