இஸ்ரயேலின் மீட்பு
அந்த நாளிலே, எசேக் 29:3ஏசா 51:9ஏசா 66:16வெளி 12:3யோபு 26:13சங் 104:26வெளி 20:2சங் 74:13-14
யெகோவா விரைந்தோடும் பாம்பை,
லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை
கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள
வாளினால் தண்டிப்பார்.
அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார்.
அந்த நாளிலே, எரே 2:21ஏசா 5:1-7லூக் 20:9-18மத் 21:33-46எண் 21:17சங் 80:8-19
“பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்:
யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்; ஏசா 58:11யோவா 15:1-21 சாமு 2:9சங் 121:3-5எசேக் 34:11எசேக் 37:14எசேக் 34:24ஏசா 46:9
இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.
ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி,
நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன்.
நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை. எபி 6:8ஏசா 10:17மத் 3:122 சாமு 23:6சங் 85:32 பேது 2:9எசேக் 16:63ஏசா 12:1
அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால்,
நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்;
அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன்.
அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்; ஏசா 25:4யோபு 22:21எபே 2:16-172 கொரி 5:19-21கொலோ 1:20-21எசேக் 34:25-26எபி 6:18ஓசி 2:18-20
என்னுடன் சமாதானம் செய்யட்டும்,
ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.”
வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி, ஏசா 37:31ஓசி 14:5-6ரோம 11:16-26ஓசி 2:23ஏசா 54:1-3சங் 92:13-15சகரி 2:11ஏசா 60:22
இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து,
முழு உலகத்தையும் பலனால் நிரப்பும்.
இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல, ஏசா 37:36-38தானி 2:31-35ஏசா 10:20-25ஏசா 14:22-23ஏசா 17:14ஏசா 17:3எரே 30:11-16எரே 50:33-34
இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ?
இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல்,
இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே!
அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்; எசேக் 19:12ஓசி 4:1எரே 10:24எரே 4:111 பேது 1:6ஓசி 13:15ஓசி 6:1-2எரே 2:17-37
கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல்,
அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார்.
யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும். ஏசா 48:10ரோம 11:27தானி 11:35ஏசா 17:81 கொரி 11:322 நாளாக 14:52 நாளாக 34:42 நாளாக 36:19
அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே:
அவர் பலிபீடக் கற்களை எல்லாம்
சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது,
அசேரா தேவதைத் தூண்களோ,
தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது.
அரணாக்கப்பட்ட பட்டணம், ஏசா 17:2ஏசா 17:9ஏசா 32:13-14எரே 26:18எரே 26:6மீகா 3:12எசேக் 36:4ஏசா 25:2
குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது;
அங்கே கன்றுகள் மேயும்,
அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்;
அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும்.
அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன; ஏசா 1:3ஏசா 43:1ஏசா 43:7ஏசா 44:24எரே 8:7எசேக் 9:10எரே 4:22யோவா 15:6
பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்;
எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை,
அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை.
அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள். ஆதி 15:18உபா 30:3-4ஏசா 56:8நெகே 1:9ஆமோ 9:9ஏசா 11:11-16ஏசா 17:6ஏசா 24:13-16 அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள். மத் 24:31லேவி 25:9எபி 12:22ஏசா 19:23-251 நாளாக 15:24ஏசா 11:16லூக் 4:18சகரி 14:16