சங்கீதங்கள் 20

Psalms 20
சங்கீதம் 20

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக; நீதி 18:10சங் 138:7சங் 91:14-15சங் 46:11எபி 5:7ஏசா 50:10மத் 26:38-39சங் 46:1

யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக.

யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி, 1 இராஜா 8:44-451 இராஜா 6:162 நாளாக 20:8-9ஏசா 12:6ஏசா 14:32சங் 3:42 சாமு 5:72 சாமு 6:17

சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக.

யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து, 2 நாளாக 7:1சங் 51:19அப் 10:41 நாளாக 21:26எபே 5:2ஆதி 4:41 பேது 2:5ஏசா 60:7

உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக.

யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து, சங் 145:19சங் 37:4மத் 21:22சங் 21:2யோவா 16:23ரோம 8:27-28நீதி 11:231 யோவா 5:14-15

உனது திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வாராக.

யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்; யாத் 17:151 சாமு 1:17சங் 60:4ஏசா 25:9ஆப 3:18ஏசா 61:10ஏசா 12:1-3லூக் 1:47

நமது இறைவனுடைய பெயரில் நாங்கள் வெற்றிக்கொடிகளை உயர்த்துவோம்.

யெகோவா உன் வேண்டுதல்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பாராக.

நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்: சங் 28:8அப் 5:31சங் 18:50சங் 89:20-23அப் 4:10ஏசா 63:15மத் 6:9சங் 2:2

யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார்.

அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து

தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார்.

சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஏசா 31:1எரே 17:5நீதி 21:31சங் 33:16-172 நாளாக 32:82 நாளாக 14:112 நாளாக 20:12-20சங் 45:17

ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம்.

அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள், சங் 125:1மீகா 7:8எரே 17:7-8சங் 34:21-22நியாயாதி 5:31சங் 146:5-9

நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம்.

யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்! சங் 5:2சங் 118:25-26சங் 44:4மத் 21:15சங் 74:12மத் 21:9சங் 17:6சங் 2:6-10

நாங்கள் கூப்பிடும்போது எங்களுக்குப் பதில் தாரும்.