சங்கீதங்கள் 12

Psalms 12
சங்கீதம் 12

செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; ஏசா 57:1எரே 5:1மத் 24:12ஏசா 59:13-15ஏசா 1:21-22ஏசா 63:5சங் 6:1ஆதி 6:12

மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.

ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; ரோம 16:18எரே 9:8சங் 41:6சங் 10:7சங் 144:8சங் 5:9யாக் 1:8சங் 28:3

அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி

இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.

முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் நீதி 18:21தானி 7:8வெளி 13:5சங் 17:101 சாமு 17:43-441 சாமு 2:32இராஜா 19:23-242 பேது 2:18

பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.

“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; யாக் 3:5-62 தெச 2:4யாத் 5:2யோபு 21:14-15எரே 18:18தானி 3:15ஆதி 3:5எரே 2:31

எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?”

என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சங் 34:6நீதி 14:31யாக் 5:4சங் 146:7-8ஏசா 33:10மீகா 7:8-9யாத் 2:23-24யோபு 5:15

இதினால் நான் இப்பொழுது எழுந்து,

அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.

யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. நீதி 30:5சங் 18:302 சாமு 22:31சங் 19:8சங் 66:10சங் 119:140

அவை களிமண் உலையில்

ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.

யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; 1 சாமு 2:9சங் 121:81 பேது 1:5சங் 145:20சங் 37:40உபா 33:3ஏசா 27:3மத் 3:7

கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.

இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் மாற் 14:63-65நீதி 29:12சங் 55:10-11ஓசி 5:11ஏசா 32:4-6தானி 11:21எஸ்த 3:6-15நியாயாதி 9:18-57

கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.