தாவீது அபிமெலேக்கின் முன்பு பைத்தியம்போல் நடித்து, அவனால் துரத்திவிடப்படும்போது பாடின சங்கீதம்.
யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்; 1 தெச 5:18கொலோ 3:17சங் 145:1-2எபே 5:20சங் 71:8சங் 71:14-152 தெச 2:13அப் 16:25
அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும்.
நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; எரே 9:241 கொரி 1:31சங் 119:74சங் 44:81 தீமோ 1:15-162 கொரி 10:17ஏசா 45:25சங் 22:22-24
ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும்.
என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; சங் 69:30லூக் 1:46சங் 148:1-14வெளி 19:5-6சங் 40:16சங் 66:8சங் 35:27சங் 103:20-22
நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்; சங் 18:6மத் 7:7சங் 116:1-6சங் 56:32 தீமோ 1:7ஏசா 12:2யோனா 2:2சங் 31:22
அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார்.
அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்; எபி 12:2சங் 123:1-2சங் 18:28சங் 25:3ஏசா 60:5சங் 36:9சங் 97:11ஏசா 45:22
அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.
இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; சங் 34:17-19சங் 3:4சங் 10:17சங் 66:16-20சங் 40:172 சாமு 22:1ஆதி 48:16வெளி 7:14-17
அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார்.
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும் சங் 91:11தானி 6:22எபி 1:142இராஜா 19:352இராஜா 6:17ஆதி 32:1-2மத் 18:10சகரி 9:8
யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; சங் 119:103எபி 6:4-51 பேது 2:2-3எரே 31:14சங் 63:5சங் 84:12சங் 36:7சகரி 9:17
அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்; ரோம 8:32பிலி 4:19சங் 23:1லூக் 12:30-32சங் 31:23சங் 89:7வெளி 15:3-41 கொரி 3:22-23
ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.
இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்; சங் 84:11மத் 6:32சங் 104:21லூக் 1:51-53யோபு 4:10-11
ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை.
என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்; நீதி 1:7நீதி 2:1-9சங் 111:10சங் 32:8ஏசா 28:9நீதி 8:17மத் 18:2-4நீதி 4:1
யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.
உங்களில் யாராவது வாழ்வை நேசித்து 1 பேது 3:10-12உபா 30:20உபா 6:2சங் 91:16பிரச 12:13பிரச 3:13சங் 4:6யோபு 7:7
அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால்,
நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி, யாக் 3:5-10சங் 141:3நீதி 21:231 பேது 2:22கொலோ 3:9யாக் 1:19யாக் 1:26நீதி 13:3
உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.
தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்; சங் 37:271 பேது 3:11எபி 12:143 யோவா 1:11ரோம 12:9யாக் 3:17-18ரோம 12:18நீதி 3:7
சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.
யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; 1 பேது 3:12சங் 34:17சங் 33:18யோபு 36:7சங் 130:2சங் 34:62 நாளாக 6:40தானி 9:17-23
அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன;
ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை நீதி 10:7எரே 17:13எரே 44:11யோபு 18:17லேவி 17:10ஆமோ 9:4பிரச 8:10எசேக் 14:7-8
பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி,
யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; சங் 145:18-20ஏசா 65:24சங் 34:19சங் 34:6சங் 91:15சங் 34:15அப் 12:5-112 நாளாக 32:24
அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார்.
யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; சங் 147:3சங் 145:18ஏசா 57:15ஏசா 61:1சங் 51:17எசேக் 36:26ஏசா 66:2சங் 85:9
ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்.
நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், சங் 34:171 பேது 4:12-13சங் 34:62 கொரி 4:17யோவா 16:33சங் 34:42 தீமோ 3:11-12யோபு 5:19
ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார்.
அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; யோவா 19:36சங் 35:10சங் 91:12தானி 6:22-24
அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது.
தீமை கொடியவர்களைக் கொல்லும்; சங் 94:23ஏசா 3:11நீதி 24:162 தெச 1:9சங் 37:12-15சங் 89:23லூக் 19:141 சாமு 19:4-5
நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; சங் 103:41 பேது 1:18-19சங் 31:5சங் 71:232 சாமு 4:91 இராஜா 1:29வெளி 5:9ரோம 8:31-39
அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான்.