தாவீதின் மன்றாட்டு
யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும், சங் 142:6சங் 61:11 யோவா 3:21தானி 9:18-19மத் 15:8சங் 145:182 நாளாக 7:15ஏசா 29:13
என் கதறுதலுக்குச் செவிகொடும்;
வஞ்சகமில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும்
என் மன்றாட்டைக் கேளும்.
நான் குற்றமற்றவனென்ற தீர்ப்பு உம்மிடத்திலிருந்து வரட்டும்; சங் 37:62 தெச 1:6-9எசேக் 18:25எசேக் 18:29யூதா 1:24எசேக் 33:17சங் 37:33எசேக் 33:20
உமது கண்கள் நேர்மையானதைக் காணட்டும்.
நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும், யோபு 23:10அப் 11:23சங் 26:2சங் 39:1மல்கி 3:2எரே 50:20நீதி 13:3சங் 119:106
இரவில் என்னைச் சோதித்தாலும்,
நீர் எந்தத் தீங்கையும் கண்டுபிடிக்கமாட்டீர்;
என் வாயினால் நான் பாவம் செய்யமாட்டேனென்று தீர்மானித்திருக்கிறேன்.
மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும், 1 கொரி 3:31 பேது 5:8சங் 119:9-11எபே 6:17மத் 4:10மத் 4:7வெளி 12:11யாக் 1:18
உமது உதடுகளின் கட்டளையினால் வன்முறையாளர்களின் வழிகளிலிருந்து,
என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன; சங் 44:18சங் 119:1331 சாமு 2:9சங் 121:3சங் 121:7சங் 18:36சங் 38:16எரே 10:23
என்னுடைய பாதங்கள் தடுமாறவில்லை.
இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சங் 116:2சங் 86:7சங் 66:19-20சங் 88:2சங் 55:16தானி 9:17-19ஏசா 37:17ஏசா 37:20
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுக்கிறவர்.
எனக்குச் செவிகொடுத்து என் மன்றாட்டைக் கேளும்.
உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை, சங் 60:5சங் 20:6சங் 31:21சங் 5:11-12ஏசா 41:101 சாமு 17:45-572 நாளாக 16:92இராஜா 19:34
அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தினால் காப்பாற்றுகிறவரே,
உமது உடன்படிக்கையின் அன்பின் அதிசயத்தைக் காண்பியும்.
உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்; உபா 32:10சங் 91:4சங் 91:1நீதி 7:2சங் 61:4சகரி 2:8லூக் 13:34சங் 36:7
உமது சிறகுகளின் நிழலின்கீழ்,
என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும் சங் 35:4சங் 35:71 நாளாக 17:91 சாமு 24:11சங் 31:20சங் 35:12சங் 7:5
என்னைச் சூழ்ந்துகொள்ளும் என் பகைவரிடமிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.
அவர்கள் தங்கள் உணர்வற்ற இருதயங்களை கடினமாக்குகிறார்கள், 1 சாமு 2:3சங் 123:4சங் 31:18மத் 13:15வெளி 13:5-62 பேது 2:18அப் 28:27யாத் 15:9
அவர்களின் வாய்கள் பெருமையுடன் பேசுகின்றன.
அவர்கள் என்னைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள், நீதி 6:13-14சங் 37:14சங் 10:8-101 சாமு 23:261 சாமு 24:2-31 சாமு 26:2-3சங் 88:17
இப்பொழுது என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
என்னைத் தரையில் விழத்தள்ளுவதற்காக
அவர்களுடைய கண்கள் விழிப்பாயிருக்கின்றன.
அவர்கள் பசியால் துடித்து இரையைத் தேடுகிற சிங்கத்தைப் போலவும் சங் 7:21 பேது 5:8சங் 10:92 தீமோ 4:17சங் 22:13
மறைவில் பதுங்கியிருக்கிற பெரும் சிங்கத்தைப் போலவும் இருக்கிறார்கள்.
யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்; சங் 3:7சங் 44:26சங் 7:6அப் 4:28சங் 22:20சங் 44:23சங் 7:11-13ஏசா 10:15
கொடியவர்களிடமிருந்து உமது வாளினால் என்னைத் தப்புவியும்.
யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும், யோபு 22:18யோவா 17:14யோவா 15:19யோவா 8:23லூக் 12:19-21லூக் 16:25லூக் 16:8சங் 49:17-19
இம்மையிலேயே தங்கள் வெகுமதியைப் பெறுகிற இவ்வுலக மனிதரிடமிருந்தும்,
உமது கரத்தினால் என்னைக் காப்பாற்றும்;
நீர் கொடியவர்களுக்கென்று வைத்திருக்கிறவைகளால் அவர்களுடைய வயிற்றை நிரப்பும்;
அவர்களுடைய பிள்ளைகள் நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளட்டும்;
மீதியானதை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லட்டும்.
நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்; 2 கொரி 3:18மத் 5:6சங் 11:7சங் 16:111 யோவா 3:2-3சங் 4:6-7பிலி 3:21ஏசா 26:19
நான் விழித்தெழும்போது உம்மைக் கண்டு திருப்தியடைவேன்.