புலம்பல்கள் 2

Lamentations 2

1 யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் 1 நாளாக 28:2சங் 132:7எசேக் 28:14-16புலம் 3:43-44லூக் 10:18வெளி 12:7-9எசேக் 30:18ஏசா 14:12-15

சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்;

இஸ்ரயேலின் சீர்சிறப்பை

வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்;

அவர் தமது கோபத்தின் நாளில்

தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை.

யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் புலம் 2:17புலம் 3:43சங் 89:39-40ஏசா 25:12ஏசா 43:28சங் 21:92 கொரி 10:4எசேக் 9:10

யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்;

யூதா மகளின் கோட்டைகளை

தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார்.

அரசுகளையும், அதன் இளவரசர்களையும்

அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார்.

அவருடைய கோபத்தினால் சங் 74:11ஏசா 42:25சங் 75:10சங் 75:5எரே 48:25சங் 79:5சங் 89:46உபா 32:22

இஸ்ரயேலின் முழு பலத்தையும் 2 இல்லாமல் பண்ணினார்.

அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார்.

அவர் யாக்கோபின் நாட்டில்,

தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற,

கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார்.

அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; எரே 7:20எசேக் 24:25ஏசா 42:25எரே 21:5யோபு 6:4புலம் 3:12-13எரே 30:14நாகூ 1:6

அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது.

அவர் பகைவனைப்போல

கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்;

சீயோன் மகளின் கூடாரத்தில்

தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார்.

ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; புலம் 2:22இராஜா 25:9எரே 30:14எரே 52:13புலம் 2:42 நாளாக 36:16-17எசேக் 2:10எரே 15:1

அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்;

அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி,

அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார்.

யூதாவின் மகளுக்கு புலம்பலையும்,

துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார்.

அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; புலம் 1:4செப்ப 3:18புலம் 4:16எசேக் 12:12-13எசேக் 17:18ஏசா 1:13ஏசா 1:8ஏசா 43:28

அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார்.

யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும்,

ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்;

தமது கடுங்கோபத்தில் அரசனையும்,

ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார்.

யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து, ஆமோ 2:5சங் 74:3-8எசேக் 24:21எசேக் 7:20-22எரே 52:13சங் 78:59-612 நாளாக 36:19அப் 6:13-14

தமது பரிசுத்த இடத்தையும் கைவிட்டார்.

அவளுடைய அரண்மனைகளின் சுவர்களை

பகைவரின் கையில் ஒப்புக்கொடுத்தார்;

அவர்கள் நியமித்த பண்டிகை நாளிலிருப்பதுபோல்

யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.

யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை 2இராஜா 21:13ஏசா 3:26ஏசா 34:11எரே 14:2ஆமோ 7:7-8எரே 5:102 சாமு 8:2எசேக் 20:22

அழிப்பதற்குத் தீர்மானித்துவிட்டார்.

அவர் ஒரு அளவு நூலை நீட்டி அளந்தார்.

அவர் அழிப்பதிலிருந்து தமது கையை விலக்கிக் கொள்ளவில்லை.

அதனால் அவர் அரண்களையும், மதில்களையும் புலம்பச் செய்தார்;

அவை ஒன்றாக பாழாய்ப்போயின.

எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன; எசேக் 7:26ஓசி 3:42 நாளாக 15:3மீகா 3:6-7நெகே 1:3சங் 74:9ஆமோ 8:11-12உபா 28:36

அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார்.

அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும்

நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம் இல்லாமற்போயிற்று.

அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு

யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை.

சீயோன் மகளின் முதியோர் ஏசா 3:26ஏசா 15:3யோபு 2:12-13ஆமோ 8:3எசேக் 7:18ஏசா 47:1யோசு 7:6புலம் 1:1

மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு,

துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள்.

எருசலேமின் இளம்பெண்கள்

தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள்.

அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. புலம் 1:20எரே 4:19யோபு 16:13புலம் 1:16ஏசா 22:4புலம் 3:48-51லூக் 23:29சங் 22:14

நான் எனக்குள் வேதனையடைகிறேன்.

என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது.

ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்.

பிள்ளைகளும் குழந்தைகளும்

பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள்.

அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், எசேக் 30:24ஏசா 53:12

பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்.

அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம்,

“அப்பமும், பானமும் எங்கே?”

எனக்கேட்டு தாயாரின் கைகளில்

உயிரை விடுகிறார்கள்.

எருசலேம் மகளே! புலம் 1:122 சாமு 5:20எரே 14:17எரே 30:12-15எரே 8:22தானி 9:12எசேக் 26:3-4ஏசா 37:22

உனக்கு என்ன சொல்வேன்?

உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்?

சீயோன் கன்னி மகளே,

நான் உன்னைத் தேற்றும்படி

எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்?

உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே.

யார் உன்னைக் குணமாக்க முடியும்?

உனது இறைவாக்கு உரைப்போரின் எசேக் 22:28ஏசா 58:1எரே 5:31எசேக் 22:25மீகா 3:5-7எரே 2:8எரே 8:10-112 பேது 2:1-3

தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே;

உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி,

அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை.

அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும்,

வழிதவறச் செய்வதுமே.

உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், எரே 18:16சங் 48:2எசேக் 25:6எரே 19:8சங் 50:2ஏசா 37:22ஏசா 64:11மத் 27:39

உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்;

எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள்

கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது:

“அழகின் நிறைவு என்றும்,

பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும்

அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?”

உன் பகைவர்கள் எல்லோரும், சங் 35:21புலம் 3:46சங் 37:12யோபு 16:9-10சங் 56:2எரே 51:34சங் 124:3சங் 22:13

உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்;

அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது:

“நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம்.

இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம்.

அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.”

யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; எசேக் 5:11சங் 89:42உபா 28:15-68உபா 31:16-17எசேக் 7:8-9எசேக் 8:18புலம் 1:5புலம் 2:1-2

அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை,

நிறைவேற்றிவிட்டார்.

எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார்,

பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார்.

அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார்.

மக்களின் இருதயங்கள் சங் 119:145எரே 9:1புலம் 1:16புலம் 2:8புலம் 3:48-49சங் 119:136ஓசி 7:14ஆப 2:11

ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன.

சீயோன் மகளின் மதிலே,

உனது கண்ணீர் இரவும் பகலும்

ஒரு நதியைப்போல் ஓடட்டும்;

உனக்கு ஓய்வு கொடாதே,

கண்ணீர்விடாமல் இருக்காதே.

எழும்பு, இரவிலே சங் 62:8ஏசா 26:9சங் 119:147-148சங் 142:2மாற் 1:351 சாமு 1:15சங் 141:2புலம் 2:11-12

முதற்சாமத்தில் கதறி அழு,

யெகோவாவினுடைய சமுகத்தில்

உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று.

ஒவ்வொரு தெருவின் முனையிலும்,

பசியினால் மயங்கி விழும்

உனது பிள்ளைகளின் உயிருக்காக

அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து.

“யெகோவாவே, கவனித்துப் பாரும்: எரே 19:9புலம் 4:10சங் 78:64உபா 9:26யாத் 32:11புலம் 4:132இராஜா 6:28-29உபா 28:53-57

நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ?

பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ?

தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ?

ஆண்டவரின் பரிசுத்த இடத்தில்

ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ?

“வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின் 2 நாளாக 36:17சகரி 11:6எரே 13:14புலம் 3:43எரே 18:21புலம் 1:15புலம் 2:17புலம் 2:2

புழுதியில் விழுந்து கிடக்கிறார்கள்;

வாலிபரும், கன்னிப்பெண்களும்

வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

உமது கோபத்தின் நாளிலே அவர்களை வெட்டிப் போட்டீர்;

இரக்கமின்றி அவர்களை வெட்டிக் கொன்றீர்.

“ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல, எரே 6:25சங் 31:13ஏசா 24:17-18எரே 16:2-4எரே 20:3ஆமோ 9:1-4உபா 28:18ஓசி 9:12-16

திகிலுண்டாகும்படி எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளை வரவழைத்தீர்.

யெகோவாவின் கோபத்தின் நாளில் ஒருவனாகிலும் தப்பவுமில்லை,

பிழைக்கவுமில்லை;

நான் பராமரித்து வளர்த்தவர்களை,

என் பகைவன் அழித்துவிட்டான்.”