எலிப்பாஸ் பேசுதல்
அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
“மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ? லூக் 17:10கலா 6:7-8யோபு 35:6-8நீதி 3:13-18சங் 16:2யோபு 21:15பிரச 7:11-12மத் 5:29
ஞானவானாலும் அவருக்கு பயன் உண்டோ?
நீ நீதிமானாய் இருந்திருந்தாலும், 2 கொரி 7:1நீதி 15:8நீதி 11:1நீதி 12:22சங் 147:10-111 நாளாக 29:17அப் 24:16யோபு 23:10-12
எல்லாம் வல்லவருக்கு அது மகிழ்ச்சி அளிக்குமோ?
உன் வழிகள் குற்றமற்றவையாய் இருந்தாலும் அதினால் அவருக்கு இலாபம் என்ன?
“அவர் உன்னைக் கடிந்துகொண்டு, யோபு 14:3சங் 143:2ஏசா 3:14-15வெளி 3:19யோபு 16:21யோபு 19:29யோபு 23:6-7யோபு 34:23
உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ?
உன் கொடுமை பெரிதானதல்லவோ? யோபு 15:5-6சங் 40:12யோபு 11:14யோபு 11:6யோபு 15:31-34யோபு 21:27யோபு 32:3யோபு 4:7-11
உன் பாவங்கள் முடிவில்லாதவை அல்லவோ?
நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு, யாத் 22:26எசேக் 18:12எசேக் 18:16உபா 24:10-18யோபு 24:3உபா 24:6யோபு 24:9-10யோபு 31:19-20
ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய்.
நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை; யோபு 31:17ஏசா 58:7மத் 25:42எசேக் 18:16எசேக் 18:7உபா 15:7-11ஏசா 58:10யோபு 31:31
பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய்.
நீ நிலத்திற்கு உரிமையாளன். ஏசா 9:151 இராஜா 21:11-15ஏசா 3:3யோபு 13:8யோபு 29:7-17யோபு 31:34மீகா 7:3சங் 12:8
மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய்.
நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்; எசேக் 22:7யோபு 24:21யோபு 24:3ஏசா 10:2யோபு 31:21உபா 27:19யாத் 22:21-24எசேக் 30:22
அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய்.
அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன; யோபு 13:21யோபு 18:8-10யோபு 6:41 தெச 5:3நீதி 1:27சங் 11:6யோபு 19:6நீதி 3:25-26
திடீரென வரும் துன்பம் உன்னைத் திகிலூட்டுகிறது.
அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது; புலம் 3:54சங் 69:1-2யோனா 2:3யோபு 18:18யோபு 18:6யோபு 19:8யோபு 38:34யோபு 5:14
வெள்ளமும் உன்னை மூடுகிறது.
“வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்? பிரச 5:2ஏசா 66:1யோபு 11:8சங் 8:3-4ஏசா 57:15சங் 115:3சங் 115:16
மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்? எசேக் 8:12சங் 10:11எசேக் 9:9சங் 73:11ஏசா 29:15சங் 59:7சங் 94:7-9சங் 64:5
இப்படிப்பட்ட இருளின்வழியே அவர் நியாயந்தீர்க்கிறாரோ?
வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன; சங் 97:2சங் 139:11-12சங் 33:14எரே 23:24யோபு 26:9யோபு 34:22லூக் 12:2-3சங் 139:1-2
அதினால் அவர் எங்களைக் காண்கிறதில்லை’ என்கிறாய்.
தீய மனிதர் சென்ற லூக் 17:26-27ஆதி 6:11-13ஆதி 6:5
பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்; யோபு 15:32ஆதி 7:17-241 பேது 3:19-202 பேது 2:5ஆதி 7:11மத் 24:37-39சங் 55:23பிரச 7:17
அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்! யோபு 21:14-15சங் 4:6ரோம 1:28ஏசா 30:11யோபு 21:10மல்கி 3:14மத் 8:29மத் 8:34
எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள்.
இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; யோபு 21:16யோபு 12:61 சாமு 2:7அப் 14:17எரே 12:2சங் 17:14சங் 1:1அப் 15:16
நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; சங் 58:10சங் 107:42சங் 52:6யோபு 9:23நீதி 11:10சங் 48:11சங் 97:8வெளி 18:20
குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
‘பகைவர்கள் அழிய, 2 பேது 2:6-7ஆதி 19:24யோபு 1:16யோபு 20:26யோபு 15:30யோபு 15:5-6யோபு 20:18-19யோபு 21:27-28
நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள்.
“இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு; 1 நாளாக 28:9ஏசா 27:5பிலி 4:7சங் 34:10எபே 2:14-172 கொரி 5:20அப் 10:36யோவா 17:3
உனக்குச் செழிப்பு உண்டாகும்.
அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள். சங் 119:11யோபு 23:12உபா 4:1-2உபா 6:6-9எரே 15:16நீதி 4:21நீதி 4:4லூக் 2:19
அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள்.
நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி, யோபு 11:13-14சகரி 1:3யோபு 8:5-6ஏசா 55:6-7ஓசி 14:1-22 தீமோ 2:19அப் 26:20யோசு 7:13-16
எல்லாம் வல்லவரிடத்தில் திரும்பினால்,
உன் பழைய நிலைமையை அடைவாய்.
நீ தூளைப்போல் பொன்னையும், 1 இராஜா 9:28ஏசா 13:121 இராஜா 10:211 இராஜா 22:482 நாளாக 1:52 நாளாக 9:102 நாளாக 9:27ஆதி 10:29
ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் எண்ணிக்கொள்.
அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும், ஏசா 33:6சங் 16:5-6ஆதி 15:1சங் 18:2சங் 84:11ஏசா 41:10யாக் 2:52 கொரி 6:10
உனக்குரிய சிறந்த வெள்ளியாகவும் இருப்பார்.
அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு, ஏசா 58:14சங் 37:4யோபு 27:10யோபு 11:15ரோம 7:22சங் 86:41 யோவா 3:20-21சங் 143:8
இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய்.
நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்; ஏசா 58:91 யோவா 5:14-15சங் 116:1சங் 91:15சங் 50:14-15யோபு 33:26சங் 66:17-20பிரச 5:4
நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய்.
நீ தீர்மானிப்பது செய்யப்படும், மத் 21:22சங் 90:17சங் 20:4ஏசா 30:21நீதி 4:18யோவா 8:12புலம் 3:37மல்கி 4:2
உன் வழிகளிலும் ஒளி பிரகாசிக்கும்.
மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’ யாக் 4:6யோபு 5:19-271 பேது 5:5லூக் 1:52மத் 23:12சங் 91:14-16ஏசா 66:2லூக் 18:9-14
என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார்.
அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்; யோபு 42:7-8யாக் 5:15-16ஆதி 18:26-32சங் 18:20அப் 27:24மல்கி 1:9மத் 17:19-20சங் 24:4
உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.”