கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை
ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கிற நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். கொலோ 1:10பிலி 1:271 தெச 2:121 தெச 4:1-22 பேது 1:31 கொரி 4:162 தீமோ 1:92 தெச 1:11 முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள். கொலோ 3:12-131 கொரி 13:71 கொரி 13:4-5மத் 11:29ரோம 15:1கலா 5:22-231 தீமோ 6:11மத் 5:3-5 சமாதானத்தில் இணைந்து, ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். 1 கொரி 1:10கொலோ 3:13-151 கொரி 12:12-13யோவா 13:34ரோம 14:17-19எபி 12:142 கொரி 13:11யோவா 17:21-23 நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும், எபே 2:18ரோம 12:4-51 கொரி 12:4-131 கொரி 12:20எபே 1:18எபே 4:1கொலோ 1:5எபி 6:18-19 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே திருமுழுக்குமே உண்டு. 1 கொரி 8:61 கொரி 12:131 பேது 3:21ரோம 3:30கலா 3:26-28மத் 28:191 கொரி 1:13யூதா 1:3 ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர். ரோம 11:361 கொரி 8:6மல்கி 2:10கலா 3:26-281 யோவா 3:24கலா 4:3-7யோவா 20:17வெளி 4:8-11
கிறிஸ்து தாராளமாய் கொடுத்திருக்கிறதற்கு ஏற்றவாறு, நம்மில் ஒவ்வொருவரும் அவருடைய கிருபை வரத்தைப் பெற்றிருக்கிறோம். 1 பேது 4:10ரோம 12:31 கொரி 12:7-11எபே 3:2ரோம 12:6-81 கொரி 12:28-30யோவா 3:34எபே 3:8 ஆதலால்: சங் 68:18கொலோ 2:151 சாமு 30:26எஸ்த 2:18நியாயாதி 5:12
“அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது,
தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார்.
அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்” 1
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
“அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா? யோவா 3:13மத் 12:40நீதி 30:4யோவா 6:33சங் 63:9யாத் 19:20ஆதி 11:5எபி 2:9 கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார். எபி 7:26எபி 4:14எபே 1:20-23கொலோ 2:9எபி 9:23-241 தீமோ 3:16கொலோ 1:19மத் 24:34 கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார். எரே 3:151 கொரி 12:28-29எபே 2:202 தீமோ 4:5அப் 20:28மத் 28:20ரோம 10:14-15எபே 4:8 கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது. 1 தெச 5:11-14எபே 4:161 கொரி 12:27ரோம 15:141 கொரி 14:4-5ரோம 14:191 கொரி 14:261 கொரி 14:12 இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது. கொலோ 1:28யோவா 17:21எபே 4:3எபே 4:51 கொரி 14:202 பேது 3:18எபி 5:14எரே 32:38-39
அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம். எபி 13:9ரோம 16:17-181 கொரி 14:201 யோவா 4:1எபி 5:12-14யாக் 1:62 கொரி 2:17எபே 6:11 மாறாக அன்புடனே உண்மையைப் பேசுகிறவர்களாய், எல்லாவகையிலும் நம் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடைவோம். 1 யோவா 3:18எபே 4:25சகரி 8:161 பேது 1:222 பேது 3:181 பேது 2:2எபே 1:22ரோம 12:9 அவராலேயே முழு உடலும், இணைக்கும் மூட்டுகளினால் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் அன்பில் பெருகுகிறது. கொலோ 2:19யோவா 15:5கொலோ 2:21 கொரி 13:13எபே 4:15எபே 4:121 தெச 2:131 தீமோ 1:5
ஒளியின் பிள்ளைகளாக வாழ்வது
எனவே கர்த்தரில் நான் இதை உங்களுக்கு வலியுறுத்தி சொல்கிறதாவது: நீங்கள் தொடர்ந்து யூதரல்லாதவர்களைப்போல, அவர்களின் பயனற்ற சிந்தனையில் வாழக்கூடாது. ரோம 1:211 பேது 4:3-41 தெச 4:1-2கொலோ 3:5-8எபே 2:1-32 பேது 2:18கொலோ 2:41 பேது 1:18 அவர்கள் விளங்கிக்கொள்வதில் மந்தமுள்ளவர்களாயும், இறைவனின் வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவர்களாயும் வாழ்கிறார்கள்; இது அவர்களுடைய இருதயக்கடினத்தினால் ஏற்பட்ட அறிவீனத்தினால் நடக்கிறது. மத் 13:15எபே 2:12ரோம 1:21-23யோவா 12:401 தெச 4:52 கொரி 4:4யாக் 4:4கொலோ 1:21 அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, தங்களைச் சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் எல்லாவித அசுத்தமான செயல்களையும் செய்து, காம வேட்கையில் தொடர்ந்து ஈடுபட ஆசைப்படுகிறார்கள். கொலோ 3:5ரோம 1:24-261 தீமோ 4:2யூதா 1:111 பேது 4:32 பேது 2:12-14வெளி 18:32 பேது 2:22
ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை. தீத் 2:11-14யோவா 6:45மத் 11:291 யோவா 2:272 கொரி 5:14-15லூக் 24:47ரோம 6:1-2 நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள். 1 யோவா 5:20எபே 1:13எபி 3:7-81 யோவா 5:10-12யோவா 14:17கொலோ 2:7யோவா 10:272 கொரி 1:20 உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்; ரோம 6:6எபி 12:1யாக் 1:211 பேது 2:1-2எபி 3:13கொலோ 3:7-9தீத் 3:3எபே 4:25 உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். ரோம 12:2ரோம 8:6சங் 51:10கொலோ 3:101 பேது 1:13எசேக் 36:26தீத் 3:5எபே 2:10 இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள். கொலோ 3:10-142 கொரி 5:17எபே 2:10ரோம 13:14எபே 6:11ரோம 6:42 கொரி 3:182 கொரி 4:16
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும். கொலோ 3:9சகரி 8:16நீதி 12:22ரோம 12:5எபே 4:15நீதி 12:17நீதி 8:7நீதி 12:19 “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்” 2: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். யாக் 1:19சங் 4:4சங் 37:8எபே 4:31-32பிரச 7:9நீதி 14:29நீதி 19:11ரோம 12:19-21 பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள். யாக் 4:71 பேது 5:8எபே 6:16எபே 6:112 கொரி 2:10-11அப் 5:3 களவு செய்வதில் ஈடுபட்டவன் தொடர்ந்து களவு செய்யாமல், தனது கைகளினால் பயனுள்ள வேலைகளைச் செய்யவேண்டும். அப்போது ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அவனிடம் ஏதாவது இருக்கும். 1 தீமோ 6:181 தெச 4:11-12கலா 6:10யாத் 20:152 தெச 3:11-122 தெச 3:6-8லூக் 21:1-4சகரி 5:3
தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள். கொலோ 4:61 தெச 5:11பிரச 10:12நீதி 15:7கொலோ 3:8-9மத் 12:34-37நீதி 25:11-12சங் 37:30-31 இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள். நீங்கள் இறைவனுடையவர்கள் என்பதற்கு உங்களின் மீட்பு நாள்வரை உங்கள்மீது பொறிக்கப்பட்ட அச்சடையாளமாய் ஆவியானவர் இருக்கிறார். 1 தெச 5:19ஏசா 63:10எபே 1:13-14அப் 7:51ஆதி 6:6ரோம 8:23ரோம 8:11ஏசா 43:24 எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள். கொலோ 3:8பிரச 7:9தீத் 3:2-31 பேது 2:1யாக் 1:19கொலோ 3:19யாக் 3:14எபே 4:26 ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும், மனவுருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள். கொலோ 3:12-13மத் 6:14-15மாற் 11:251 பேது 3:8-92 கொரி 2:10எபே 5:1லூக் 6:37லூக் 6:35