ஏசாயா 3

Isaiah 3

யூதா, எருசலேம் நியாயத்தீர்ப்பு

இப்பொழுது பாருங்கள், யெகோவா, லேவி 26:26எசேக் 14:13எசேக் 4:16-17ஏசா 1:24ஏசா 2:22ஏசா 36:12ஏசா 5:13ஏசா 51:22

சேனைகளின் யெகோவா

எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும்

எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்:

உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.

மாவீரனையும், போர்வீரனையும், 2இராஜா 24:14-16ஏசா 9:14-15ஆமோ 2:3எசேக் 17:13எசேக் 8:12எசேக் 9:5ஏசா 2:13-15புலம் 5:12-14

நீதிபதியையும், இறைவாக்கினனையும்,

குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,

ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும், 1 சாமு 8:12உபா 1:15யாத் 18:21நியாயாதி 8:18யாத் 4:10யாத் 4:14-16

தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும்,

மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.

“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்; பிரச 10:161 இராஜா 3:7-92 நாளாக 33:12 நாளாக 36:52 நாளாக 36:92 நாளாக 34:12 நாளாக 36:112 நாளாக 36:2

விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”

மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்: எரே 9:3-8மல்கி 3:52இராஜா 2:232 சாமு 16:5-9ஆமோ 4:1பிரச 10:5-7எசேக் 22:12எசேக் 22:6-7

ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும்,

இளையோர் முதியோருக்கு விரோதமாகவும்,

கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.

ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து, ஏசா 4:1நியாயாதி 11:6-8யோவா 6:15

“உன்னிடம் மேலுடை இருக்கிறது;

நீயே எங்களுக்குத் தலைவனாயிரு.

பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.

ஆனால் அவனோ அந்நாளில், ஓசி 5:13உபா 32:40எசேக் 34:4ஆதி 14:22ஓசி 6:1ஏசா 58:12எரே 14:19புலம் 2:13

“என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது;

இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை.

என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.

எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, 1 கொரி 10:22எசேக் 9:9ஓசி 7:16மல்கி 3:13-152 நாளாக 28:182 நாளாக 28:5-72 நாளாக 33:112 நாளாக 33:6-7

யூதா நாடு வீழ்ச்சியடைகிறது;

அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது,

அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.

அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது; ஆதி 13:13ஆதி 18:20-21எரே 6:151 சாமு 15:322இராஜா 9:30எசேக் 23:16ஆதி 19:5-9ஏசா 3:16

சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள்.

அவைகளை மறைத்து வைக்கவில்லை.

ஐயோ! அவர்களுக்குக் கேடு;

அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.

நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும் சங் 128:1-2எபி 6:10கலா 6:7-8பிரச 8:12எசேக் 18:9-19உபா 28:1-14சங் 18:23-24மல்கி 3:18

என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்;

ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.

கொடியவர்களுக்கு ஐயோ கேடு! பிரச 8:13யாக் 2:13சங் 120:3-4சங் 28:4ஏசா 48:22ஏசா 65:13-15ஏசா 65:20நீதி 1:31

அவர்கள்மேல் பேராபத்து வரும்.

அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு

அவர்களுக்குச் செய்யப்படும்.

வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள், ஏசா 3:4நாகூ 3:132இராஜா 11:1ஏசா 28:14-15ஏசா 9:15-16எரே 5:31மத் 15:14எண் 6:23-27

பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள்.

எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்;

அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.

யெகோவா வழக்காட ஆயத்தமாகி, மீகா 6:2ஓசி 4:1-2நீதி 22:22-23நீதி 23:10-11சங் 12:5

மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.

யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும் யோபு 22:4ஆமோ 4:1ஏசா 3:2-3ஏசா 5:7யாக் 2:6எரே 5:27யோபு 24:9சங் 14:4

விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார்.

“என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே;

எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன? மீகா 3:2-3சங் 94:5ஆமோ 2:6-7ஆமோ 8:4-6யாத் 5:14எசேக் 18:2ஏசா 58:4யோனா 1:6

ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?”

என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

மேலும் யெகோவா சொன்னதாவது: ஏசா 32:9-11எசேக் 16:49-50நீதி 30:13ஏசா 4:4லூக் 23:28ஏசா 1:8ஏசா 24:4ஏசா 3:18

“சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்;

தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள்,

அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள்.

அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க

ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.

ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்; எரே 13:22ஏசா 20:4லேவி 13:29-30லேவி 13:43-44மீகா 1:11வெளி 16:2உபா 28:27எசேக் 16:36-37

அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”

அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள், நியாயாதி 8:21நியாயாதி 8:26 காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள் எசேக் 16:11யாத் 35:22ஆதி 24:22ஆதி 24:30ஆதி 24:53ஆதி 38:18எண் 31:50ஆதி 38:25 தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள், யாத் 39:28யாத் 32:2எசேக் 16:12ஆதி 35:4ஓசி 2:13 மோதிரங்கள், மூக்குத்திகள்; ஆதி 24:471 பேது 3:3-41 தீமோ 2:9-10எஸ்த 8:12எசேக் 16:12ஆதி 41:42யாக் 2:2லூக் 15:22 உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள், கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார். 1 நாளாக 15:27யாத் 38:8எசேக் 16:10ஆதி 24:65ஆதி 41:42லூக் 16:19வெளி 19:14வெளி 19:8

அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்; எசேக் 27:31புலம் 2:101 பேது 3:3ஏசா 15:3ஏசா 22:12மீகா 1:16ஆமோ 8:10எஸ்த 2:12

ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும்.

அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்;

அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்;

அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும்.

உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்; 2 நாளாக 29:9ஆமோ 9:10ஏசா 1:20எரே 11:22எரே 14:18எரே 18:21எரே 19:7எரே 21:9

உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.

சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்; எரே 14:2புலம் 2:10புலம் 1:4யோபு 2:13எசேக் 26:16யோபு 2:8லூக் 19:44ஏசா 47:1

அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.