ஏசாயா 4

Isaiah 4

அந்த நாளிலே ஏழு பெண்கள் ஆதி 30:23ஏசா 2:17ஏசா 13:12லூக் 1:25லூக் 21:222 தெச 3:121 சாமு 1:6ஏசா 10:20

ஒரே புருஷனைப் பிடித்து இப்படிச் சொல்வார்கள்:

“நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிட்டு,

எங்கள் சொந்த உடைகளையும் உடுத்திக்கொள்வோம்;

உமது பெயரை மாத்திரம் எங்களுக்கு வழங்கி,

எங்கள் அவமானத்தை நீக்கிவிடும்!”

யெகோவாவின் கிளை

அந்த நாளிலே யெகோவாவின் கிளை, அழகுடனும் மகிமையுடனும் விளங்கும்; இஸ்ரயேல் நாட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அந்த நாட்டின் கனி பெருமையும், மகிமையுமாகும். எரே 23:5சகரி 6:12சகரி 3:8ஏசா 27:6யோவே 2:32எரே 33:15ரோம 11:4-52 கொரி 4:6 அப்பொழுது சீயோனில் விடப்பட்டவர்களாய், எருசலேம் நகரில் மீந்திருப்பவர்கள், பரிசுத்தர்கள் என அழைக்கப்படுவார்கள்; வாழ்வதற்கென்று எருசலேமில் பேரெழுதப்பட்ட எல்லோரும் அப்படியே அழைக்கப்படுவார்கள். லூக் 10:20யாத் 32:32-33ஏசா 52:1ஏசா 60:21சங் 69:28வெளி 21:27கொலோ 3:12எசேக் 36:24-28 யெகோவா சீயோனின் பெண்களுடைய அசுத்தத்தைக் கழுவி, அவர் எருசலேமிலிருந்து அதன் இரத்தக் கறைகளை நியாயத்தின் ஆவியாலும், நெருப்புத் தணலையொத்த ஆவியாலும் சுத்திகரிப்பார். மல்கி 3:2-3எசேக் 22:18-22எசேக் 36:25சகரி 13:9மத் 3:11-12எசேக் 36:29ஏசா 28:6மத் 23:37 அதன்பின் சீயோன் மலை முழுவதற்கு மேலாகவும், அங்கு சபை கூடுகிறவர்களுக்கு மேலாகவும் பகலிலே புகை மேகத்தையும், இரவிலே நெருப்புச் சுவாலையின் பிரகாசத்தையும் யெகோவா உண்டாக்குவார்; இந்த எல்லா மகிமைக்கு மேலாகவும் ஒரு விதான மண்டபம் உண்டாயிருக்கும். யாத் 13:21-22நெகே 9:12யாத் 40:34-38எண் 9:15-22சங் 78:14ஏசா 33:20ஏசா 46:13ஏசா 60:1 அது பகலின் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கூடாரமாகவும், நிழலாகவும் இருக்கும். அது புயலிலிருந்தும், மழையிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் புகலிடமாயும், மறைவிடமாயும் இருக்கும். ஏசா 25:4சங் 27:5ஏசா 32:2ஏசா 8:14நீதி 18:10எபி 11:7எபி 6:18ஏசா 32:18-19