அல்லேலூயா, சங் 138:1சங் 149:1சங் 106:1சங் 109:30சங் 108:3சங் 35:18சங் 40:9-101 நாளாக 29:10-20
நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும்
நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.
யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; சங் 104:24நீதி 24:14சங் 139:14சங் 143:5எபே 1:19எரே 32:17-19வெளி 15:3எபே 2:7-10
அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.
அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; சங் 145:4-5சங் 145:10-12எபே 3:10வெளி 5:12-14சங் 119:142எபே 1:6-8யாத் 15:11ஏசா 51:8
அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.
அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; சங் 103:8ஏசா 63:7எபே 1:6-8சங் 145:8சங் 86:5உபா 31:19-301 கொரி 11:24-26சங் 112:4
யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.
அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; சங் 105:8லூக் 1:72தானி 9:4மத் 6:26-33நெகே 1:5சங் 106:45சங் 89:34ஏசா 33:16
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, சங் 2:8சங் 80:8யோசு 10:13-14சங் 44:2யோசு 3:14-17யோசு 6:20சங் 78:12-72சங் 105:27-45
தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.
அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; சங் 19:7சங் 89:14உபா 32:4சங் 105:8சங் 119:151சங் 119:160சங் 98:3வெளி 15:3-4
அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.
அவை என்றென்றும் உறுதியானவை; மத் 5:18சங் 19:9ஏசா 40:8வெளி 15:3ரோம 7:12சங் 119:127-128ரோம 3:31
உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.
அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; சங் 99:3லூக் 1:49லூக் 1:68தீத் 2:14வெளி 5:9எபி 13:20எபி 9:12உபா 28:58
அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்;
பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; நீதி 1:7நீதி 9:10யோபு 28:28பிரச 12:13உபா 4:6யோவா 5:44யோவா 13:17மத் 25:21
அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு.
நித்தியமான துதி அவருக்கே உரியது.