யெகோவாவைத் துதி 1. சங் 103:22சங் 103:1சங் 104:35சங் 105:45
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; சங் 63:4சங் 104:33சங் 145:1-2சங் 71:14-15வெளி 7:9-17
நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், சங் 118:8-9எரே 17:5-6ஏசா 2:22சங் 108:12ஏசா 31:3சங் 62:9ஏசா 37:6சங் 60:11
உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; பிரச 12:7சங் 104:29ஆதி 2:7ஆதி 3:191 கொரி 2:6தானி 5:23யோபு 27:3சங் 33:10
அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், எரே 17:7-8சங் 144:15சங் 71:5சங் 33:12சங் 46:11சங் 84:12யாத் 3:6ஆதி 32:24-29
தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம்
நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவரே வானத்தையும் பூமியையும் யாத் 20:11வெளி 14:7சங் 100:5சங் 136:5-6கொலோ 1:16ஆதி 1:1எரே 32:17நீதி 8:28-29
கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்;
யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; சங் 103:6சங் 68:6ஏசா 61:1நீதி 22:22-23சகரி 9:11-12லூக் 4:18சங் 10:18சங் 142:7
பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.
யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், சங் 11:7சங் 145:14அப் 26:18மத் 9:30எபே 1:18ஏசா 35:52 கொரி 7:6யோவா 16:27
யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார்,
யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், சங் 68:5உபா 10:18-19சங் 147:6யாத் 22:21-22மல்கி 3:5நீதி 15:25எரே 49:11யாக் 1:27
அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்,
ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சங் 10:16யாத் 15:18வெளி 11:15தானி 6:26தானி 7:14ஏசா 12:6ஏசா 9:7யோவே 3:17
சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார்.
யெகோவாவைத் துதி.