1 கொரிந்தியர் 8

1 Corinthians 8

படைக்கப்படும் உணவைக்குறித்து

விக்கிரகங்களுக்குப் படைக்கப்படும் உணவைக்குறித்து நான் எழுதுகிறதாவது: அனைவருக்கும் இதைக்குறித்த அறிவு உண்டென்று நமக்குத் தெரியும். ஆனால், ஒருவனில் அறிவு அகந்தையை உண்டுபண்ணுகிறது. அன்போ ஒருவனைக் கட்டியெழுப்புகிறது. 1 கொரி 8:7ஏசா 5:21ரோம 14:31 கொரி 8:4வெளி 2:141 கொரி 8:2ரோம 15:141 கொரி 13:1-13 தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அதை அறியவில்லை. 1 கொரி 13:121 கொரி 3:18கலா 6:3நீதி 26:121 தீமோ 6:3-41 கொரி 13:8-91 தீமோ 1:5-7நீதி 30:2-4 ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகிறவன் இறைவனால் அறியப்பட்டிருக்கிறான். வெளி 3:8-9யாத் 33:17நாகூ 1:72 தீமோ 2:191 கொரி 2:9கலா 4:9வெளி 2:19யாக் 1:12

எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைப்பற்றிய விஷயத்தில்: உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை, இறைவன் ஒருவரே; அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறிவோம். உபா 4:39எபே 4:61 கொரி 10:19-20உபா 6:41 தீமோ 2:5ஏசா 41:241 கொரி 8:6-7ஏசா 44:24 வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். இவ்வாறு அநேக, “தெய்வங்களும்” சுவாமிகளும் உண்டாயிருந்தாலும், 2 தெச 2:4கலா 4:8எரே 2:28உபா 10:17எரே 11:13எரே 2:11தானி 5:4யோவா 10:34-35 நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கிறோம்; நமக்கு ஒரே ஒரு கர்த்தரே இருக்கிறார். அவரே இயேசுகிறிஸ்து. அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கிறோம். ரோம 11:36யோவா 1:3மல்கி 2:10எபி 1:2-3கொலோ 1:16-171 கொரி 8:4எபே 4:5-6அப் 17:28

ஆனால் எல்லாக் கிறிஸ்தவர்களும், இந்த அறிவைப் பெற்றிருக்கவில்லை. சிலர் இன்னும் தாம் முன் வழிபட்ட விக்கிரக வழிபாட்டின் எண்ணங்கள் உடையவர்களாய் இருப்பதனால், அப்படியான உணவை அவர்கள் சாப்பிடும்போது, அது ஆற்றலுள்ள விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவு என்றே எண்ணுகிறார்கள். அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதனால், அது அசுத்தப்படுத்துகிறது. 1 கொரி 10:28-29ரோம 14:141 கொரி 8:9-10ரோம 14:22-231 கொரி 1:10-11 ஆனால் நாங்கள் சாப்பிடும் உணவு, எங்களை இறைவனோடு நெருக்கமாய் கொண்டுவருவதற்கு உதவுவதில்லை. இப்படிப்பட்ட உணவை நாம் சாப்பிடாமல் விடுவதால், நாம் எதையும் இழந்து விடுவதுமில்லை. அதைச் சாப்பிடுவதால், நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை. ரோம 14:17எபி 13:91 கொரி 6:13கொலோ 2:20-23

எவ்வாறாயினும், உங்கள் சுதந்தரமான செயற்பாடுகளைக்குறித்து கவனமாயிருங்கள். அது பலவீனருக்கு இடறலாய் இருக்கக்கூடாது. கலா 5:13ரோம 14:20-211 பேது 2:162 பேது 2:191 கொரி 10:24ரோம 14:1-21 கொரி 8:12ரோம 14:13-15 இப்படிப்பட்ட அறிவுள்ள நீங்கள், விக்கிரக வழிபாட்டுக் கோவிலில் இருந்து சாப்பிடுவதை, பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு, அவனும் தூண்டப்படுவான் அல்லவா? 1 கொரி 10:28-291 கொரி 10:20-211 கொரி 8:4ரோம 14:231 கொரி 8:1-21 கொரி 8:7ரோம 14:14ஆமோ 2:8 பலவீனமான அந்த சகோதரன், உன்னுடைய அறிவின் நிமித்தம் அழிந்துபோகிறானே. கிறிஸ்து அவனுக்காகவும் இறந்தாரே. ரோம 14:15ரோம 15:1-31 கொரி 8:131 கொரி 10:33ரோம 14:20-21 இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சிகளைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறாய். மத் 18:6மத் 25:451 கொரி 12:121 சாமு 19:4-51 சாமு 2:251 சாமு 24:11அப் 9:4-5யாத் 16:8 ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். ரோம 14:212 கொரி 11:292 கொரி 6:31 கொரி 6:121 கொரி 13:51 கொரி 9:19-231 கொரி 10:331 கொரி 9:12