சங்கீதங்கள் 18

Psalms 18
சங்கீதம் 18

யெகோவாவின் பணியாளன் தாவீதின் சங்கீதம். யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை அவன் யெகோவாவுக்குப் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அவன் சொன்னதாவது:

யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன். 2 சாமு 22:1-51கொலோ 1:111 யோவா 4:19ஏசா 12:1-6பிலி 4:13சங் 116:1-6சங் 34:19சங் 118:14

யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; சங் 144:2சங் 62:7நீதி 18:10சங் 19:14சங் 91:2சங் 62:22 சாமு 22:3எரே 16:19

என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,

என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார்.

துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; சங் 91:15லூக் 1:71சங் 62:8ரோம 8:31-392 சாமு 22:4சங் 145:3சங் 55:16சங் 96:4

என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.

மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; சங் 116:32 கொரி 1:9மத் 27:24-25மாற் 14:33-342 சாமு 22:5-6ஏசா 53:3-4யோனா 2:2-7மத் 26:47

அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.

பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; சங் 86:13அப் 2:24சங் 88:15-17சங் 88:3-8பிரச 9:12சங் 116:3

மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.

என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; சங் 50:152 சாமு 22:7சங் 34:15சங் 130:1-2சங் 120:1சங் 18:3-4சங் 27:4-52 நாளாக 30:27

என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்;

அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்;

என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது.

பூமி நடுங்கி அதிர்ந்து, அப் 4:31எசேக் 38:19-20சங் 68:7-8அப் 16:25-26உபா 32:22நியாயாதி 5:4எரே 4:241 கொரி 13:2

மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன;

யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின.

அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; சங் 21:9சங் 11:6நாகூ 1:5-6ஆமோ 4:11தானி 7:10ஆதி 19:28லேவி 10:2எண் 16:35

அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது;

நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.

அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; சங் 144:5-152 பேது 3:102 சாமு 22:10உபா 33:26உபா 5:22-23எபி 12:26யோவா 13:7யோவே 3:16

கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.

அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; சங் 104:32 சாமு 22:11-12சங் 99:1எசேக் 1:5-14எசேக் 10:20-22சங் 80:1

அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.

அவர் இருளைத் தமது போர்வையாகவும், உபா 4:11சங் 97:2யோவே 2:2சங் 81:7சங் 91:1சங் 27:5

வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார்.

அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; யோசு 10:11வெளி 16:21யாத் 9:23-24மத் 17:2மத் 17:52 சாமு 22:13-15ஆப 3:4-5சங் 104:2

அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன.

யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; சங் 104:71 சாமு 7:10சங் 140:10சங் 29:3-4உபா 32:24யாத் 20:18எசேக் 10:5ஆப 3:5

மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.

அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; சங் 144:6ஆப 3:11உபா 32:23உபா 32:42ஏசா 30:30யோபு 6:4யோசு 10:10எண் 24:8

மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.

யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் சங் 106:9யாத் 15:8யோபு 4:9மீகா 6:2சங் 76:62 சாமு 22:16எரே 31:37யோசு 3:13-16

உமது கண்டிப்பினாலும்

கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன;

பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.

யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; 2 சாமு 22:17சங் 144:7யோனா 2:5-6சங் 57:3சங் 18:43யாத் 2:10சங் 32:6சங் 40:1-3

ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.

அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் எபி 2:14-15யோபு 16:9சங் 142:6சங் 35:10சங் 69:4-14எபே 6:10-12சங் 118:72 சாமு 22:1

என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.

அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஒபதி 1:10-14உபா 32:35எரே 18:17சங் 46:11சங் 59:161 சாமு 30:62 சாமு 22:19சங் 46:1-2

ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.

அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; சங் 118:5சங் 31:8சங் 18:36யோபு 36:16சங் 40:22 சாமு 22:18-27சங் 37:231 இராஜா 10:9

அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.

யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; சங் 24:41 கொரி 3:8மத் 6:4சங் 58:11யோபு 22:30நீதி 11:18எபி 7:26ஏசா 49:4

என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.

ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; சங் 119:1021 யோவா 2:19அப் 24:16நீதி 8:32சங் 17:4சங் 26:11 தெச 2:102 நாளாக 34:33

என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.

அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; சங் 119:13சங் 119:112சங் 119:30சங் 119:117சங் 119:128யோவா 5:14

அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.

நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, மத் 18:8-9மத் 5:29-301 நாளாக 29:171 சாமு 26:23சங் 11:7சங் 17:3சங் 37:27சங் 7:1-8

பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், மத் 10:41-42ரூத் 2:121 சாமு 26:23எபி 6:162 தெச 1:6-7

அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும்

எனக்குப் பலனளித்திருக்கிறார்.

உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; மத் 5:7சங் 62:12மத் 18:33-351 இராஜா 8:32எசேக் 18:25-30நெகே 9:17சங் 112:4-6சங் 41:1-4

உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.

தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; நீதி 3:34லேவி 26:23-24யாக் 2:13லேவி 26:27-28சங் 109:17-19ரோம 2:4-6ரோம 2:9

ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.

நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; ஏசா 66:2ஏசா 57:15யாக் 2:52 சாமு 22:28சங் 101:52 கொரி 8:9ஏசா 3:9சங் 9:18

ஆனால் பெருமையான பார்வையுள்ளவர்களைத் தாழ்த்துகிறீர்.

யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்; 2 சாமு 22:29யோபு 29:3ஏசா 42:16மத் 4:161 பேது 2:9லூக் 1:79நீதி 20:27சங் 112:4

என் இறைவன் என் இருளை வெளிச்சமாக்குவார்.

உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; 2 சாமு 22:30எபே 6:10-132 கொரி 12:9-10வெளி 3:21கொலோ 2:151 கொரி 15:102 சாமு 5:19-20சங் 144:10

என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.

இறைவனுடைய வழி முழு நிறைவானது: உபா 32:4நீதி 30:52 சாமு 22:31சங் 84:11-12சங் 12:6வெளி 15:3சங் 19:7-10சங் 119:140

யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது;

அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.

யெகோவாவைத்தவிர இறைவன் யார்? உபா 32:31சங் 86:82 சாமு 22:32உபா 32:39ஏசா 45:51 சாமு 2:2ஏசா 45:21-22

நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?

இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி, ஏசா 45:52 கொரி 3:52 சாமு 22:33சங் 28:7சங் 91:2சங் 93:1

என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.

அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, ஆப 3:19உபா 32:13உபா 33:292 சாமு 2:182 சாமு 22:14

உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.

யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; சங் 144:1சங் 46:92 சாமு 22:36ஏசா 28:6ஏசா 45:1எரே 49:35ஓசி 1:5

என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.

நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், 2 சாமு 22:36யாக் 3:17-18சங் 28:7கலா 5:22-232 கொரி 10:1உபா 33:29ஏசா 40:11சங் 17:7

உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது;

உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.

என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நீதி 4:122 சாமு 22:37யோபு 36:16சங் 4:1யோபு 18:7லூக் 12:50லூக் 24:46-48

நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.

நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களைப் பிடித்தேன்; ஏசா 53:10-12சங் 44:5ஏசா 63:1-6எண் 24:17-19சங் 118:11-12சங் 3:7சங் 35:2சங் 35:5

அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.

அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்; 1 சாமு 17:49-511 சாமு 23:52 சாமு 10:1-192 சாமு 18:7-82 சாமு 21:15-222 சாமு 22:392 சாமு 5:1-252 சாமு 8:1-18

அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.

யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; 2 சாமு 22:40-41சங் 18:321 கொரி 15:25-28எபே 1:22ஏசா 45:141 நாளாக 22:18எசேக் 30:24-25யோவா 15:23

என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.

நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; சங் 21:12சங் 94:23

நான் அவர்களை அழித்தேன்.

அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், நீதி 1:28யோபு 27:92 சாமு 22:42-43எசேக் 8:18ஓசி 7:14ஏசா 1:15ஏசா 59:1-2எரே 11:11

ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை;

யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.

நான் அவர்களை காற்றில் கிளம்பும் தூசியைப்போல் நொறுக்கினேன்; ஏசா 10:62இராஜா 13:7ஏசா 41:15-16சகரி 10:5ஏசா 25:10ஏசா 41:2மல்கி 4:3சங் 50:22

நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரி எறிந்தேன்.

நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; ஏசா 55:52 சாமு 3:11 பேது 2:10ஏசா 52:152 சாமு 19:9எபே 1:222 சாமு 22:44-46அப் 5:31

நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர்.

நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.

வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; சங் 66:3சங் 81:152 சாமு 22:44-46உபா 33:292 சாமு 1:13எசேக் 44:7ஏசா 62:8சங் 68:30

அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, மீகா 7:17ஏசா 24:4யாக் 1:11வெளி 6:16

தங்கள் அரண்களிலிருந்து நடுங்கிக்கொண்டு வருகிறார்கள்.

யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! 2 சாமு 22:47சங் 18:2சங் 57:5வெளி 1:18எரே 10:10யோவா 14:19லூக் 1:47சங் 68:20

என் இரட்சகராகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!

எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே; சங் 47:3ரோம 12:192 சாமு 22:48நாகூ 1:2சங் 144:2உபா 32:35

நாடுகளை எனக்குக்கீழ் அடங்கியிருக்கச் செய்பவரும் அவரே.

என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும் அவரே. சங் 140:1சங் 140:11சங் 140:4சங் 86:14சங் 59:1-2சங் 7:16பிலி 2:9சங் 22:27-30

நீர் என் பகைவர்களுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்;

என்னை என் வன்முறையாளர்களிடமிருந்து தப்புவித்தீர்.

ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; ரோம 15:92 சாமு 22:50-511 தீமோ 6:13மத் 26:30சங் 108:1சங் 108:3சங் 138:4சங் 14:7

உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.

யெகோவா தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; சங் 144:102 சாமு 7:13சங் 132:10சங் 89:3-4அப் 2:34-36ஏசா 9:6-7லூக் 1:31-33சங் 78:71-72

அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும்

அவனுடைய சந்ததிகளுக்கும் தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.