ஏசாயா 22

Isaiah 22

எருசலேமைப் பற்றிய இறைவாக்கு

தரிசனப் பள்ளத்தாக்கு எனப்படும் எருசலேமைக் குறித்த இறைவாக்கு: எரே 21:13சங் 125:2ஏசா 15:3யோவே 3:12யோவே 3:141 சாமு 11:51 சாமு 3:12இராஜா 6:28

வீடுகளின்மேல் போய் இருக்கிறீர்களே,

உங்களுக்கு நடந்தது என்ன?

குழப்பம் நிறைந்த நகரமே, ஏசா 32:13ஏசா 23:7எரே 14:18புலம் 2:20ஆமோ 6:3-6ஏசா 22:12-13ஏசா 37:33ஏசா 37:36

ஆரவாரமும் குதூகலமும் உள்ள பட்டணமே,

உங்களில் கொல்லப்பட்டவர்கள் வாளினால் கொல்லப்படவில்லை;

அல்லது அவர்கள் போரில் சாகவில்லை.

உங்கள் தலைவர்கள் யாவரும் சேர்ந்து ஓடிவிட்டார்கள்; 2இராஜா 25:18-212இராஜா 25:4-7ஏசா 3:1-8எரே 39:4-7எரே 52:24-27

வில்லை நாணேற்றாமலே அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள்.

பகைவன் வெகு தூரத்திலிருக்கும்போதே நீங்கள் தப்பி ஓடினீர்கள்;

ஆயினும் நீங்கள் யாவரும் ஒன்றாய் பிடிக்கப்பட்டு கைதிகளாக்கப்பட்டீர்கள்.

ஆகவே நான், “என்னிடமிருந்து திரும்புங்கள்; எரே 9:1மத் 2:18எரே 13:17எரே 31:15மீகா 1:8சங் 77:2ஏசா 15:3ஏசா 33:7

என்னை மனங்கசந்து அழவிடுங்கள்;

என் மக்களின் அழிவின் நிமித்தம்

என்னைத் தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.

யெகோவா, சேனைகளின் யெகோவா, ஏசா 10:6ஏசா 37:3புலம் 1:5லூக் 23:30மீகா 7:4ஆமோ 5:18-20ஓசி 10:8ஏசா 22:1

தரிசனப் பள்ளத்தாக்கிற்கு அமளிக்கும்,

மிதித்தலுக்கும், திகிலுக்கும் என்று ஒருநாளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

அந்த நாளிலே மதில்கள் இடித்து வீழ்த்தப்படும்;

மலைகளை நோக்கிக் கூக்குரலிடுவார்கள்.

ஏலாமியர் தமது தேரோட்டிகளோடும், 2இராஜா 16:9ஏசா 21:2ஆமோ 1:5ஆமோ 9:7ஆதி 10:22ஏசா 15:1எரே 49:35-39

குதிரைகளோடும் தமது அம்புக் கூடுகளை எடுக்கிறார்கள்;

கீர் ஊரார் கேடயத்தை வெளியே எடுக்கிறார்கள்.

உங்கள் செழிப்பான பள்ளத்தாக்குகள் தேர்களினால் நிரம்பி இருக்கின்றன; ஏசா 10:28-32ஏசா 8:7-8எரே 39:1-3ஏசா 37:34

பட்டணத்து வாசலிலே குதிரைவீரர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

யூதாவின் அரண்கள் அகற்றப்பட்டிருக்கின்றன; 1 இராஜா 10:171 இராஜா 7:21 இராஜா 14:27-28ஏசா 36:1-3உன்னத 4:4

அந்த நாளிலே நீங்கள் வன மாளிகையின்

ஆயுதங்களில் உங்கள் நம்பிக்கையை வைத்திருந்தீர்கள்.

தாவீதின் பட்டணத்து அரண்களில் 2இராஜா 20:202 நாளாக 32:1-62 நாளாக 32:30நெகே 3:16

பல வெடிப்புகளைக் கண்டீர்கள்.

நீங்கள் கீழ் குளத்தில்

தண்ணீரைச் சேகரித்தீர்கள்.

பின்பு எருசலேமிலுள்ள வீடுகளை எண்ணினீர்கள்;

மதிலைப் பலப்படுத்துவதற்காக வீடுகளை உடைத்து வீழ்த்தினீர்கள்.

பழைய குளத்துத் தண்ணீரைச் சேகரிப்பதற்காக, எரே 33:2-3மீகா 7:72இராஜா 25:4ஏசா 17:7ஏசா 31:12 நாளாக 16:7-92 நாளாக 32:3-42 நாளாக 6:6

நீங்கள் இரு மதில்களுக்கிடையில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்தீர்கள்.

ஆனால் இதை உண்டாக்கியவரை நீங்கள் நோக்கவும் இல்லை;

ஆதியிலே இதைத் திட்டமிட்டவரை நீங்கள் மதிக்கவும் இல்லை.

அந்த நாளிலே யெகோவா, சேனைகளின் யெகோவா, யோவே 1:13மீகா 1:16யோவே 2:17ஆமோ 8:10பிரச 3:4யாக் 5:1எஸ்றா 9:3யோபு 1:20

அழுவதற்கும், புலம்புவதற்கும்,

தலைமயிரை மொட்டையிடுவதற்கும்,

துக்கவுடை உடுத்துவதற்கும் உங்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆயினும் பாருங்கள், நீங்கள் கொண்டாட்டங்களிலும் மகிழ்ச்சியிலும் ஏசா 56:121 கொரி 15:32லூக் 17:26-29யாக் 5:5ஆமோ 6:3-7ஏசா 21:4-5ஏசா 5:12ஏசா 5:22

குதூகலத்திலும் ஈடுபடுகிறீர்கள்.

ஆடுமாடுகளை அடித்து, செம்மறியாடுகளையும் வெட்டி,

இறைச்சியை சாப்பிட்டு, திராட்சை இரசம் குடிக்கிறீர்கள்!

நீங்களோ, “உண்போம், குடிப்போம்.

ஏனெனில், நாளைக்குச் சாவோம்!” என்று சொல்லுகிறீர்களே.

என் செவிகேட்க சேனைகளின் யெகோவா இதை வெளிப்படுத்தியிருக்கிறார்: “நீங்கள் சாகும் நாள்வரை, இந்தப் பாவம் நிவிர்த்தியாக்கப்படுவதில்லை” என யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்கிறார். எசேக் 24:131 சாமு 3:14ஏசா 5:9ஏசா 13:11ஏசா 26:21வெளி 22:11-121 சாமு 9:15ஆமோ 3:7

யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ஏசா 36:32இராஜா 18:182இராஜா 18:372இராஜா 19:2ஏசா 37:21 நாளாக 27:251 இராஜா 4:62இராஜா 10:5

“நீ போய் அரண்மனைக்குப் பொறுப்பாய் இருக்கும் அதிகாரியான

செப்னாவிடம் சொல்லவேண்டியதாவது:

நீ இங்கே என்ன செய்கிறாய்? உனக்கென்று இந்த இடத்தில் மத் 27:602 நாளாக 16:142 சாமு 18:18யோபு 3:14ஏசா 14:18ஏசா 52:5மீகா 2:10

ஒரு கல்லறையை வெட்டுவதற்கு உனக்கு உத்தரவு கொடுத்தது யார்?

உயர்ந்த இடத்தில் உனது கல்லறையை வெட்டவும்,

கற்பாறையில் உனது இளைப்பாறும் இடத்தைச் செதுக்கவும்

உனக்கு உத்தரவு கொடுத்தது யார்?

“வலியவனே, எச்சரிக்கையாயிரு, எரே 14:3எஸ்த 7:8யோபு 9:24

யெகோவா உன்னை இறுகப் பிடித்துத் தூக்கியெறியப் போகிறார்.

அவர் உன்னை இறுக்கமாய் சுருட்டி, ஒரு பந்துபோல் ஆக்கி, ஏசா 17:13ஆமோ 7:17

ஒரு பெரிய நாட்டிற்குள் எறிவார்.

அங்கே நீ சாவாய்,

உனது சிறப்பான தேர்கள் அங்கு இருக்கும்;

நீ உன் எஜமான் வீட்டுக்கு அவமானமாய் இருந்தாயே.

நான் உனது பதவியிலிருந்து உன்னை நீக்குவேன், எசேக் 17:24யோபு 40:11-12லூக் 1:52சங் 75:6-7

நீ இருக்கும் நிலையிலிருந்து அகற்றப்படுவாய்.

“அந்த நாளிலே, இல்க்கியாவின் மகன் எலியாக்கீம் என்னும் என் அடியவனை அழைப்பேன். 2இராஜா 18:18ஏசா 36:3ஏசா 37:22இராஜா 18:37ஏசா 36:22ஏசா 36:11 உனது உடையை அவனுக்கு உடுத்தி, உனது சால்வையை அவனுடைய இடையில் கட்டி, உன்னிடம் இருந்த அதிகாரத்தை அவனிடம் ஒப்படைப்பேன். எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வீட்டாருக்கும் அவன் தகப்பனாயிருப்பான். ஆதி 45:81 சாமு 18:4எஸ்த 8:15எஸ்த 8:2ஆதி 41:42-43ஏசா 9:6-7 தாவீதின் வீட்டுத் திறப்பை அவனிடம் கொடுப்பேன்; அவன் திறப்பதை யாராலும் மூட இயலாது, அவன் மூடியதை ஒருவராலும் திறக்கவும் இயலாது. வெளி 3:7மத் 16:18-19யோபு 12:14மத் 18:18-19வெளி 1:18ஏசா 7:2 ஒரு உறுதியான இடத்தில் அவனை ஒரு ஆணியைப்போல் அறைவேன்; அவன் தனது தகப்பன் வீட்டுக்கு ஒரு மகிமையுள்ள இருக்கையாய் இருப்பான். எஸ்றா 9:8யோபு 36:71 சாமு 2:8சகரி 10:4பிரச 12:11லூக் 22:29-30வெளி 3:21எஸ்த 10:3 அவனுடைய தகப்பன் குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான, சிறிய பாத்திரங்கள், கிண்ணங்கள் முதல் பெரிய குடங்கள் வரையுள்ள அனைத்து பாத்திரங்களைப்போல் பெரிய பொறுப்பு அவன்மேல் இருக்கும்.” 2 தீமோ 2:20-21தானி 6:1-3யோவா 20:21-23யோவா 5:22-27மத் 28:18ஆதி 41:44-45ஆதி 47:11-25எசேக் 15:3

சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்த நாளிலே, உறுதியான இடத்தில் அறையப்பட்டிருந்த ஆணி பிடுங்கப்பட்டு, முறிந்து விழும்; அதில் தொங்கியிருந்த பாரமான யாவும் விழுந்துவிடும்.” யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார். ஏசா 46:11எஸ்த 9:24-25ஏசா 22:23எரே 17:5-6மீகா 4:4சங் 146:3எஸ்த 9:5-14எசேக் 5:13