புலம்பல்கள் 4

Lamentations 4

1 தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, எசேக் 7:19-22புலம் 2:19ஏசா 1:212இராஜா 25:9-10ஏசா 14:12எரே 52:13மத் 24:2லூக் 21:5-6

சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே!

பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள்

தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன.

ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, ஏசா 30:14எரே 19:11ரோம 9:21-232 தீமோ 2:202 கொரி 4:7ஏசா 51:18புலம் 5:12சகரி 9:13

விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள்,

இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள்.

குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள்.

நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு எசேக் 5:10லூக் 23:28-29புலம் 2:20புலம் 4:102இராஜா 6:26-29உபா 28:52-57எரே 19:9யோபு 39:13-16

பால் கொடுக்கும்.

ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல,

கொடூர மனமுள்ளவர்களானார்கள்.

தாகத்தினால் குழந்தையின் நாவு சங் 22:15புலம் 2:11-12சங் 137:6உபா 32:24புலம் 1:11மத் 7:9-11

அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது;

பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர்,

ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை.

சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் லூக் 16:19ஆமோ 6:3-7லூக் 15:16நீதி 31:211 தீமோ 5:62 சாமு 1:24உபா 28:54-56ஏசா 24:6-12

வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள்.

மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள்

இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள்.

உதவும் கரம் எதுவுமின்றி ஆதி 19:25ஏசா 1:9-10லூக் 10:12லூக் 12:47மத் 24:21தானி 9:12எசேக் 16:48-50புலம் 4:9

ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின்

தண்டனையைவிட, என் மக்களின்

தண்டனை பெரிதாயிருக்கிறது.

அவர்களின் இளவரசர்கள் 2 உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், சங் 51:7சங் 144:12உன்னத 5:101 சாமு 16:12ஆமோ 2:11-12தானி 1:15நியாயாதி 13:5நியாயாதி 13:7

பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள்.

அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும்,

அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன.

ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; புலம் 5:10யோபு 30:30சங் 102:3-5யோபு 19:20சங் 119:83ஏசா 52:14யோபு 2:12யோபு 30:17-19

வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள்.

அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி

காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.

பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, எசேக் 24:23எரே 16:4லேவி 26:39எசேக் 33:10

வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது;

பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால்

பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள்.

இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் 2இராஜா 6:26-29ஏசா 49:15புலம் 2:20எரே 19:9எசேக் 5:10புலம் 3:48புலம் 4:3லேவி 26:29

தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே,

என் மக்கள் அழிக்கப்படுகையில்

பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!

யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்; எரே 7:20எசேக் 22:31எரே 17:27புலம் 2:17தானி 9:12உபா 32:21-25எசேக் 20:47-48எரே 13:14

அவர் தமது கடுங்கோபத்தை ஊற்றிவிட்டார்.

அவர் சீயோனில் நெருப்பை மூட்டினார்.

அது அவளின் அஸ்திபாரங்களை எரித்துப்போட்டது.

பகைவர்களும் எதிரிகளும், உபா 29:24-28சங் 48:4-61 இராஜா 9:8-9எரே 21:13

எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று,

பூமியின் அரசர்களோ

உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை.

ஆனால் அது நடந்தது. எரே 5:31எரே 6:13எசேக் 22:26-28எரே 26:8-9புலம் 2:14மத் 23:311 தெச 2:15-16அப் 7:52

அவளுடைய இறைவாக்கு உரைப்போரின் பாவங்களினாலும்,

ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இது நடந்தது.

அவர்களால் எருசலேமுக்குள் நேர்மையானவர்களின் இரத்தம் சிந்தப்பட்டது.

இப்பொழுதோ அவர்கள் குருடரான ஏசா 1:15எரே 2:34உபா 28:28-29ஏசா 56:10எண் 19:16எபே 4:18ஓசி 4:2ஏசா 29:10-12

மனிதரைப்போல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள்.

அவர்கள் இரத்தத்தினால் கறைப்பட்டிருப்பதால்,

அவர்களுடைய உடைகளைத் தொடுவதற்குக்கூட ஒருவரும் துணியவில்லை.

“விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். லேவி 13:45-46

விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்”

என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள்.

அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள்,

“இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள்.

யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்; ஏசா 9:14-16புலம் 5:12உபா 32:26உபா 28:25உபா 28:64-65எபி 8:9எரே 24:92 நாளாக 36:17

அவர் அவர்கள்மேல் கண்காணிப்பாய் இருப்பதில்லை.

ஆசாரியரைக் கனம்பண்ணுவதுமில்லை,

முதியோருக்கு தயவு காண்பிப்பதுமில்லை.

அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் எசேக் 29:162இராஜா 24:7ஏசா 20:5எசேக் 29:6-7ஏசா 30:1-7ஏசா 31:1-3எரே 2:18எரே 2:36

எங்கள் கண்கள் மங்கிப்போயின;

எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து,

எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே!

மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், ஆமோ 8:2எசேக் 7:2-12சங் 140:11எரே 16:16புலம் 3:521 சாமு 24:142இராஜா 25:4-5எசேக் 12:22-23

அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை.

எங்கள் முடிவு நெருங்கியிருந்தது,

ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது.

எங்களைப் பின்தொடர்ந்தவர்கள், ஆப 1:8எரே 4:13ஏசா 5:26-28உபா 28:49ஓசி 8:1ஏசா 30:16-17ஆமோ 2:14ஆமோ 9:1-3

ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளைப் பார்க்கிலும் வேகமாய் இருந்தார்கள்;

அவர்கள் மலைகளில் எங்களைத் துரத்தி பாலைவனத்தில்

எங்களுக்காய் பதுங்கியிருக்கிறார்கள்.

யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும், 2 சாமு 1:142 சாமு 19:21எசேக் 12:13ஆதி 2:7எரே 39:52 சாமு 1:21எசேக் 17:18புலம் 2:9

அவர்களுடைய கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்டான்.

அவனுடைய நிழலின்கீழ்,

நாடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்வோம் என்று நினைத்திருந்தோம்.

ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே, ஆமோ 1:11யோபு 1:1வெளி 16:15சங் 137:72 நாளாக 28:19பிரச 11:9எசேக் 25:12-14எசேக் 25:6

நீ மகிழ்ந்து சந்தோஷப்படு.

ஆனால் உனக்குங்கூட இறை கோபத்தின் பாத்திரம் கொடுக்கப்படும்;

நீ குடித்து வெறிகொண்டு, ஆடையில்லாமல் கிடப்பாய்.

சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; ஏசா 40:2எரே 50:20சங் 137:7எசேக் 37:28ஏசா 52:1ஏசா 60:18எரே 32:40எரே 33:8

உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார்.

ஆனால் ஏதோமின் மகளே,

அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார்.