ஆமோஸ் 2

Amos 2

யெகோவா சொல்வது இதுவே: செப்ப 2:8-9ஆமோ 1:3எசேக் 25:8-92இராஜா 3:26-27ஆமோ 2:4ஏசா 15:1-9ஏசா 25:10எரே 48:1-47

“மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,

என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.

ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச்

சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.

மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன். எரே 48:24எரே 48:41ஆமோ 1:14ஏசா 9:5எரே 48:34

அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.

யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும்

மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும்.

நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன். எரே 48:7எண் 24:17ஏசா 40:23எரே 48:25சங் 2:10

அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்”

என்று யெகோவா சொல்லுகிறார்.

யெகோவா சொல்வது இதுவே: எசேக் 20:24எசேக் 20:13எசேக் 20:16ஆப 2:18ஓசி 12:2ஏசா 28:15எரே 16:19-202இராஜா 17:19

“யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,

என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.

அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து,

அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.

ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய

போலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின.

ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன். ஓசி 8:14எரே 17:27எரே 21:10எரே 37:8-10எரே 39:8எரே 52:13

அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”

இஸ்ரயேலின் நியாயத்தீர்ப்பு

யெகோவா சொல்வது இதுவே: யோவே 3:3ஆமோ 5:11-12மீகா 3:2-32இராஜா 17:7-182இராஜா 18:12ஆமோ 6:3-7ஆமோ 8:4-6எசேக் 23:5-9

“இஸ்ரயேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,

என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.

அவர்கள் நீதியானவர்களை வெள்ளிக்காகவும்,

சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்புக்காகவும் விற்றார்களே.

தரையின் புழுதியை மிதிப்பதுபோல் ஆமோ 5:12எசேக் 22:11ஏசா 10:21 கொரி 5:1மீகா 2:2மீகா 2:91 இராஜா 21:42 சாமு 12:14

ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்.

தகப்பனும் மகனும் ஒரே பெண்ணிடம் உறவுகொண்டு,

என் பரிசுத்த பெயரைத் தூய்மைக் கேடாக்குகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும் உபா 24:12-17யாத் 22:26-27ஆமோ 6:61 கொரி 10:211 கொரி 10:71 கொரி 8:10ஆமோ 4:1ஆமோ 6:4

தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள்.

அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள்

தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.

“எமோரியர் கேதுருமரங்களைப்போல் உயரமாயும், யோபு 18:16மல்கி 4:1உபா 2:24-33உபா 3:11உபா 9:1-3யாத் 34:11ஆதி 15:16எண் 13:28-29

கர்வாலி மரங்களைப்போல் வைரமாயும் இருப்பினும்,

நான் என் மக்களுக்கு நாட்டைப் பெற்றுக் கொடுக்க

அவர்களை இவர்களுக்கு முன்பாக அழித்தேன்.

மேலே அவர்களுடைய பழங்களையும்,

கீழே அவர்களுடைய வேர்களையும் நானே அழித்தேன்.

எமோரியர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்காக, உபா 2:7யாத் 12:51அப் 7:42ஆமோ 3:1அப் 13:18ஆமோ 9:7யாத் 3:8மீகா 6:4

எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து,

நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் உங்களை வழிநடத்தினேன்.

“நான் உங்கள் மகன்களிலிருந்து இறைவாக்கினரையும், எண் 6:2-3எரே 7:251 இராஜா 17:11 இராஜா 18:41 இராஜா 19:161 இராஜா 20:131 இராஜா 20:351 இராஜா 20:41

உங்கள் வாலிபரிலிருந்து நசரேயர்களையும் எழுப்பினேன்.

இஸ்ரயேல் மக்களே, இது உண்மையல்லவா?”

என யெகோவா அறிவிக்கிறார்.

“ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள். ஆமோ 7:13ஏசா 30:10எரே 11:21மீகா 2:6ஆமோ 7:16

இறைவாக்குச் சொல்லக்கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.

“தானியத்தினால் நிறைந்த வண்டியில் நசுக்குவதுபோல, ஏசா 1:14எசேக் 16:43எசேக் 6:9ஏசா 43:24ஏசா 7:13மல்கி 2:17சங் 78:40

நான் உங்களை நசுக்குவேன்.

அப்பொழுது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்கள் தப்பமாட்டார்கள், எரே 9:23ஆமோ 9:1-3பிரச 9:11சங் 33:16ஏசா 30:16-17யோபு 11:20

பலமுள்ளவர்கள் தங்கள் பலத்தை ஒன்றுதிரட்டமாட்டார்கள்,

இராணுவவீரனுங்கூட தன் உயிரைத் தப்புவிக்கமாட்டான்.

வில்வீரனும் தனது இடத்தில் நிற்கமாட்டான், சங் 33:16-17எசேக் 39:3

வேகமாய் ஓடும் இராணுவவீரனும் ஓடித்தப்பமாட்டான்,

குதிரைவீரனும் தன் உயிரைக் காப்பாற்றமாட்டான்.

அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும் மாற் 14:522இராஜா 7:8-20நியாயாதி 4:17எரே 48:41

நிர்வாணமாய் ஓடித்தப்புவார்கள்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.