ஏசாயா 58

Isaiah 58

உண்மை உபவாசம்

“உரத்த சத்தமிடு; அடக்கிக்கொள்ளாதே! தீத் 2:15ஓசி 8:1அப் 20:26-27அப் 7:51-52எசேக் 3:17-21மத் 3:7-9எசேக் 3:5-9எசேக் 20:4

எக்காளத்தைப்போல் உனது குரலை உயர்த்து.

என் மக்களுக்கு அவர்களுடைய மீறுதல்களையும்,

யாக்கோபின் குடும்பத்துக்கு அவர்களுடைய பாவங்களையும் அறிவி.

அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடுகிறார்கள், தீத் 1:16ஏசா 29:13மத் 15:7-91 பேது 2:1-2யாக் 1:21-22மாற் 4:16-171 சாமு 15:21-25எசேக் 33:30-33

அவர்கள் என் வழிகளை அறிவதில் ஆவலுள்ளவர்கள்போல் காட்டுகிறார்கள்.

இறைவனின் கட்டளைகளைக் கைவிடாமல்,

சரியானவற்றையே செய்யும் ஒரு நாட்டைப்போல், அவர்கள் தங்களைக் காண்பிக்கிறார்கள்.

அவர்கள் நேர்மையான தீர்மானங்களை என்னிடம் கேட்கிறார்கள்;

இறைவனை நெருங்கிவர விரும்புகிறார்கள்.

‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள். லூக் 18:9-12மல்கி 3:14லேவி 16:29நீதி 28:9யோனா 3:6-8மத் 20:11-12நெகே 5:7தானி 10:2-3

நீர் அதைக் காணவில்லையா?

நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்;

நீர் அதைக் கவனிக்கவில்லையா?’

“நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து,

உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள்.

உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும், 1 இராஜா 21:9-13ஏசா 59:2மத் 6:16-18நீதி 21:27அப் 23:1-2ஏசா 59:6யோவா 18:28யோவே 2:13-14

கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது.

நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால்,

உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே.

இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்? தானி 9:3-19சகரி 7:5ஏசா 49:8எஸ்த 4:16ஏசா 61:2ரோம 12:22 நாளாக 20:3லேவி 16:29

அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ?

உபவாசம் என்பது துக்கவுடையில்,

சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா?

இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும்

அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள்.

“நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது: நெகே 5:10-12ஏசா 58:91 தீமோ 6:1எரே 34:8-11மீகா 3:2-4

அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும்,

நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும்,

ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும்,

ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ?

பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும், மத் 25:35-45எசேக் 18:7லூக் 3:111 யோவா 3:17-18நீதி 28:27நீதி 25:21ஏசா 58:10ரோம 12:20-21

வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும்,

உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும்,

உன் சொந்த உறவினர்களிடமிருந்து

உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ?

அப்பொழுது உனது வெளிச்சம் விடியற்காலை வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கும்; ஏசா 52:12எரே 33:6சங் 37:6எரே 30:17மல்கி 4:2சங் 85:13ஏசா 58:10-11அப் 10:35

நீ விரைவில் சுகவாழ்வு துளிர்க்கும்.

உங்கள் நீதி உங்கள்முன் செல்லும்,

யெகோவாவின் மகிமை உங்களைப் பின்னாலே காக்கும்.

அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா பதிலளிப்பார்; எரே 29:12-13சங் 50:15ஏசா 65:24மத் 7:7-8சங் 91:15ஏசா 1:15சங் 118:5சங் 34:15-17

நீ உதவிகேட்டு அழுவாய், ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று அவர் சொல்வார்.

“ஒடுக்கும் நுகத்தையும், பிழையைச் சுட்டிக்காட்டும் விரலையும்,

தீமையின் பேச்சையும் நீக்கிவிடு.

பசியுற்றோருக்கு உன்னையே கொடுத்து, நீதி 11:24-25ஏசா 42:16ஏசா 58:7-8சங் 37:6யோபு 11:17உபா 15:7-10லூக் 18:22நீதி 14:31

ஒடுக்கப்பட்டோரின் தேவையைத் திருப்தியாக்கு.

அப்பொழுது இருளில் உன்னுடைய வெளிச்சம் உதிக்கும்,

உன்னுடைய இரவும் மத்தியானத்தைப்போல் இருக்கும்.

யெகோவா உன்னை எப்பொழுதும் வழிநடத்துவார்; யோவா 4:14எரே 31:12சங் 32:8ஏசா 49:10யோவா 16:13சங் 25:9நீதி 11:25உன்னத 4:15

வெயிலால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அவர் உன் தேவைகளைத் திருப்தி செய்து,

உன் எலும்புகளை பெலனுள்ளதாக்குவார்.

நீ நன்றாக நீர்ப்பாய்ச்சிய தோட்டத்தைப் போலவும்,

வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.

உன் மக்கள் பாழடைந்த இடிபாடுகளைத் திருப்பிக் கட்டுவார்கள்; ஏசா 61:4ஆமோ 9:14எசேக் 36:33ஆமோ 9:11நெகே 2:17எசேக் 36:8-11ஏசா 51:3எரே 31:38

பழங்கால அஸ்திபாரங்களையும் கட்டி எழுப்புவார்கள்.

நீ உடைந்த மதில்களைத் திருத்திக் கட்டுகிறவன் என்றும்,

குடியிருப்பதற்கு வீதிகளைப் புதுப்பிக்கிறவன் என்றும் அழைக்கப்படுவாய்.

“ஓய்வுநாளின் சட்டங்களை மீறுவதிலிருந்து உன் கால்களை விலக்கு; எரே 17:21-27சங் 92:1-2ஏசா 56:2-6நெகே 13:15-22வெளி 1:10யாத் 20:8-11சங் 84:10உபா 5:12-15

என் பரிசுத்த நாளில் நீ உனக்கு விரும்பிய விதமாய் நடவாதே.

ஓய்வுநாளான யெகோவாவினுடைய பரிசுத்த நாளை,

மகிழ்ச்சியின் நாளென்றும் மேன்மையின் நாளென்றும் அழை.

உன் சொந்த வழியில் போகாமலும், நீ விரும்பியவாறு செய்யாமலும்,

வீண் வார்த்தைகளைப் பேசாமலும் அந்நாளை மேன்மைப்படுத்து.

அப்பொழுது நீ யெகோவாவிடம் மகிழ்ச்சிகொள்வாய், உபா 32:13யோபு 22:26ஏசா 1:19-20ஆப 3:18-19ஏசா 33:16உபா 33:29ஏசா 40:5சங் 37:4

நாட்டின் உயர்ந்த இடங்களில் நான் உன்னை ஏறியிருக்கும்படி செய்வேன்.

உன் தகப்பன் யாக்கோபின் சுதந்திரத்தில் நீ களிப்படையும்படி செய்வேன்.”

யெகோவாவின் வாயே இதைச் சொல்லிற்று.