சங்கீதங்கள் 60

Psalms 60
சங்கீதம் 60

ஆராம் நகராயிம், ஆராம் சேபா என்ற அரசுகளோடு தாவீது போர் செய்கையில் யோவாப் உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெற்றிக்கொண்டபோது, “உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் மிக்தாம் என்னும் சங்கீதத்தை போதனையாக தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; 2 சாமு 8:12-132 சாமு 8:3சங் 44:91 நாளாக 18:12-131 நாளாக 18:32 சாமு 5:202இராஜா 14:7சங் 85:4

நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும்.

நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; 2 நாளாக 7:14ஓசி 6:1ஏசா 30:26எசேக் 34:16ஏசா 5:25எரே 10:10எரே 4:24எரே 48:38

அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும்.

கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; ஏசா 51:17சங் 71:20ஏசா 51:22எரே 25:15எசேக் 23:31-32சங் 75:8தானி 9:12ஆப 2:16

தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்.

ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள், சங் 20:5யாத் 17:15ஏசா 11:12ஏசா 5:26ஏசா 13:2உன்னத 2:4ஏசா 49:22ஏசா 59:14-15

வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர்.

நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, ஏசா 41:10யாத் 15:6சங் 108:6-13சங் 17:7சங் 18:35மத் 17:5சங் 60:12சங் 74:11

உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.

இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: ஆதி 12:6யோசு 13:27சங் 89:352 சாமு 3:182 சாமு 7:18-20ஆமோ 4:2யோசு 1:6யோசு 17:7

“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்;

சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; ஆதி 49:10உபா 33:17யோசு 13:311 நாளாக 12:191 நாளாக 12:37யோசு 17:11 சாமு 28:2யோசு 17:5-6

எப்பிராயீம் என் தலைக்கவசம்,

யூதா என் செங்கோல்.

மோவாப் என் கழுவும் பாத்திரம், 2 சாமு 8:1-22 சாமு 8:141 நாளாக 18:1-21 நாளாக 18:132 சாமு 21:15-22சங் 108:9-102 சாமு 5:17-25ஆதி 25:23

நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்;

நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”

அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? 2 சாமு 12:26-312 சாமு 11:11 நாளாக 11:17-191 நாளாக 11:6நியாயாதி 1:12நியாயாதி 1:24-25

யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?

இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், யோசு 7:12சங் 108:11உபா 1:42சங் 60:1உபா 20:41 நாளாக 10:1-141 சாமு 4:10-111 சாமு 4:6-7

எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?

பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; சங் 146:3சங் 108:12ஏசா 30:7சங் 124:1-3சங் 130:8ஏசா 31:3சங் 62:1சங் 25:22

ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.

இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; சங் 44:5யோசு 1:9ஏசா 63:31 நாளாக 19:13வெளி 19:15மல்கி 4:32 சாமு 10:12ஏசா 10:6

அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.