1 அவருடைய கோபத்தின் பிரம்பினால் சங் 88:7யோபு 19:21சங் 88:15-16ஏசா 53:3எரே 15:17-18எரே 20:14-18எரே 38:6புலம் 1:12-14
உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே.
அவர் என்னை வெளியே துரத்தி, ஏசா 59:9யோபு 30:26ஆமோ 5:18-20உபா 28:29எரே 13:16எரே 4:23யோபு 18:18யூதா 1:13
வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார்.
உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் உபா 29:20ஏசா 1:25ஏசா 5:25ஏசா 63:10யோபு 31:21புலம் 2:4-7
அவர் தமது கையை என்மேல் திருப்பினார்.
எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், ஏசா 38:13சங் 51:8எரே 50:17சங் 31:9-10சங் 38:2-8சங் 102:3-5யோபு 16:8-9சங் 22:14
என் எலும்புகளையும் உடைத்துவிட்டார்.
அவர், கசப்பும் கஷ்டமும் புலம் 3:19எரே 23:15யோபு 19:8எரே 8:14எரே 9:15புலம் 3:7-9சங் 69:21
முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார்.
வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், சங் 88:5-6சங் 143:3சங் 143:7
என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார்.
நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; யோபு 19:8யோபு 3:23ஓசி 2:6எரே 38:6எரே 40:4புலம் 1:14சங் 88:8தானி 9:12
அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, யோபு 30:20சங் 22:2யோபு 19:7புலம் 3:44மத் 27:46ஆப 1:2சங் 80:4
கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார்.
செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; ஏசா 63:17ஓசி 2:6ஏசா 30:28புலம் 3:11
அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார்.
பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், ஆமோ 5:18-20ஓசி 13:7-8ஓசி 5:14ஓசி 6:1ஏசா 38:13யோபு 10:16சங் 10:9சங் 17:12
மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும்,
அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, ஓசி 6:1யோபு 16:12-13புலம் 1:13தானி 2:40-44தானி 7:23ஏசா 3:26எரே 19:8எரே 32:43
என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார்.
அவர் தம்முடைய வில்லை வளைத்து, சங் 38:2யோபு 7:20யோபு 6:4புலம் 2:4சங் 7:12-13யோபு 16:12-13
தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த யோபு 6:4உபா 32:23யோபு 41:28
அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார்.
நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; எரே 20:7புலம் 3:63சங் 22:6-71 கொரி 4:9-13எரே 48:27யோபு 30:1-9மத் 27:39-44நெகே 4:2-4
அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள்.
அவர் என்னை கசப்பினால் நிரப்பி, எரே 9:15ஏசா 51:17-22எரே 23:15எரே 25:15-18எரே 25:27யோபு 9:18புலம் 3:19சங் 60:3
காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார்.
அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; நீதி 20:17எரே 6:26சங் 3:7சங் 58:6யோபு 2:8யோபு 4:10யோனா 3:6லூக் 11:11
அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார்.
நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; ஏசா 59:11ஆதி 41:30ஏசா 38:17ஏசா 54:10எரே 14:19எரே 16:5எரே 20:14-18எரே 8:15
சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன்.
ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த யோபு 17:151 சாமு 27:1எசேக் 37:11யோபு 6:11சங் 116:11சங் 31:22
எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.”
நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், புலம் 3:15புலம் 3:5எரே 9:15யோபு 7:7நெகே 9:32சங் 132:1சங் 89:47சங் 89:50
அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன்.
நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், சங் 42:11சங் 42:5-6யோபு 21:6சங் 43:5சங் 146:8சங் 44:25
அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று.
ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். ஆப 2:3சங் 130:7சங் 77:7-11புலம் 3:24-29சங் 119:81
அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு:
அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். சங் 86:15லூக் 1:50நெகே 9:31மீகா 7:18-19மல்கி 3:6சங் 78:38சங் 106:45சங் 77:8
ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; எபி 10:23சங் 30:5ஏசா 33:2சங் 36:5சங் 89:33செப்ப 3:5யாத் 34:6சங் 146:6
உமது உண்மை பெரியது.
நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; சங் 73:26சங் 16:5சங் 142:5புலம் 3:21சங் 33:18எரே 51:19யோபு 13:15சங் 31:24
ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், மீகா 7:7-8ஏசா 40:31சங் 130:5-6புலம் 3:26சங் 37:34சங் 27:14சங் 40:1-5சங் 37:7
அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக சங் 37:7சங் 37:34சங் 130:5ஆதி 49:18எபி 10:351 பேது 1:13எபி 3:14ஏசா 30:15
அமைதியாய் காத்திருப்பது நல்லது.
இளைஞனாய் இருக்கும்போதே பிரச 12:1மத் 11:29-30சங் 119:71சங் 94:12எபி 12:5-12சங் 90:12
அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது.
யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், எரே 15:17புலம் 2:10சங் 102:7சங் 39:9
அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும்.
அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், யோபு 40:42 நாளாக 33:12எசேக் 16:63எரே 31:17யோபு 42:5-6யோவே 2:14யோனா 3:9லூக் 15:18-19
ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், ஏசா 50:6யோபு 16:10மத் 26:67மத் 5:392 கொரி 11:20லூக் 6:29மீகா 5:1சங் 123:3
பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.
ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் சங் 94:14சங் 103:8-10சங் 77:7ஏசா 54:7-101 சாமு 12:22ஏசா 57:16எரே 32:40எரே 31:37
என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். சங் 78:38சங் 30:5சங் 103:11யாத் 3:7ஓசி 11:8நியாயாதி 10:16சங் 106:43-45எரே 31:20
அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
அவர் துன்பத்தையோ துக்கத்தையோ எசேக் 33:11எசேக் 18:32எபி 12:9-10ஏசா 28:21
மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் சகரி 9:11-12ஏசா 51:22-23ஏசா 49:9எரே 51:33-36சங் 102:20சங் 69:33ஏசா 14:17சங் 79:11
கால்களின்கீழ் மிதிப்பதையும்,
ஒருவனின் மனித உரிமைகளை
மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும்,
ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் ஏசா 59:15ஆப 1:132 சாமு 11:27எரே 22:3
யெகோவா காணாதிருப்பாரோ?
யெகோவா உத்தரவிடாவிட்டால், சங் 33:9-11ஏசா 46:10நீதி 16:9நீதி 19:21நீதி 21:30தானி 4:35எபே 1:11யாக் 4:13-15
எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்?
பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் ஏசா 45:7ஆமோ 3:6எரே 32:42யோபு 2:10சங் 75:7நீதி 29:26
மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன.
வாழ்கிற எந்த மனிதனும், மீகா 7:9நீதி 19:3ஆதி 4:5-7எரே 30:152இராஜா 3:132இராஜா 6:322 சாமு 6:7-8எஸ்றா 9:13
தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், 2 கொரி 13:5சங் 139:23-24யோவே 2:12-13ஏசா 55:7சங் 4:4சங் 119:59ஆகா 1:5-9ஓசி 6:1
யெகோவாவிடம் திரும்புவோம்.
எங்கள் இருதயங்களையும், கைகளையும் சங் 25:1சங் 28:2சங் 143:6-8சங் 86:41 தெச 2:8சங் 141:2சங் 63:4
பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி:
“நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், எரே 5:7-9லூக் 15:18-19நெகே 9:262இராஜா 24:4தானி 9:5-14எசேக் 24:13எரே 3:13யோபு 33:27-28
நீர் எங்களை மன்னிக்கவில்லை.
“நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; புலம் 2:17புலம் 2:21புலம் 2:1-2புலம் 3:66சங் 83:152 நாளாக 36:16-17எசேக் 7:9எசேக் 8:18
இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர்.
மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், புலம் 3:8சகரி 7:13சங் 97:2எரே 15:1எரே 14:11சங் 80:4
மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது.
நீர் எங்களை நாடுகளுக்குள் 1 கொரி 4:13உபா 28:13உபா 28:37உபா 28:44புலம் 2:15புலம் 3:14புலம் 4:14-15
குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர்.
“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து புலம் 2:16சங் 22:6-8யாத் 11:7யோபு 30:9-11மத் 27:38-45சங் 44:13-14சங் 79:10சங் 79:4
எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், ஏசா 24:17-18ஏசா 51:19எரே 48:43-44புலம் 1:13புலம் 1:4புலம் 2:1-9லூக் 21:35
பாழும் அழிவும் வந்தன.”
என் மக்கள் அழிக்கப்பட்டதனால் எரே 9:1எரே 9:18புலம் 2:11எரே 13:17எரே 4:19புலம் 1:16புலம் 2:18சங் 119:136
என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது.
என் கண்கள் ஓய்வின்றி, எரே 14:17சங் 77:2புலம் 1:16
கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும்.
பரலோகத்திலிருந்து யெகோவா ஏசா 63:15புலம் 5:1சங் 102:19-20சங் 80:14-16தானி 9:16-19ஏசா 62:6-7ஏசா 64:1புலம் 2:20
கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும்.
என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், எரே 19:9லூக் 19:41-441 சாமு 30:3-4எரே 11:22எரே 14:16எரே 14:18எரே 4:19-21புலம் 1:18
என் ஆத்துமா துக்கிக்கிறது.
காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், சங் 35:19சங் 35:71 சாமு 24:10-151 சாமு 25:28-291 சாமு 26:18-20எரே 37:15-16எரே 37:18எரே 38:4-6
என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள்.
அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, தானி 6:17எரே 38:6எரே 38:9எரே 37:16எரே 37:20மத் 27:60மத் 27:66
குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்;
வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. எசேக் 37:11யோனா 2:3-52 கொரி 1:8-10புலம் 3:18சங் 18:4சங் 69:1-2ஏசா 38:10-13யோபு 17:11-16
நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன்.
யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, அப் 16:24-282 நாளாக 33:11-12எரே 38:6யோனா 2:2-4சங் 116:3-4சங் 130:1-2சங் 142:3-7சங் 18:5-6
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன்.
“ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” ஏசா 38:5யோபு 34:28சங் 34:6சங் 55:1சங் 6:8-9சங் 88:13-142 நாளாக 33:13சங் 116:1-2
என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர்.
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, ஏசா 41:10யாக் 4:8ஏசா 58:9ஏசா 41:14வெளி 2:10ஏசா 43:1-2சங் 145:18அப் 18:9
“நீ பயப்படாதே” என்றீர்.
யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; சங் 34:22எரே 51:36சங் 103:4எரே 50:34சங் 71:23ஆதி 48:161 சாமு 25:39
என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். சங் 43:11 பேது 2:23ஆதி 31:42சங் 26:1சங் 35:1சங் 9:4எரே 18:18-23எரே 20:7-10
நீர் எனக்காக வாதாடும்!
அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், எரே 11:19-20புலம் 3:59சங் 10:14
அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர்.
யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், புலம் 5:1சங் 89:50செப்ப 2:8சங் 74:18புலம் 3:30
எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;
அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எசேக் 36:3சங் 140:3சங் 59:12சங் 59:7எரே 18:18
எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.
அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், சங் 139:2புலம் 3:14யோபு 30:9
அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.
யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். சங் 28:4எரே 11:202 தீமோ 4:14வெளி 6:10எரே 50:29வெளி 18:6
அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.
அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், ஏசா 6:101 கொரி 16:22உபா 2:30உபா 27:15-26சங் 109:17-18
உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.
கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, சங் 8:3உபா 25:19எரே 10:11புலம் 3:43சங் 115:162இராஜா 14:27உபா 29:20உபா 7:24
யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.