நீர் வானங்களைப் பிரித்துக் கீழே வாரும், மீகா 1:3-4யாத் 19:18-19மாற் 1:10நாகூ 1:5-6வெளி 20:11சங் 144:5-6சங் 68:8ஆப 3:1-13
அப்பொழுது நாடுகள் உமக்கு முன்பாக நடுங்கும்!
விறகுகளை நெருப்பு எரிக்கும்போது சங் 99:1எரே 33:9தானி 4:32-37தானி 6:25-27யாத் 14:4எசேக் 38:22-23ஏசா 37:20எரே 5:22
அது தண்ணீரைக் கொதிக்கச் செய்யும்.
அதுபோல் நீர் இறங்கி உமது பகைவர் உமது பெயரை அறிந்துகொள்ளச் செய்யும்.
நாடுகளை உமக்கு முன்பாக அதிரச்செய்யும்.
ஏனெனில் பண்டைய நாட்களில் நாங்கள் எதிர்பாராத யாத் 34:10உபா 10:21ஆப 3:3சங் 106:22சங் 65:5-6சங் 66:3சங் 66:52 சாமு 7:23
அச்சுறுத்தும் செயல்களை நீர் செய்தீர்,
நீர் வந்தபோது மலைகள் உமக்கு முன்பாக நடுங்கின.
உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற, 1 கொரி 2:9-10சங் 31:19யாக் 5:7ஏசா 25:9கொலோ 1:26-27சங் 130:5எபே 3:17-21ஆதி 49:18
வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை,
எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை,
எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை.
உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு அப் 10:35எபி 4:16பிலி 3:13-15அப் 10:2-4யாத் 20:24யாத் 25:22யாத் 29:42-43யாத் 30:6
நீர் உதவிசெய்ய வருகிறவர்.
ஆனால் நாங்கள் தொடர்ந்து உமக்கெதிராகப் பாவம் செய்தபோது,
நீர் கோபங்கொண்டீர்.
அப்படியானால் எப்படி நாம் காப்பாற்றப்படுவோம்?
நாம் அனைவரும் அசுத்தரைப் போலானோம், ரோம 7:18ரோம 7:24எபே 2:1-2வெளி 3:17-18சகரி 3:3ஏசா 53:6யோபு 42:5-6தீத் 3:3
எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் கறைபட்ட கந்தலைப்போல் இருக்கின்றன,
நாம் எல்லோரும் இலையைப்போல் வாடிப்போகிறோம்;
காற்றைப்போல எங்கள் பாவங்கள் எங்களை அள்ளிக்கொண்டுபோகிறது.
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடுவோரோ, எசேக் 22:30ஓசி 7:14ஏசா 50:2ஏசா 59:16ஓசி 7:7ஏசா 27:5ஏசா 54:8ஏசா 59:2
உம்மைப் பற்றிப்பிடிக்க முயற்சிக்கிறவரோ ஒருவருமில்லை;
ஏனெனில், நீர் உம்முடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்து,
எங்கள் பாவங்களினிமித்தம் எங்களை அழிந்துபோகவிட்டீர்.
ஆயினும் யெகோவாவே, நீரே எங்கள் தகப்பன். எபே 2:10சங் 119:73எரே 18:2-6சங் 138:8சங் 100:3ஏசா 29:16ஏசா 44:24ஏசா 45:9
நாங்கள் களிமண், நீர் குயவன்;
நாங்களெல்லோரும் உமது கரத்தின் வேலைப்பாடு.
யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்; மீகா 7:18-20சங் 74:1-2சங் 79:132 பேது 2:17ஆப 3:2ஏசா 43:25ஏசா 57:17ஏசா 60:10
எங்கள் பாவங்களை என்றென்றும் நினைவுகூரவும் வேண்டாம்.
உமது மக்களாகிய எங்கள் அனைவரையும்
நோக்கிப்பாரும்.
உமது பரிசுத்த பட்டணங்கள் பாலைவனமாகிவிட்டன; ஏசா 1:7லூக் 21:242 நாளாக 36:19-212இராஜா 25:9தானி 12:7தானி 9:26-27புலம் 1:1-4புலம் 2:4-8
சீயோன் பாழ் நிலமானது, எருசலேமும் பாழாய்ப் போயிற்று.
எங்கள் முற்பிதாக்கள் உம்மைத் துதித்த 2இராஜா 25:9சங் 74:5-72 நாளாக 36:19புலம் 1:10-11புலம் 1:7எசேக் 24:21எரே 52:13புலம் 2:7
பரிசுத்தமும் மகிமையுமான எங்கள் ஆலயம் நெருப்புக்கு இரையாகி,
எங்களுக்கு இன்பமாய் இருந்தவையெல்லாம் பாழாய் கிடக்கின்றன.
யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ? ஏசா 42:14சங் 74:10-11சங் 74:18-19சங் 83:1சகரி 1:12சங் 10:1சங் 79:5சங் 80:3-4
நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ?