ஞானமே மேலானது
பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; எபி 2:1சங் 34:11நீதி 1:8நீதி 2:1-51 தெச 2:11-12நீதி 5:1நீதி 19:20நீதி 22:17
கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், 1 தீமோ 4:6தீத் 1:9உபா 32:2யோபு 33:3நீதி 8:6-9சங் 89:30-321 நாளாக 28:92 நாளாக 7:19
எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், 1 நாளாக 22:51 நாளாக 29:1ரோம 12:161 நாளாக 3:51 இராஜா 1:13-172 சாமு 12:24-25எரே 10:23சகரி 12:10
என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: நீதி 3:1எபே 6:4யோவா 12:501 நாளாக 28:9நீதி 7:22 தீமோ 3:15உபா 6:6ஏசா 55:3
“நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்;
நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; யாக் 1:5நீதி 3:13-182 நாளாக 34:2நீதி 1:22-23சங் 44:18யோபு 23:11நீதி 17:16நீதி 8:5
எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; 2 தெச 2:10நீதி 4:21-22எபே 3:17நீதி 2:10-12
அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; பிரச 7:12பிரச 9:16-18நீதி 23:23நீதி 16:16பிலி 3:8மாற் 8:36-37மத் 13:44-46சங் 119:104
உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; தானி 12:31 சாமு 2:30நீதி 3:351 இராஜா 3:5-13நீதி 22:4
நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், நீதி 1:91 பேது 5:4எபி 2:7-9ஏசா 28:5நீதி 16:31வெளி 3:211 பேது 3:41 தீமோ 2:9-10
அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; 1 தெச 2:13நீதி 3:2உபா 6:2எரே 9:20நீதி 3:161 தீமோ 1:15யோவா 3:32-33நீதி 8:10
அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, சங் 25:4-5பிரச 12:9நீதி 8:91 சாமு 12:23-24நீதி 8:6சங் 23:3உபா 4:5நீதி 4:4
நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீதி 3:23சங் 18:361 பேது 2:82 சாமு 22:37யோவா 11:9-101 யோவா 2:10-11சங் 119:165சங் 91:11-12
நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; எபி 2:1நீதி 23:23நீதி 3:181 தெச 5:21உபா 32:47அப் 11:23அப் 2:42யோவா 6:68
அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; சங் 1:11 கொரி 15:33நீதி 1:10நீதி 1:15நீதி 13:20நீதி 9:6நீதி 2:11-12சங் 26:4-5
தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; எபே 5:11யோபு 22:231 தெச 5:22யாத் 23:7யோபு 11:14ஏசா 33:15நீதி 5:8நீதி 6:5
அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; சங் 36:4மீகா 2:1ஏசா 57:202 பேது 2:14நீதி 1:16லூக் 22:66யோவா 18:28
யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, யாக் 5:4-5மீகா 6:12நீதி 20:17நீதி 9:17சங் 14:4ஆமோ 8:4-6எசேக் 22:25-29எரே 5:26-28
வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் யோவா 8:12யோபு 11:17தானி 12:3பிலி 2:152 கொரி 3:182 பேது 1:19மத் 5:14சங் 84:7
மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; யோவா 12:35ஏசா 59:9-10எரே 23:12யோபு 18:5-61 சாமு 2:9எரே 13:16யோவா 11:10யோபு 12:25
அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நீதி 5:1ஏசா 55:3நீதி 6:20-21நீதி 7:1சங் 78:1சங் 90:12மத் 17:5
நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, நீதி 3:21நீதி 3:3நீதி 7:1-2சங் 40:8நீதி 2:1
அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; நீதி 12:18எரே 33:6நீதி 4:10நீதி 3:8நீதி 4:4
அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், லூக் 6:45மத் 12:34-35மாற் 7:21-23சங் 139:23-24நீதி 13:3எரே 17:9மத் 15:19நீதி 23:19
அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, யாக் 1:26நீதி 8:8நீதி 8:13எபே 4:25-31நீதி 6:121 பேது 2:1யாக் 1:21கொலோ 3:8
சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; சங் 119:37மத் 6:22யோபு 31:1நீதி 23:33நீதி 23:5
உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; எபி 12:13சங் 37:23சங் 119:52 தெச 3:3ஆகா 1:5ஆகா 1:7நீதி 5:21சங் 119:59
அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உபா 5:32யோசு 1:7உபா 28:14நீதி 16:17உபா 12:32ஏசா 1:16ரோம 12:9
உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.