நீதிமொழிகள் 15

Proverbs 15

சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; நீதி 10:12நீதி 25:15நீதி 15:18நீதி 29:22நீதி 28:25நியாயாதி 8:1-31 இராஜா 12:13-161 சாமு 25:10-13

ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.

ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; நீதி 12:23நீதி 15:28நீதி 13:16பிரச 10:12-13சங் 45:1ஏசா 50:4நீதி 15:23நீதி 16:23

ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும்.

யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, எபி 4:13எரே 16:17எரே 23:242 நாளாக 16:9நீதி 5:21யோபு 31:4யோபு 34:21-22எரே 32:19

அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன.

சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, நீதி 16:24நீதி 12:18நீதி 18:8மல்கி 4:2நீதி 3:18நீதி 18:14வெளி 2:7நீதி 26:22

ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும்.

மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; நீதி 15:31-32நீதி 13:18நீதி 13:1நீதி 19:201 நாளாக 28:20தீத் 2:151 நாளாக 22:11-131 நாளாக 28:9

ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள்.

நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, நீதி 8:21நீதி 10:22நீதி 21:20சங் 112:3எபி 11:26நீதி 16:8சங் 37:16பிரச 4:6

ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும்.

ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், மத் 12:34எபே 4:29யாக் 3:6நீதி 10:20-21அப் 18:9-10பிரச 12:9-10மத் 10:27மத் 28:18-20

ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.

யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், நீதி 15:291 நாளாக 29:17நீதி 21:27ஏசா 1:10-15எரே 6:20நீதி 28:9ஏசா 61:8யோவா 4:24

ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும்.

யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், 1 தீமோ 6:11நீதி 21:21ஆப 1:13ஓசி 6:3எரே 44:4மத் 7:132 தீமோ 2:22ஏசா 26:7

ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார்.

வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, நீதி 12:1யோவா 3:20நீதி 10:17நீதி 13:1யோவா 7:71 இராஜா 18:171 இராஜா 21:201 இராஜா 22:8

கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள்.

பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, சங் 44:21எபி 4:13சங் 139:82 நாளாக 6:30யோபு 26:6வெளி 2:231 சாமு 16:7எரே 17:10

மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்!

கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், ஆமோ 5:10யோபு 21:142 தீமோ 4:3நீதி 9:7-8யோவா 7:72 நாளாக 18:7யோவா 3:18-21நீதி 15:10

அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள்.

மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; நீதி 17:22யோவா 14:1நீதி 12:25நீதி 18:14நீதி 15:152 கொரி 7:102 கொரி 2:72 கொரி 1:12

ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும்.

பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, நீதி 9:9ஏசா 30:10நீதி 18:152 பேது 3:18அப் 17:11நீதி 1:51 இராஜா 3:6-12ஓசி 12:1

ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, 2 கொரி 6:10ரோம 12:12நீதி 15:13நீதி 17:22ரோம 5:11ரோம 5:2-31 பேது 1:6-82 கொரி 1:5

ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து.

அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, நீதி 16:8சங் 37:16பிரச 5:10-121 தீமோ 6:6நீதி 28:6நீதி 10:22பிரச 2:18-23பிரச 2:10-11

சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது.

பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, நீதி 17:1நீதி 21:191 யோவா 4:16மத் 22:4பிலி 2:1சங் 133:1-3லூக் 15:23

அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது.

முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; நீதி 15:1நீதி 26:21மத் 5:9நீதி 29:22நீதி 14:29பிரச 10:4யாக் 1:19-20நீதி 10:12

ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள்.

சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; ஏசா 35:8நீதி 22:5ஏசா 30:21நீதி 22:13நீதி 26:13எண் 14:1-3நீதி 8:9சங் 27:11

ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது.

ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், நீதி 29:3நீதி 10:1நீதி 23:15-161 இராஜா 1:481 இராஜா 5:7லேவி 19:3நீதி 23:221 இராஜா 2:9

மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, எபே 5:15நீதி 10:23நீதி 14:16யாக் 3:13யோபு 28:28நீதி 11:12நீதி 14:9நீதி 26:18-19

ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள்.

ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், நீதி 11:14நீதி 20:18பிரச 8:6

அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும்.

தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; ஏசா 50:4எபே 4:29நீதி 25:11-12நீதி 12:14நீதி 16:13நீதி 24:261 சாமு 25:32-33பிரச 3:1

காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது!

வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, கொலோ 3:1-2சங் 16:11மத் 7:14எரே 21:8யோவா 14:6பிலி 3:20நீதி 23:14சங் 139:24

அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும்.

பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், சங் 146:9சங் 68:5-6உபா 10:17-18நீதி 12:7நீதி 14:11நீதி 23:10தானி 5:20ஏசா 2:12

ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார்.

கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், நீதி 6:16-19எரே 4:14மத் 12:34-37நீதி 15:23சங் 19:14சங் 37:30-31சங் 45:1மத் 15:19

ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை.

பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், யாத் 23:8நீதி 1:19எரே 17:11உபா 16:19ஏசா 33:15-16நீதி 11:29யாத் 18:21யோசு 7:24-25

ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள்.

நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, 1 பேது 3:15பிரச 5:2நீதி 29:11யாக் 3:6-8நீதி 16:23நீதி 15:2பிரச 10:12-14பிரச 5:6

ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது.

யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், யோவா 9:31சங் 145:18-191 பேது 3:12நீதி 15:8சங் 34:15-17யாக் 5:16-18எபே 2:12-13ரோம 8:26-27

ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.

மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; லூக் 2:10-19ஏசா 58:11நீதி 25:25வெளி 22:5வெளி 21:23எஸ்றா 9:8நீதி 17:22பிரச 11:7

நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.

வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் நீதி 15:5நீதி 25:12யோவா 15:3-4நீதி 19:20நீதி 9:8-9ஏசா 55:3நீதி 1:23நீதி 13:20

ஞானிகளோடு குடியிருப்பார்கள்.

அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; நீதி 1:24-33வெளி 3:19நீதி 1:7ஏசா 1:5எரே 5:3நீதி 18:15நீதி 8:33-36உபா 21:18

ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, 1 பேது 5:5நீதி 18:12நீதி 1:7யாக் 4:10சங் 34:11சங் 111:10யோபு 28:28நீதி 25:6-7

கனத்திற்கு முன்பு தாழ்மை.