சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். சங் 120:1சங் 123:1எரே 3:23ஏசா 2:3சங் 2:6சங் 87:1சங் 68:15-16சங் 78:68
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, ஏசா 41:13சங் 124:8எபி 13:6ஏசா 40:28-29சங் 146:5-6சங் 46:1சங் 115:15எரே 20:11
எனக்கு உதவி வரும்.
அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; நீதி 3:26நீதி 3:231 சாமு 2:9சங் 91:12சங் 66:91 பேது 1:5ஏசா 27:3சங் 127:1
உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், சங் 127:1ஏசா 27:3சங் 32:7-81 இராஜா 18:27பிரச 8:16சங் 27:1வெளி 7:15
உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
யெகோவா உன்னைக் காக்கிறவர்; ஏசா 25:4சங் 91:1யாத் 13:21சங் 16:8ஏசா 4:5-6சங் 109:31ஏசா 32:2மத் 23:37
யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
பகலில் சூரியனோ, வெளி 7:16ஏசா 49:10சங் 91:5-10யோனா 4:8
இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; 2 தீமோ 4:18சங் 91:9-12சங் 41:2நீதி 12:21சங் 145:20யோபு 5:19-27சங் 34:22ரோம 8:35-39
அவர் உன் வாழ்வைக் காப்பார்.
யெகோவா உன் போக்கையும் வரத்தையும் உபா 28:6நீதி 2:8நீதி 3:6சங் 113:2எஸ்றா 8:31சங் 115:18எஸ்றா 8:21யாக் 4:13-16
இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.