யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்; சங் 96:101 நாளாக 29:12சங் 99:1வெளி 19:6சங் 103:19சங் 65:6தானி 4:32-34ஏசா 45:12
யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்;
உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.
உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது; சங் 45:6சங் 90:2எபி 13:8நீதி 8:22-23வெளி 1:8வெளி 2:8வெளி 1:17-18தானி 4:34
நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர்.
யெகோவாவே, கடல்கள் எழும்பின; சங் 96:11சங் 69:1-2ஏசா 17:12-13ஏசா 55:12எரே 46:7-8சங் 124:3-5சங் 18:4சங் 98:7-8
கடல்கள் தங்கள் குரலை எழுப்பின;
கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின.
பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், சங் 65:7யோபு 38:11சங் 89:9எரே 5:22மாற் 4:37-39சங் 114:3-5சங் 89:6சங் 92:8
கடல்களின் அலைகளைப் பார்க்கிலும்
உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன; சங் 119:111சங் 19:7-8சங் 29:2லேவி 19:2சங் 119:1291 கொரி 3:16-17எபி 12:14சங் 119:138
பரிசுத்தம் உமது ஆலயத்தை
என்றென்றும் அலங்கரிக்கிறது.