அன்பு
நான் மனிதரின் மொழிகளிலும், இறைத்தூதரின் மொழிகளிலும் பேசினாலும், அன்புள்ளவனாய் இராவிட்டால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலத் தாளமாகவும், இசையில்லாமல் ஓசையெழுப்பும் கைத்தாளமாகவுமே இருப்பேன். 1 பேது 4:81 தீமோ 1:5கலா 5:221 கொரி 13:8கலா 5:61 கொரி 13:2-31 கொரி 8:12 பேது 2:18 நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய் இருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளை இடம் பெயரச் செய்யத்தக்க விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பு உள்ளவனாய் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை. 1 யோவா 4:81 கொரி 13:31 யோவா 4:20-21மத் 17:20மத் 21:211 கொரி 16:221 கொரி 12:8-101 கொரி 13:1 எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்பு உள்ளவனாய் இராவிட்டால், அதனால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. யாக் 2:14-17யோவா 15:13மத் 23:5மத் 6:1-4மத் 7:22-231 தீமோ 4:8கலா 5:26எபி 13:9
அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது. 1 பேது 4:8எபே 4:32கலா 5:21-22நீதி 10:12கொலோ 3:121 யோவா 4:11நீதி 17:9யாக் 3:14-17 அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது. 1 கொரி 10:24பிலி 2:3-51 யோவா 3:16-17யாக் 1:19பிலி 2:21கலா 6:1-2பிலி 4:8ரோம 15:1-2 அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும். ரோம 12:93 யோவா 1:3-42 யோவா 1:4ரோம 1:322 தெச 2:12ஓசி 4:8நீதி 14:9லூக் 19:41-42 அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும். 1 பேது 4:81 கொரி 13:41 பேது 2:242 தீமோ 2:24நீதி 10:12கலா 6:21 கொரி 9:12உன்னத 8:6-7
அன்பு ஒருபோதும் தோல்வியடையாது. ஒருபோதும் அழியாது. எங்கே இறைவாக்குகள் இருக்கின்றனவோ, அவை முடிவுக்கு வரும்; எங்கே ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகள் பேசப்படுகின்றனவோ, அவை ஓய்ந்து போகும்; எங்கே அறிவு இருக்கிறதோ, அது இல்லாமல் போய்விடும். 1 கொரி 13:131 கொரி 13:1-2கலா 5:61 கொரி 13:10அப் 2:4எபி 8:131 கொரி 12:101 கொரி 12:28-30 ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது. கொலோ 2:2-3எபே 3:18-191 கொரி 2:9சங் 139:61 கொரி 13:121 கொரி 8:2யோபு 11:7-8மத் 11:27 ஆனால் முழுநிறைவு வரும்போது, முழுநிறைவற்றது மறைந்துபோகும். 1 கொரி 13:12ஏசா 60:19-202 கொரி 5:7-8ஏசா 24:23வெளி 22:4-5வெளி 21:22-23 நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறுபிள்ளையைப்போலவே பேசினேன். ஒரு சிறுபிள்ளையைப்போலவே சிந்தித்தேன். ஒரு சிறுபிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான், ஒரு முழு வளர்ச்சிப்பெற்ற மனிதனானபோது, சிறுபிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன். 1 கொரி 14:201 கொரி 3:1-2கலா 4:1பிரச 11:10 இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம்; அப்பொழுதோ, நாம் முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் ஒரு பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறேன்; அப்பொழுதோ, நான் முழுமையாக அறிந்துகொள்வேன். நான் அறிந்துகொள்கிறபடியே முழுமையாக அறிந்து கொள்ளப்படுவேன். 1 யோவா 3:22 கொரி 3:181 கொரி 13:9-10பிலி 3:12வெளி 22:42 கொரி 5:7மத் 5:8யாக் 1:23
ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது. 1 கொரி 16:14கொலோ 3:141 யோவா 4:7-181 கொரி 13:1-8கலா 5:6மாற் 12:29-31பிலி 1:9புலம் 3:21-26