சங்கீதங்கள் 27

Psalms 27
சங்கீதம் 27

தாவீதின் சங்கீதம்.

யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், எபி 13:6சங் 118:6யாத் 15:22 கொரி 12:9சங் 84:11ரோம 8:31யோவா 8:12மீகா 7:7-8

நான் யாருக்குப் பயப்படுவேன்?

யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,

நான் யாருக்குப் பயப்படுவேன்?

தீய மனிதர் என்னை விழுங்கும்படி சங் 118:12சங் 3:7ஏசா 8:15சங் 14:4சங் 22:16சங் 9:3யோபு 19:22யோவா 18:3-6

எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,

எனது பகைவரும் விரோதிகளுமான

அவர்களே தடுமாறி விழுவார்கள்.

ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், சங் 3:61 பேது 3:14ரோம 8:35-37பிலி 1:282 கொரி 5:6-8ஏசா 41:11-12ஏசா 54:16-17வெளி 2:10

என் இருதயம் பயப்படாது;

எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,

அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.

நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், சங் 26:8சங் 23:6சங் 65:4சங் 84:10சங் 84:4லூக் 10:42சங் 63:2-5எரே 29:13

அதையே நான் தேடுகிறேன்:

நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,

அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்

நான் என் வாழ்நாள் முழுவதும்

யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.

ஏனெனில் துன்ப நாளில், நீதி 18:10சங் 31:20சங் 138:7சங் 91:1சங் 119:114சங் 50:15சங் 40:2கொலோ 3:3

அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்;

அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து,

கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.

அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள சங் 3:3எபி 13:152 சாமு 22:49சங் 107:22ஏசா 12:6எபே 5:19-20வெளி 5:9எரே 33:11

பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்;

அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு,

யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.

யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; சங் 130:2-4சங் 13:3சங் 5:2சங் 4:1சங் 143:1-2

என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.

என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், சங் 105:4எரே 29:12-13ஏசா 55:6-7சங் 119:58சங் 24:6சங் 63:1-2ஓசி 5:15ஏசா 45:19

யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.

உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; சங் 69:17சங் 143:7ஏசா 46:3-4சங் 102:22 தீமோ 4:17-18எபி 13:5எரே 32:40சங் 24:5

கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்;

நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர்.

என் இரட்சிப்பின் இறைவனே,

என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.

என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், ஏசா 49:15ஏசா 40:11யோவா 16:32மத் 10:362 தீமோ 4:16சங் 69:8மத் 10:21-22யோவா 9:35

யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.

யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; சங் 25:4-5சங் 5:8சங் 86:11சங் 26:12சங் 143:8-10நீதி 2:6-9சங் 119:10சங் 64:6

என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம்

என்னை நேரான பாதையில் நடத்தும்.

என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; மத் 26:59-60சங் 31:8சங் 35:11சங் 41:11அப் 6:11-13சங் 35:25அப் 9:1யாத் 20:16

ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும்

என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.

நானோ வாழ்வோரின் நாட்டில் 2 கொரி 4:16சங் 142:52 கொரி 4:8-14சங் 56:3சங் 31:19சங் 56:13சங் 42:5சங் 116:9-11

யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று

இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.

யெகோவாவுக்குக் காத்திரு; ஏசா 40:31சங் 31:24ஏசா 30:18சங் 130:5சங் 37:34பிலி 4:13ஆப 2:3எபே 6:10

பெலன்கொண்டு தைரியமாயிரு,

யெகோவாவுக்கே காத்திரு.