சங்கீதங்கள் 39

Psalms 39
சங்கீதம் 39

பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.

நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, நீதி 21:23சங் 141:3யாக் 1:26சங் 119:9மீகா 7:5-6சங் 34:13யாக் 3:2-8நீதி 18:21

என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன்.

கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை,

நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.”

நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், அப் 4:20மத் 27:12-14ஏசா 53:7சங் 38:13-14யோபு 32:19-20மத் 7:6

நலமானதையும் பேசாமல் இருந்தேன்.

ஆனால் என் வேதனை அதிகரித்தது;

என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; எரே 20:9லூக் 24:32எசேக் 3:14

நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது;

அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:

“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், சங் 90:12சங் 103:14சங் 119:84யோபு 14:13

என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்;

என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.

என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; சங் 144:4சங் 89:47சங் 62:9சங் 90:9-10பிரச 2:11சங் 39:11யாக் 4:14யோபு 14:1-2

எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது;

பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும்

எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.

“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; லூக் 12:20-21பிரச 2:26யாக் 4:141 கொரி 7:31பிரச 12:13சங் 127:21 பேது 5:7பிரச 2:17-21

அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும்,

அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான்.

“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? ரோம 15:13சங் 38:15சங் 119:81ஆதி 49:18யோபு 13:15சங் 119:166லூக் 2:25சங் 130:5-6

என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.

என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்; சங் 44:13சங் 51:14யோவே 2:17மீகா 7:19யோவே 2:19சங் 130:8சங் 25:11சங் 25:18

என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும்.

நான் மவுனமாயிருந்தேன்; யோபு 2:101 சாமு 3:182 சாமு 16:10தானி 4:35யோபு 1:21யோபு 40:4-5லேவி 10:3சங் 38:13

நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன்.

உமது வாதையை என்னை விட்டகற்றும்; யோபு 9:34யோபு 13:21சங் 25:16-17சங் 32:4சங் 38:3-41 சாமு 6:5யோபு 40:8

உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.

பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, யோபு 13:28எபி 12:6ஏசா 50:91 கொரி 11:30-32வெளி 3:191 கொரி 5:5சங் 102:10-112 பேது 2:16

நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்;

நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே.

“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; 1 பேது 2:11எபி 11:132இராஜா 20:5லேவி 25:23ஆதி 47:9சங் 116:3சங் 119:191 நாளாக 29:15

உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்;

என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம்.

என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே,

நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும்,

குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன்.

நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, யோபு 10:20-21யோபு 14:10-12யோபு 14:5-6யோபு 7:19ஆதி 42:36ஆதி 5:24

நான் திரும்பவும் மகிழும்படியாய்,

உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”