பிரியமானவர்களே, நான் உங்களிடத்தில் வந்து, இறைவனைப்பற்றிய சாட்சியை உங்களுக்குப் பிரசித்தப்படுத்தியபோது, பேச்சுத் திறனுடனோ அல்லது மனித ஞானத்துடனோ வரவில்லை. 1 கொரி 1:171 கொரி 2:131 கொரி 2:4யாத் 4:10ரோம 16:181 யோவா 5:11-132 தீமோ 1:8எரே 1:6-7 ஏனெனில் நான் உங்களோடிருந்தபோது, இயேசுகிறிஸ்துவையும் அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் தவிர, வேறெதையும் அறியாதவனாகவே இருக்கவேண்டுமென உறுதிகொண்டிருந்தேன். கலா 6:141 கொரி 1:22-25பிலி 3:8-10யோவா 17:3கலா 3:1 நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்துடனுமே வந்தேன். 2 கொரி 13:41 கொரி 4:10-132 கொரி 12:5-102 கொரி 13:92 கொரி 10:102 கொரி 4:12 கொரி 4:162 கொரி 4:7-12 என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் கவர்ச்சியும் உள்ள வார்த்தைகளாக இருக்கவில்லை. ஆனால் அவை ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. 1 கொரி 4:201 தெச 1:51 கொரி 1:171 கொரி 2:1ரோம 15:192 பேது 1:161 கொரி 2:13கொலோ 2:4 உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல், இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே நான் இப்படி நடந்துகொண்டேன். 2 கொரி 4:72 கொரி 12:92 கொரி 6:71 கொரி 1:171 கொரி 3:6அப் 16:14
ஆவியானவரிடமிருந்து ஞானம்
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. எபி 5:14யாக் 3:151 கொரி 2:82 கொரி 4:41 கொரி 1:18-201 கொரி 1:281 பேது 5:10எபே 4:11-13 இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். கொலோ 1:26-272 பேது 1:3ரோம 16:25-26மத் 11:25மத் 13:35சங் 78:21 பேது 5:10எபே 3:4-9 இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. அப் 13:27யாக் 2:11 கொரி 2:6அப் 7:2சங் 24:7-101 கொரி 1:26-281 தீமோ 1:132 கொரி 3:14 ஆனால் எழுதியிருக்கிறபடி: ஏசா 64:4சங் 31:19யாக் 1:12ரோம 8:28ஏசா 65:17யாக் 2:5எபி 11:16மத் 25:34
“இறைவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டவைகளை,
எந்த ஒரு கண்ணும் காணவுமில்லை,
எந்த ஒரு காதும் கேட்கவுமில்லை,
எந்த ஒரு மனமும் சிந்திக்கவுமில்லை.” 1
இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். யோவா 14:26எபே 3:5லூக் 10:21யோவா 16:13எபே 3:3கலா 1:12மத் 13:11மத் 16:17
பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழ்ந்த இரகசியங்களையுங்கூட ஆராய்கிறார். ஒரு மனிதனுடைய சிந்தனைகள், அவனுக்குள் இருக்கும் ஆவிக்குத்தவிர வேறு யாருக்குத் தெரியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, வேறு ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறியமாட்டார்கள். நீதி 20:271 கொரி 2:10எரே 17:9நீதி 14:10ரோம 11:33-34நீதி 20:5 நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரையே பெற்றுக்கொண்டோம். இதனால் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்தவற்றை நாம் விளங்கிக்கொள்கிறோம். 1 யோவா 2:27ரோம 8:5-61 யோவா 2:201 யோவா 5:19-201 யோவா 4:4-5யோவா 16:14-15ரோம 8:15-162 கொரி 4:4 ஆகவே இவற்றை நாங்கள் பேசுவது, மனித ஞானம் கற்றுத்தந்த வார்த்தைகளினால் அல்ல, ஆவியானவர் கற்றுத்தந்த வார்த்தைகளினாலேயே நாங்கள் அறிவிக்கிறோம். இவ்விதம் ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரிய வார்த்தைகளால் தெளிவுபடுத்துகிறோம். 1 கொரி 2:141 கொரி 2:41 கொரி 1:171 கொரி 12:1-31 கொரி 2:1கொலோ 3:161 பேது 1:121 கொரி 10:3-5 பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு மூடத்தனமாகத் தோன்றும். அவற்றை விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஏனெனில், இவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன. 1 கொரி 1:18ரோம 8:5-8மத் 13:11-172 கொரி 4:4-61 யோவா 2:271 கொரி 15:46யூதா 1:19யாக் 3:15 ஆனால் ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து விளங்கிக்கொள்கிறான். அவனையோ மற்றவர்களால் விளங்கிக்கொள்ளவே முடியாது: 1 தெச 5:21எபி 5:14நீதி 28:51 யோவா 4:11 கொரி 14:37கலா 6:1எபே 4:13-14பிலி 1:10
ஏனெனில் வேதவசனம் சொல்கிறபடி, ஏசா 40:13-14ரோம 11:34யோவா 16:13-16யோவா 15:15யோபு 15:8எரே 23:18எபே 3:3-4யோவா 17:6-8
“கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு,
அவருடைய மனதை அறிந்தவன் யார்?” 2
ஆனால் நாமோ கிறிஸ்துவின் மனதை உடையவர்களாயிருக்கிறோம்.