கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
நீதியுள்ள என் இறைவனே, 2 கொரி 1:10யாத் 34:6-7சங் 40:1-3சங் 18:18-19சங் 119:1322 கொரி 5:20-21சங் 25:16சங் 17:6
நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும்.
என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்;
என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.
மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? நீதி 1:22ஓசி 4:7சங் 3:3எரே 2:11சங் 106:20சங் 5:61 சாமு 12:21பிரச 8:11
எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?
யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; யோவா 15:16சங் 34:152 தெச 2:13-14சங் 91:14-152 பேது 2:92 தீமோ 2:191 பேது 2:9தீத் 2:14
நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; எபே 4:26சங் 77:6சங் 63:6நீதி 3:7சங் 46:102 கொரி 13:5யோபு 28:28சங் 33:8
நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது,
உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
நீதியான பலிகளைச் செலுத்தி, எபி 13:15-16சங் 37:3சங் 51:191 பேது 4:19உபா 33:19சங் 62:8ஏசா 1:11-18மத் 5:23
யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.
“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; சங் 80:19எண் 6:26சங் 119:135சங் 80:7சங் 67:1சங் 89:15சங் 44:3சங் 49:16-20
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.
தானியமும் புதுத் திராட்சை இரசமும் ஏசா 9:3சங் 63:2-5சங் 37:4சங் 43:4அப் 14:17சங் 92:4நியாயாதி 9:27எரே 48:33
நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட
அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; நீதி 3:24சங் 3:5யோபு 11:18-19சங் 16:8-91 தெச 5:10உபா 12:10லேவி 25:18-19ஓசி 2:18
ஏனெனில் யெகோவாவே,
நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.