யோபு 21

Job 21

யோபு பேசுதல்

அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:

“என்னுடைய வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; எபி 2:1ஏசா 55:2நியாயாதி 9:7யோபு 13:3-4யோபு 15:11யோபு 16:2யோபு 18:2யோபு 33:1

இது நீங்கள் எனக்குக் கொடுக்கும் ஆறுதலாயிருக்கட்டும்.

நான் பேசும்வரை பொறுத்திருங்கள், யோபு 16:10யோபு 17:2யோபு 16:20யோபு 12:4-5யோபு 13:13யோபு 13:9யோபு 33:31-33

நான் பேசினபின்பு நீங்கள் என்னைக் கேலி செய்யலாம்.

“நான் முறையிடுவது மனிதனிடமோ? சங் 102:1சங் 142:2-3சங் 42:111 சாமு 1:162இராஜா 6:26-27யாத் 6:9யோபு 10:1-2யோபு 6:11

நான் ஏன் பொறுமையற்றவனாய் இருக்கக்கூடாது?

என்னைப் பார்த்து வியப்படையுங்கள்; நியாயாதி 18:19யோபு 29:9யோபு 40:4நீதி 30:32ஆமோ 5:13யோபு 17:8யோபு 19:20-21யோபு 2:12

கையினால் உங்கள் வாயைப் பொத்திக்கொள்ளுங்கள்.

நான் இவற்றை நினைக்கும்போது பயப்படுகிறேன்; ஆப 3:16புலம் 3:19-20சங் 119:120சங் 77:3சங் 88:15

என் உடல் நடுங்குகிறது.

கொடியவர்கள் முதுமையடைந்தும், சங் 73:3-12யோபு 12:6எரே 12:1-3சங் 37:35ஆப 1:13சங் 17:10தானி 4:17ஆப 1:15-16

வலியோராய் வாழ்ந்து கொண்டிருப்பது ஏன்?

அவர்களோடே அவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு முன்பாகவே, நீதி 17:6யோபு 18:19யோபு 20:10யோபு 20:28யோபு 5:3-4சங் 17:14

அவர்கள் சந்ததி அவர்கள் கண்முன்னே நிலைத்திருப்பதைக் காண்கிறார்கள்.

அவர்களுடைய வீடுகள் பயமின்றிப் பாதுகாப்பாய் இருக்கின்றன; யோபு 9:34சங் 73:5ஏசா 57:19-21யோபு 15:21யோபு 18:11சங் 73:19

இறைவனின் தண்டனைக்கோல் அவர்கள்மேல் இல்லை.

அவர்களுடைய காளைகள் இனப்பெருக்கத்தில் தவறுவதில்லை; யாத் 23:26உபா 28:11உபா 7:13-14பிரச 9:1-2லூக் 12:16-21லூக் 16:19சங் 144:13-14

பசுக்கள் சினையழியாமல் கன்றுகளை ஈனும்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளை மந்தையைப்போல் வெளியே அனுப்புகிறார்கள்; சங் 107:41சங் 127:3-5

அவர்களுடைய சிறுபிள்ளைகள் குதித்து ஆடுகிறார்கள்.

அவர்கள் தம்புரா, யாழ் ஆகியவற்றின் இசைக்கேற்ப பாடுகிறார்கள்; ஆமோ 6:4-6ஆதி 4:21ஏசா 5:12ஆதி 31:27ஏசா 22:13

புல்லாங்குழல் இசையில் அவர்கள் களிப்படைகிறார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு யோபு 36:11லூக் 12:19-20லூக் 17:28-29மத் 24:38-39சங் 73:4

கல்லறைக்கும் சமாதானத்தோடே 1 செல்கிறார்கள்.

இருந்தும் அவர்கள் இறைவனிடம், ‘எங்களை விட்டுவிடும்! யோபு 22:17ரோம 8:72 தெச 2:10-12சங் 10:42 தீமோ 4:3-4யோவா 15:23-24யோவா 3:19-20நீதி 1:29

உமது வழிகளை அறிய நாங்கள் விரும்பவில்லை.

எல்லாம் வல்லவருக்கு நாம் பணிசெய்ய அவர் யார்? யாத் 5:2யோபு 34:9மல்கி 1:13-14ஏசா 30:11நீதி 30:9சங் 12:4ஓசி 13:6ஏசா 45:19

அவருக்கு ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன?’ என்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய செல்வம் அவர்கள் கைகளில் இல்லை; யோபு 22:18சங் 1:1ஆதி 49:6நீதி 1:10சங் 49:6-7சங் 52:5-7பிரச 8:8யோபு 1:21

நான் கொடியவர்களின் ஆலோசனையிலிருந்து விலகி நிற்கிறேன்.

“எத்தனை முறை கொடியவர்களுடைய விளக்கு அணைக்கப்படுகிறது? யோபு 18:5-6நீதி 13:9நீதி 20:20யோபு 18:18லூக் 12:46மத் 25:8நீதி 24:20சங் 32:10

எத்தனை முறை பொல்லாப்பு அவர்கள்மேல் வருகிறது?

இறைவன் தமது கோபத்தில் அவர்களுக்கு தண்டனையை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

அவர்கள் காற்றுக்குமுன் வைக்கோலைப்போலவும், சங் 1:4சங் 83:13யோபு 13:25சங் 35:5ஏசா 17:13ஏசா 29:5எரே 13:24யாத் 15:7

புயலுக்கு முன்னே பதரைப்போலவும் அள்ளிக்கொண்டு போகப்படுகிறார்கள்.

‘இறைவன் அவர்களுக்குரிய தண்டனைகளை யாத் 20:5எசேக் 18:19-20எசேக் 18:2ஏசா 14:21ஏசா 53:4-6எரே 31:292 கொரி 5:212 தீமோ 4:14

அவர்கள் பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்கிறார்’ என்று சொல்லப்படுகிறதே;

அவர் அவர்களையே தண்டித்து உணர்த்துவார்.

அவர்களின் அழிவை அவர்களின் கண்கள் காணும், ஏசா 51:17சங் 75:8வெளி 14:10எரே 25:15-16எரே 51:7யோபு 27:19லூக் 16:23சங் 60:3

எல்லாம் வல்லவரின் கடுங்கோபத்தை அனுபவிப்பார்கள்.

ஏனெனில், அவர்களுடைய மாதங்களின் எண்ணிக்கை குறையும்போது, யோபு 14:5பிரச 2:18-19யோபு 14:21லூக் 16:27-28சங் 102:24சங் 55:23

அவர்கள் விட்டுச்செல்லும் குடும்பத்தைப்பற்றி அவர்களுக்கு அக்கறை என்ன?

“உயர்ந்தவர்களையும் நியாயந்தீர்க்கிற இறைவனுக்கு ரோம 11:341 கொரி 2:16ஏசா 40:13-141 கொரி 6:32 பேது 2:4பிரச 5:8ஏசா 40:22-23ஏசா 45:9

அறிவைப் போதிக்க முடியுமா?

ஒரு மனிதன் பூரண பாதுகாப்புடனும், சுகத்துடனும், யோபு 20:22-23லூக் 12:19-21சங் 49:17சங் 73:4-5

முழு வலிமையுடனும் இருக்கையிலேயே சாகிறான்.

அவனுடைய உடல் ஊட்டம் பெற்று, நீதி 3:8யோபு 15:27சங் 17:10

எலும்புகள் மச்சைகளால் நிறைந்திருக்கின்றன.

இன்னொருவன் ஒருபோதுமே நன்மை ஒன்றையும் எசேக் 4:16-17யோபு 7:111 இராஜா 17:122 சாமு 17:8பிரச 6:2எசேக் 12:18ஏசா 38:15-17யோபு 10:1

அனுபவிக்காமல் ஆத்துமக் கசப்புடன் சாகிறான்.

இருவருமே தூசியில் ஒன்றாய்க் கிடக்கிறார்கள்; பிரச 9:2ஏசா 14:11யோபு 20:11யோபு 3:18-19யோபு 17:14யோபு 19:26யோபு 24:20சங் 49:14

புழுக்கள் அவர்கள் இருவரையுமே மூடுகின்றன.

“நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்; லூக் 5:22சங் 119:861 பேது 2:19யோபு 15:20-35யோபு 20:29யோபு 20:5யோபு 32:3யோபு 4:8-11

என்னைக் குற்றஞ்சாட்டுவதற்கு நீங்கள் போடும் திட்டங்களையும் நான் அறிவேன்.

‘பெரிய மனிதனின் வீடு எங்கே? கொடியவர்களின் கூடாரங்கள் எங்கே?’ யோபு 20:7யோபு 8:22ஆப 2:9-11யோபு 1:3யோபு 31:37எண் 16:26-34சங் 37:36சங் 52:5-6

என்று கேட்கிறீர்கள்.

பயணம் செய்தவர்களிடம் நீங்கள் ஒருபோதும் கேட்கவில்லையோ? சங் 129:8

அவர்கள் கண்டுரைத்த விவரங்களை நீங்கள் கவனிக்கவில்லையோ?

தீயவன் பொல்லாப்பின் நாளிலிருந்து விடுவிக்கப்படுகிறான்; நீதி 16:42 பேது 2:9-172 பேது 3:7யோபு 20:28ரோம 2:5யூதா 1:13நாகூ 1:2நீதி 11:4

கடுங்கோபத்தின் நாளிலிருந்து அவன் விடுதலையாக்கப்படுகிறான்.

அவன் நடத்தையை அவன் முகத்துக்கு முன்பாகக் கண்டிப்பவன் யார்? உபா 7:10கலா 2:11ரோம 12:191 இராஜா 21:19-242 சாமு 12:7-12அப் 24:25ஏசா 59:13யாக் 2:13

அவன் செய்தவற்றிற்கேற்ப அவனுக்கு எதிர்ப்பழி செய்பவன் யார்?

அவன் குழிக்குள் கொண்டுசெல்லப்படுகிறான். லூக் 16:22எசேக் 32:21-32சங் 49:14

அவனுடைய கல்லறைக்குக் காவலும் வைக்கப்படுகிறது.

பள்ளத்தாக்கின் மண் அவனுக்கு இன்பமாயிருக்கிறது; எபி 9:27யோபு 24:24யோபு 30:23பிரச 1:4பிரச 12:7பிரச 8:8ஆதி 3:19யோபு 17:16

எல்லா மனிதரும் அவனுக்குப்பின் செல்கிறார்கள்,

எண்ணில்லா திரள்கூட்டம் அவன்முன் செல்கிறது.

“வீண் பேச்சினால் நீங்கள் எப்படி என்னை ஆறுதல்படுத்துவீர்கள்? யோபு 16:2யோபு 13:4யோபு 32:3யோபு 42:7

உங்கள் பதில்களில் வஞ்சனையைத் தவிர வேறொன்றுமில்லை!”