யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்? சங் 22:1சங் 27:9சங் 13:1-3எரே 14:8யோபு 13:24சங் 44:24சங் 46:1சங் 30:7
துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்?
கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; சங் 59:12சங் 36:11சங் 7:16நீதி 5:22சங் 31:18சங் 119:122ஏசா 10:12-13சங் 140:5
அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்; சங் 94:4லூக் 12:19சகரி 11:5-8மீகா 6:10-12உபா 29:19யாத் 15:9ஏசா 37:23யோபு 31:24
அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான்.
கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை; சங் 14:1-2ரோம 1:28அப் 8:22ஆதி 6:5உபா 8:14ரோம 1:21யாத் 5:2ஏசா 65:2
அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை.
அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன; ஏசா 26:11ஓசி 14:9சங் 12:5சங் 92:5-61 இராஜா 20:10-111 இராஜா 20:132 சாமு 5:6ஓசி 9:9
உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்;
தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான்.
அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை, பிரச 8:11ஏசா 56:12மத் 24:481 தெச 5:3நாகூ 1:10சங் 11:1சங் 15:5வெளி 18:7
எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான்.
அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது; சங் 7:14சங் 140:9சங் 140:3சங் 59:12சங் 64:3யாக் 3:6-8எரே 9:3யோபு 20:12
அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன.
அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்; ஆப 3:141 சாமு 22:18எரே 22:171 சாமு 23:232இராஜா 21:16லூக் 8:1நீதி 1:11-12நீதி 6:12-13
பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான்.
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து,
பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான். சங் 17:12சங் 59:3மீகா 7:2சங் 35:10ஆமோ 2:6-7ஆமோ 3:4ஆமோ 5:11-12எசேக் 22:29
அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்;
அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.
அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்; 1 சாமு 18:21-261 சாமு 23:21-221 சாமு 2:362 சாமு 15:5
அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள்.
“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்; எசேக் 8:12சங் 94:7சங் 10:6சங் 73:11பிரச 8:11எசேக் 9:9சங் 64:5யோபு 22:13-14
அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை”
என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்; மீகா 5:9சங் 9:12சங் 94:2ஏசா 33:10சங் 17:7ஏசா 26:11சங் 3:7சங் 7:6
ஆதரவற்றோரை மறவாதிரும்.
கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்? லூக் 10:161 தெச 4:82 நாளாக 24:222 சாமு 12:9-10எண் 11:20சங் 74:10சங் 74:18ஆதி 42:22
“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று
அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?
ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்; சங் 68:5சங் 146:9சங் 55:22உபா 10:181 பேது 4:19ஓசி 14:3எரே 49:111 பேது 5:7
நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து,
அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர்.
பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்;
திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.
கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும். யோபு 38:15சங் 37:17செப்ப 1:12சங் 7:9எசேக் 30:21-22எரே 2:34சகரி 11:17எசேக் 23:48
தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும்.
இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்; எரே 10:10சங் 29:101 தீமோ 1:17தானி 4:34தானி 6:26உபா 8:20சங் 145:131 தீமோ 6:15-16
அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள்.
யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்; சங் 145:192 நாளாக 34:27சங் 34:151 பேது 3:12ஏசா 65:24சங் 37:41 நாளாக 29:182 நாளாக 33:12-13
அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார்.
பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும் சங் 9:9சங் 82:3ஏசா 11:41 கொரி 15:47-48லூக் 18:7-8சங் 17:14லூக் 16:25பிலி 3:18-19
மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி,
நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.