யூதாவின் அரசனான எசேக்கியா
ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான். 2 நாளாக 28:271 நாளாக 3:13மத் 1:9-102இராஜா 16:202இராஜா 15:302இராஜா 16:22இராஜா 18:9 அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். 2 நாளாக 29:1-2 எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். 2இராஜா 20:31 இராஜா 11:381 இராஜா 11:41 இராஜா 15:111 இராஜா 15:51 இராஜா 3:142 நாளாக 29:22 நாளாக 31:20-21 வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் 1 என்று அழைக்கப்பட்டது. 2 நாளாக 31:1எண் 21:8-92இராஜா 18:221 இராஜா 15:12-141 இராஜா 22:431 இராஜா 3:2-32இராஜா 12:3உபா 12:2-3
எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை. 2இராஜா 23:252இராஜா 19:10மத் 27:43எபே 1:122 நாளாக 32:7-8யோபு 13:15சங் 13:5சங் 146:5-6 அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான். உபா 10:20யோசு 23:8யோவா 14:15அப் 11:231 யோவா 5:32இராஜா 17:13யோவா 15:142இராஜா 17:16 யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான். 2இராஜா 16:7ஆதி 39:2-3சங் 60:12ரோம 8:311 சாமு 18:142 நாளாக 31:212 நாளாக 32:30மத் 28:20 அவன் பெலிஸ்தியருடன் போரிட்டு, காவற்கோபுரம் தொடங்கி அரணான பட்டணம்வரை காசாவின் எல்லைவரை அவர்களைத் துரத்தினான். 2இராஜா 17:9ஏசா 14:292 நாளாக 28:181 நாளாக 4:412 நாளாக 26:10ஏசா 5:2
எசேக்கியா அரசனாக வந்த நான்காம் வருடம், ஏலாவின் மகனான இஸ்ரயேல் அரசன் ஓசெயாவின் ஏழாம் வருடமாயிருந்தது. அந்த வருடத்தில் அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டான். ஓசி 10:142இராஜா 17:3-232இராஜா 18:1 மூன்று வருடங்களுக்குப் பின்பு அசீரியர் சமாரியாவைக் கைப்பற்றினார்கள். அந்த வருடம் எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியும், இஸ்ரயேலின் அரசனாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியுமாயிருந்தது. ஆமோ 3:11ஆமோ 6:7ஆமோ 9:1-4ஓசி 13:16மீகா 1:6-9மீகா 6:16மீகா 7:13 அப்போது அசீரிய அரசன், இஸ்ரயேலரை அங்கிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தி, அவர்களைக் ஆலாகிலும், ஆபோர் ஆற்றுக்கு அருகே இருக்கும் கோசானிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 1 நாளாக 5:262இராஜா 17:6ஏசா 37:122இராஜா 19:11அப் 7:43ஆமோ 5:1-3ஆமோ 5:25-27ஆமோ 5:6 இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய உடன்படிக்கையை மீறியதால்தான் இவை நடந்தன. யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்த கட்டளைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவுமில்லை, அவற்றின்படி நடக்கவுமில்லை. 1 இராஜா 9:61 பேது 2:81 பேது 4:172இராஜா 17:7-232 தெச 1:82 தீமோ 2:24தானி 9:6-11உபா 11:28
எசேக்கியா அரசனின் ஆட்சியின் பதினான்காம் வருடத்திலே, அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான். ஏசா 36:1-222 நாளாக 32:1-23ஓசி 12:1-2ஏசா 10:5ஏசா 7:17-25ஏசா 8:7-8 யூதாவின் அரசனாகிய எசேக்கியா, லாகீசிலுள்ள அசீரிய அரசனுக்கு அனுப்பிய செய்தியாவது: “நான் பிழை செய்தேன். என்னைவிட்டுப் போய்விடும். நீர் கேட்பது எதையும் நான் கொடுக்கிறேன்” என்பதாகும். அப்பொழுது அசீரிய அரசன் எசேக்கியாவிடம் முந்நூறு தாலந்து வெள்ளியையும், முப்பது தாலந்து தங்கத்தையும் தனக்காகப் பெற்றுக்கொண்டான். 2இராஜா 18:71 இராஜா 20:4லூக் 14:32நீதி 29:25 அப்படியே எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறைகளிலும் இருந்த எல்லா வெள்ளியையும் கொடுத்தான். 1 இராஜா 15:18-192இராஜா 16:82 நாளாக 16:22இராஜா 12:181 இராஜா 15:15
அத்துடன் அவ்வேளையில் யூதாவின் அரசனான எசேக்கியா யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளையும், கதவு நிலைகளையும், தகடாக மூடிச்செய்திருந்த தங்கத்தையும் கழற்றி எடுத்து அசீரிய அரசனிடம் கொடுத்தான். 1 இராஜா 6:31-352 நாளாக 29:3
சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்தல்
ஆனாலும் அசீரிய அரசன் தனது பிரதான தளபதியையும், தலைமை அதிகாரியையும், படைத்தளபதியையும் ஒரு பெரிய இராணுவப் படையுடன் லாகீசிலிருந்து எருசலேமிலிருந்த எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றார்கள். 2இராஜா 20:20ஏசா 20:1ஏசா 7:3ஏசா 36:22 நாளாக 32:9ஏசா 22:9-11 அவர்கள் அரசனை அங்கே வரும்படி அழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவர்களிடத்திற்கு வெளியே போனார்கள். 2இராஜா 19:21 இராஜா 4:32 நாளாக 34:82 சாமு 20:242 சாமு 8:16-17ஏசா 22:15-24ஏசா 36:22ஏசா 36:3
படைத்தளபதி அவர்களிடம், “நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது: ஏசா 36:42இராஜா 19:10ஏசா 10:8-142 நாளாக 32:10-112 நாளாக 32:14-162 நாளாக 32:7-82இராஜா 18:222இராஜா 18:29-30
“ ‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே: நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்? உன்னிடம் போர் தந்திரமும், இராணுவ பெலனும் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். நீ என்னை எதிர்த்துக் கலகம் செய்ய யாரைச் சார்ந்திருக்கிறாய்? நீதி 21:30-31 இதோ, முறிக்கப்பட்ட நாணல் தண்டாகிய எகிப்தையா நீ நம்பியிருக்கிறாய்? அந்த நாணலில் சாய்ந்துகொள்கிற எவனுடைய கையையும் அது உருவக்குத்தி அவனைக் காயப்படுத்தும். எகிப்திய அரசனான பார்வோன் தன்னை நம்பியிருக்கிற யாவருக்கும் அப்படியே இருக்கிறான். ஏசா 30:7எசேக் 29:6-7ஏசா 30:2-32இராஜா 17:4ஏசா 31:1-3ஏசா 36:6எரே 46:17 “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவையே நம்பியிருக்கிறோம்” என்று என்பாயாகில், “எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தில் மட்டும்தான் வழிபடவேண்டும்” என்று, யூதாவுக்கும் எருசலேமில் உள்ளவர்களுக்கும் சொல்லி, எசேக்கியாவே அவருடைய வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான் அல்லவா? 2 நாளாக 31:11 கொரி 2:152 நாளாக 32:122இராஜா 18:4-5தானி 3:15ஏசா 36:7மத் 27:43
“ ‘எனவே வாரும், அசீரிய அரசனாகிய எனது தலைவனுடன் பேரம் ஒன்று பேசுவோம்: சவாரி பண்ணத்தக்க வீரர்களை உன்னால் தேடிக்கொள்ள முடியுமானால், நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். 1 இராஜா 20:101 இராஜா 20:181 சாமு 17:421 சாமு 17:44ஏசா 10:13-14ஏசா 36:8-9நெகே 4:2-5சங் 123:3-4 தேர்களுக்காவும், குதிரைவீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருந்தாலுங்கூட, எனது தலைவனுடைய சிறிய அதிகாரிகளில் ஒருவனையேனும் எதிர்த்துத் துரத்த உங்களால் எப்படி முடியும்? ஏசா 10:82இராஜா 18:21தானி 2:37-38தானி 4:22தானி 4:37உபா 17:16எசேக் 17:15எசேக் 17:17 யெகோவாவின் சம்மதமில்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்தேன்? யெகோவா தாமே இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்துச்சென்று இதை அழிக்கும்படி என்னிடம் கூறினார்’ ” என்றான். 2இராஜா 19:61 இராஜா 13:182 நாளாக 35:212இராஜா 19:22-37ஆமோ 3:6ஏசா 10:5-6யோவா 19:10-11
அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாக்கும், அசீரிய படைத்தளபதியிடம், “உமது அடியாரிடம் அராமிய மொழியில் பேசும்; அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி எபிரெய மொழியில் 2 பேசவேண்டாம்” என்றார்கள். எஸ்றா 4:7தானி 2:4ஏசா 36:11-122இராஜா 18:18
ஆனால் அந்தப் படைத்தளபதியோ, “மதில்மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாமல், உங்கள் தலைவருக்கும், உங்களுக்கும் மட்டுமா இவற்றைச் சொல்லும்படி எங்கள் தலைவர் என்னை அனுப்பியிருக்கிறார்? அவர்களும் உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடிக்கப் போகிறவர்களல்லவா” என்று பதிலளித்தான். 2இராஜா 6:25உபா 28:53-57எசேக் 4:13எசேக் 4:15புலம் 4:5சங் 73:8
அதன்பின் அந்தத் தளபதி எழுந்து நின்று எபிரெய மொழியில் உரத்த சத்தமாய், “பேரரசனான அசீரிய அரசனின் வார்த்தையைக் கேளுங்கள். ஏசா 36:13-182 நாளாக 32:182இராஜா 18:19எசேக் 29:3எசேக் 31:3-10எஸ்றா 7:12ஏசா 10:8-13சங் 47:2 அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். என்னுடைய கையிலிருந்து உங்களை விடுவிக்க அவனால் முடியாது. 2 நாளாக 32:152 நாளாக 32:112 தெச 2:42 தெச 2:8தானி 3:15-17தானி 6:16யோவா 19:10-11சங் 73:8-9 எசேக்கியா உங்களிடம், ‘யெகோவா நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்தப் பட்டணமும் அசீரிய அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி, அவன் உங்களை யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கும்படி இணங்கவைக்க முயற்சிப்பான். அதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டாம். 2இராஜா 19:102இராஜா 19:222இராஜா 19:32-34லூக் 23:35மத் 27:43சங் 11:1சங் 125:1-2சங் 22:7-8
“எசேக்கியாவின் சொல்லைக் கேளாதீர்கள். அசீரிய அரசன் கூறுவது இதுவே: என்னுடன் சமாதானமாகி, என்னிடம் வாருங்கள். அப்போது உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் திராட்சைக் கொடியிலிருந்தும், தன்தன் அத்திமரத்திலிருந்தும் கனியை சாப்பிட்டு, தன் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரையும் குடிப்பான். 1 இராஜா 4:251 இராஜா 4:20சகரி 3:10நீதி 18:16ஆதி 32:20ஆதி 33:11 நான் திரும்ப வந்து தானியம் நிறைந்ததும், புதிய திராட்சை இரசம் உள்ளதும், அப்பமும் திராட்சைத் தோட்டங்களும், ஒலிவமரங்களும், தேனும் நிறைந்ததுமான உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு உங்களைக் கொண்டுபோகும் வரைக்கும் நீங்கள் அப்படியே சாப்பிட்டுக் குடிப்பீர்கள். மரணத்தையல்ல வாழ்வையே தெரிந்துகொள்ளுங்கள். உபா 8:7-9உபா 11:12யாத் 3:82இராஜா 17:232இராஜா 17:62இராஜா 18:112இராஜா 24:14-162இராஜா 25:11
“எசேக்கியாவுக்குச் செவிகொடுக்க வேண்டாம். ‘யெகோவா எங்களை விடுவிப்பார்’ என்று கூறி உங்களைத் தவறாக வழிநடத்துகிறான். எந்த நாட்டின் தெய்வங்களாவது அசீரிய அரசனின் கையிலிருந்து தன் நாட்டை எப்போதாவது மீட்டதுண்டோ? ஏசா 10:10-112 நாளாக 32:14-172 நாளாக 32:192இராஜா 19:12-132இராஜா 19:17-18ஏசா 36:18-20 ஆமாத், அர்பாத்தின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா என்னும் பட்டணங்களின் தெய்வங்கள் எங்கே? அவை எனது கரத்திலிருந்து சமாரியாவை விடுவித்தனவோ? ஏசா 10:92இராஜா 17:23-332இராஜா 17:62இராஜா 19:12-132 சாமு 8:9ஏசா 36:18-19ஏசா 37:11-12ஏசா 37:18-19 இந்த நாடுகளின் தெய்வங்களில் என் கையிலிருந்து தங்கள் நாட்டை விடுவிக்கக்கூடியதாக இருந்த தெய்வம் எது? அப்படியிருக்க எனது கையிலிருந்து எருசலேமை யெகோவா எப்படி விடுவிப்பார்? என்கிறார்” என்றான். தானி 3:152 நாளாக 32:152இராஜா 19:17யாத் 5:2ஏசா 10:15ஏசா 37:23-29யோபு 15:25-26சங் 2:1-2
இவற்றுக்கெல்லாம் பதில் கொடுக்கக் கூடாதென்று அரசனால் கட்டளை கொடுக்கப்பட்டபடியினால், மக்கள் மவுனமாயிருந்து எவ்வித பதிலையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. ஆமோ 5:13மத் 7:6நீதி 26:4நீதி 9:7சங் 38:13-14சங் 39:1
பின்பு அரண்மனை அதிகாரியான இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாப்பின் மகன் யோவாக்கும் உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் போய் அசீரிய படைத்தளபதி கூறியவற்றைச் சொன்னார்கள். 2இராஜா 18:262இராஜா 22:112இராஜா 22:192இராஜா 5:72இராஜா 6:30ஆதி 37:29ஆதி 37:34ஏசா 33:7