தாவீதின் ஸ்தோத்திர சங்கீதம்.
என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்; சங் 47:6-8சங் 34:1சங் 45:6மத் 25:34சங் 30:12தானி 4:37சங் 44:4வெளி 19:16
நான் என்றென்றும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
நாள்தோறும் நான் உம்மைத் துதித்து, வெளி 7:15சங் 71:6சங் 119:164சங் 72:15
உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன்.
யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்; சங் 147:5ரோம 11:33யோபு 5:9ஏசா 40:28யோபு 9:10சங் 139:6சங் 48:1சங் 96:4
அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது.
உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்; சங் 71:18சங் 78:3-7உபா 6:7ஏசா 38:19யோசு 4:21-24சங் 44:1-2யாத் 12:26-27யாத் 13:14-15
அவர்கள் உம்முடைய வல்லமையான செயல்களைச் சொல்வார்கள்.
நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும், ஏசா 12:4சங் 119:27சங் 72:18தானி 4:1-3தானி 4:37சங் 104:1-2சங் 105:2சங் 40:9-10
உமது அதிசயமான செயல்களையும் பற்றித் தியானிப்பேன்.
அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்; ஆப 2:14தானி 3:28-29சங் 107:31-32சங் 113:3சங் 126:2-3சங் 22:27சங் 22:31எரே 50:28
நான் உம்முடைய மகத்துவமான கிரியைகளைப் பிரசித்தப்படுத்துவேன்.
அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்; ஏசா 63:7சங் 36:102 கொரி 9:11-12சங் 51:14சங் 71:15-16ஏசா 45:24-25சங் 71:19சங் 72:1-3
உமது நீதியைக் குறித்துச் சந்தோஷமாய்ப் பாடுவார்கள்.
யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்; எண் 14:18சங் 103:8சங் 86:5சங் 100:5சங் 116:5மீகா 7:18-20சங் 86:15ரோம 5:20-21
அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும்
உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.
யெகோவா எல்லோருக்கும் நல்லவர்; நாகூ 1:7சங் 100:5மத் 5:45யோனா 4:11அப் 17:25சங் 104:27சங் 65:9-13சங் 36:6-7
தாம் படைத்த அனைத்தின்மேலும் இரக்கமுள்ளவர்.
யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்; சங் 19:1சங் 103:221 பேது 2:9ஏசா 43:20-21சங் 148:1-14வெளி 7:9-121 பேது 2:5எபி 13:15
உமது உண்மையுள்ள மக்கள் உம்மைப் போற்றுவார்கள்.
அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி, 1 நாளாக 29:11-12ஏசா 9:6-7சங் 45:6-7சங் 93:1-2தானி 7:13-14வெளி 11:15-17ஏசா 24:23ஏசா 33:21-22
உம்முடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும், வெளி 12:10சங் 105:1மத் 28:18சங் 105:5சங் 98:1அப் 2:8-11தானி 4:34-35எபே 1:19-21
உமது அரசின் மகிமையான சிறப்பையும் அறிந்துகொள்வார்கள்.
உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு; 1 தீமோ 1:17தானி 7:14ஏசா 9:7சங் 10:16வெளி 11:15தானி 2:441 கொரி 15:21-282 பேது 1:11
உம்முடைய ஆளுகை எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கிறது.
யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்;
தம்முடைய செயல்கள் அனைத்திலும் உண்மையுள்ளவர்.
யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி, சங் 146:8சங் 37:24சங் 94:18லூக் 22:31-32சங் 119:117லூக் 13:11-13சங் 42:5சங் 38:6
தாழ்த்தப்பட்ட அனைவரையும் உயர்த்துகிறார்.
எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன; சங் 136:25சங் 104:27அப் 17:25மத் 6:26சங் 147:8-9யோபு 38:39-41லூக் 12:24ஆதி 1:30
ஏற்றவேளையில் நீர் அவர்களுக்கு உணவு கொடுக்கிறீர்.
நீர் உம்முடைய கையைத் திறந்து, சங் 104:28சங் 107:9சங் 132:15யோபு 38:27
எல்லா உயிரினங்களின் வாஞ்சைகளைத் திருப்தியாக்குகிறீர்.
யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும் உபா 32:4செப்ப 3:5சங் 103:6ஏசா 45:21சங் 116:5ரோம 3:25-26சங் 50:6சங் 89:14
தம்முடைய செயல்களிளெல்லாம் உண்மையுள்ளவராயும் இருக்கிறார்.
யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும், எரே 29:12-13சங் 34:18உபா 4:7யோவா 4:24ஏசா 58:91 யோவா 3:20-22யாக் 4:8யோவா 14:23
உண்மையாகவே அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அருகே இருக்கிறார்.
அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்; சங் 37:4எபே 3:16-20யோவா 15:7மத் 5:61 யோவா 5:15சங் 91:15யோவா 16:24யோவா 15:16
அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு அவர்களைக் காப்பாற்றுகிறார்.
யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்; யாத் 20:6யோவா 10:27-29ரோம 8:28-30சங் 97:10சங் 31:23சங் 1:6சங் 9:17சங் 9:5
ஆனால் கொடியவர்கள் அனைவரையும் தண்டிப்பார்.
என் வாய் யெகோவாவைத் துதிக்கும். சங் 71:8சங் 51:15சங் 150:6சங் 117:1-2சங் 145:1-2சங் 30:12சங் 71:15சங் 71:23-24
எல்லா உயிரினங்களும் அவருடைய பரிசுத்த பெயரை
என்றென்றும் துதிக்கட்டும்.