“உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே, வெளி 21:23சங் 50:2சங் 77:20சங் 99:11 பேது 2:25ஏசா 63:111 சாமு 4:42 சாமு 6:2
எங்களுக்குச் செவிகொடும்.
கேருபீன்களுக்கு இடையில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே,
எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும். சங் 35:23எண் 2:18-24ஏசா 42:13-14சங் 44:23-26ஏசா 25:9ஏசா 33:22எண் 10:22-24சங் 78:38
உமது வல்லமையை எழச்செய்து,
எங்களை இரட்சிக்க வாரும்.
இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; புலம் 5:21எண் 6:25-26சங் 85:4சங் 4:6சங் 80:19சங் 80:71 இராஜா 18:37சங் 67:1
உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, சங் 85:5உபா 29:20ஏசா 58:2-3ஏசா 58:6-9புலம் 3:44லூக் 18:1-8மத் 15:22-28சங் 59:5
உமது மக்கள் மன்றாடும்போது
எவ்வளவு காலத்திற்கு கோபங்கொண்டிருப்பீர்?
நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்; ஏசா 30:20சங் 42:3சங் 102:9எசேக் 4:16-17யோபு 6:7
நீர் அவர்களை நிறைய கண்ணீரைப் பருகும்படிச் செய்தீர்.
நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்; சங் 79:4எசேக் 36:4ஏசா 36:12-20ஏசா 36:8ஏசா 37:23நியாயாதி 16:25எரே 15:10எரே 48:27
எங்கள் பகைவர் எங்களை ஏளனம் செய்யவிட்டீர்.
சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; சங் 51:10ஏசா 64:5எரே 4:14சங் 80:19சங் 80:32 தீமோ 2:25-26ஏசா 30:15மாற் 4:12
நாங்கள் இரட்சிக்கப்படும்படி
உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.
நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்; எரே 2:21எசேக் 17:6சங் 44:2ஏசா 5:1-7எரே 12:10யோவா 15:1-8எரே 18:9-10அப் 7:45
பிற நாட்டு மக்களைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.
நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்; யோசு 24:12யாத் 23:28-30ஏசா 27:61 நாளாக 21:51 நாளாக 27:23-241 இராஜா 4:201 இராஜா 4:25ஏசா 37:31
அது வேர்விட்டு நாடெங்கும் படர்ந்தது.
அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன; சங் 104:16
அதின் கிளைகளால் வலிமையான கேதுரு மரங்களும் மூடப்பட்டன.
அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும், சங் 72:81 நாளாக 18:31 இராஜா 4:211 இராஜா 4:24யாத் 23:31ஆதி 15:18
தன் தளிர்களை நதி 1 வரைக்கும் பரப்பியது.
நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்? ஏசா 5:5லூக் 20:16சங் 89:40-41ஏசா 18:5-6நாகூ 2:2
அதைக் கடந்துபோகிற எல்லாருமே இப்போது அதின் பழங்களைப் பறிக்கிறார்களே.
காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன; எரே 4:7எரே 5:62 நாளாக 32:1-332 நாளாக 36:1-232இராஜா 18:1-192இராஜா 24:1-20எரே 39:1-3எரே 51:34
வயல்வெளியின் உயிரினங்கள் அதில் மேய்கின்றன.
சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும், ஏசா 63:15தானி 9:16-19ஏசா 63:17மல்கி 3:7சங் 90:13அப் 15:16யோவே 2:14புலம் 3:50
பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பாரும்,
இந்தத் திராட்சைக் கொடியைக் கவனியும்,
உமது வலதுகரம் நாட்டிய வேரையும், யோவா 15:1சகரி 3:8சகரி 6:12ஏசா 11:1எரே 2:21எரே 23:5-6மாற் 12:1சங் 80:8
உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த உமது மகனையும் காத்துக்கொள்ளும்.
உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது; சங் 39:11யோவா 15:62 தெச 1:9எசேக் 20:47-48ஏசா 27:11சங் 76:6-7சங் 79:5சங் 90:7
உமது முகத்தின் கண்டிப்பான பார்வையினால் உமது மக்கள் அழிகிறார்கள்.
உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல், தானி 7:13-14சங் 110:1சங் 89:21சங் 80:15ஏசா 53:5யோவா 5:21-29
உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த மானிடமகன்மேல் அமரச்செய்யும்.
அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்; யோவா 6:66-69பிலி 2:12-13சங் 119:107சங் 119:154சங் 119:25சங் 119:40எபி 10:38-39உன்னத 1:4
எங்களை உயிர்ப்பியும், நாங்கள் உமது பெயரைச் சொல்லி வழிபடுவோம்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, எரே 3:22-23சங் 27:4சங் 80:3சங் 44:3சங் 80:1சங் 27:9சங் 31:16சங் 80:7
எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்;
நாங்கள் இரட்சிக்கப்படும்படி
உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.