1 கொரிந்தியர் 10

1 Corinthians 10

இஸ்ரயேலின் சரித்திரத்திலிருந்து எச்சரிக்கை

பிரியமானவர்களே, நமது முற்பிதாக்கள் அனைவரையும் இறைவன் வனாந்திரத்தில் தம் மேகத்தின்கீழ் வழிநடத்தினார். அவர்கள் அனைவருமே செங்கடலைக் கடந்து சென்றார்கள். இந்த உண்மையை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. யாத் 14:29நெகே 9:11-12சங் 78:13-14சங் 105:39சங் 106:7-11யாத் 13:21-22யாத் 14:19-221 கொரி 14:38 அவர்கள் எல்லோரும் மேகத்திலும், கடலிலும், மோசேக்குள் திருமுழுக்குப் பெற்றார்கள். எபி 3:2-31 கொரி 1:13-16யாத் 14:31ரோம 6:3கலா 3:27யோவா 9:28-29 அவர்கள் அனைவரும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே உணவைச் சாப்பிட்டார்கள். உபா 8:3நெகே 9:15யாத் 16:35யாத் 16:4நெகே 9:20யாத் 16:15சங் 105:40சங் 78:23-25 இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே பானத்தைக் குடித்தார்கள்; அவர்களுடன்கூடச் சென்ற அந்த ஆவிக்குரிய கற்பாறை கொடுத்த தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கற்பாறை கிறிஸ்துவே. யாத் 17:6யோவா 7:37ஏசா 48:21யோவா 4:14சங் 105:41யோவா 4:10எண் 20:11சங் 78:15 அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன. எபி 3:17யூதா 1:5எண் 26:64-65எண் 14:37எண் 14:11-12எண் 14:28-35சங் 106:26சங் 78:32-34

அவர்கள் தீமையான காரியங்களின்மேல் தங்கள் இருதயங்களில் நாட்டம் கொண்டதுபோல நாமும் இராதபடி, இவை நமக்கு ஒரு எச்சரிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. யூதா 1:71 கொரி 10:112 பேது 2:6எபி 4:11எண் 11:4செப்ப 3:6-7எண் 11:31-34சங் 106:14-15 அவர்களில் சிலர் விக்கிரக வழிபாட்டுக்காரர்களாக இருந்ததுபோல, நீங்களும் இருக்கவேண்டாம்; “மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்தார்கள். பின்பு களியாட்டங்களில் நாட்டங்கொண்டு எழுந்திருந்தார்கள்” 1 என்று எழுதியிருக்கிறபடி, யாத் 32:6-8சங் 106:19-201 கொரி 6:9உபா 9:121 கொரி 10:14உபா 9:16-211 கொரி 5:111 யோவா 5:21 அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே. எண் 25:1-91 கொரி 6:18சங் 106:291 கொரி 6:9வெளி 2:14 அவர்களில் சிலர் செய்ததுபோல நாம் கிறிஸ்துவைச் சோதிக்கக்கூடாது. இதனால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்களே. எண் 21:5-6சங் 78:18எபி 3:8-11யாத் 17:2உபா 6:16யாத் 17:7சங் 78:56யாத் 23:20-21 அவர்களில் சிலர் செய்ததைப்போல நாம் முறுமுறுக்கக் கூடாது. இதனால் அவர்கள் அழிக்கும் தூதனால் கொல்லப்பட்டார்களே. எண் 14:2எண் 16:41எண் 14:37பிலி 2:141 நாளாக 21:152 சாமு 24:16சங் 106:25யாத் 12:23

மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். ரோம 15:4ரோம 13:111 கொரி 9:101 யோவா 2:18பிலி 4:5ரோம 4:23எபி 10:25எபி 10:37 ஆதலால் நீங்கள் உறுதியாய் நிற்கிறதாக எண்ணுவீர்களாயின், நீங்கள் விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். ரோம 11:202 பேது 3:17நீதி 16:181 கொரி 8:2மத் 26:40-41மத் 26:33-34நீதி 28:14வெளி 3:17-18 உங்களுக்கு நேரிட்ட சோதனைகள் பொதுவாக மனிதனுக்கு நேரிடுகிறவைகளே. இறைவன் உங்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்; ஆகவே உங்களால் தாங்கமுடியாத அளவுக்கு நீங்கள் சோதனைக்குள்ளாக அவர் இடங்கொடுக்கமாட்டார். ஆயினும் நீங்கள் சோதனைக்குட்படும்போது, நீங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு வழியையும் அவர் ஏற்படுத்தித் தருவார். அதனால், உங்களுக்கு அதைத் தாங்கிக்கொள்ளக் கூடியதாயிருக்கும். 2 பேது 2:92 தீமோ 4:182 தெச 3:31 பேது 5:8-9எபி 12:41 தெச 5:24ரோம 8:28-392 கொரி 12:8-10

விக்கிரக வழிபாடு

ஆகையால் என் அன்பான நண்பர்களே, விக்கிரக வழிபாட்டை விட்டு விலகி ஓடுங்கள். வெளி 21:81 யோவா 5:211 பேது 2:112 கொரி 7:12 கொரி 6:17வெளி 22:15வெளி 2:141 கொரி 10:20-21 நான் அறிவாற்றலுள்ள மக்களுடனே பேசுகிறேன்; நான் சொல்வதை நீங்களே நிதானித்துப் பாருங்கள். 1 தெச 5:211 கொரி 8:11 கொரி 11:131 கொரி 14:201 கொரி 4:101 கொரி 6:5யோபு 34:2-3 நாம் ஆசீர்வாதத்தின் பாத்திரத்திற்கு நன்றி செலுத்துகின்றபோது, கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம் அல்லவா? அப்பத்தைப் பிட்கும்போது, கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம் அல்லவா? மத் 26:26-281 கொரி 11:23-29அப் 2:42எபி 3:141 யோவா 1:7யோவா 6:53-58லூக் 22:19-201 யோவா 1:3 ஏனெனில், ஒரே அப்பம் இருப்பதனால், நாம் பலராய் இருந்தாலும், ஒரு உடலாகிறோம். நாமெல்லோரும், ஒரே அப்பத்தில் பங்குகொள்கிறோமே. ரோம 12:5கொலோ 3:151 கொரி 12:121 கொரி 12:27எபே 4:12-13எபே 4:16எபே 4:25எபே 4:4

இஸ்ரயேல் மக்களைக் கவனித்துப் பாருங்கள்: பலியாகச் செலுத்தப்பட்டதைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தின் பணியில் பங்குகொள்கிறார்கள் அல்லவா? எபே 2:11-12கலா 6:16லேவி 3:11லேவி 7:6பிலி 3:3-51 கொரி 9:132 கொரி 11:18-22லேவி 3:3-5 அப்படியானால், விக்கிரகத்துக்குச் செலுத்தப்பட்ட பலியை ஒரு பொருட்டாகவோ, அல்லது விக்கிரகத்தையே ஒரு பொருட்டாகவோ நான் கருதுகிறேனா? 1 கொரி 8:41 கொரி 1:281 கொரி 13:21 கொரி 3:7உபா 32:21ஏசா 40:17ஏசா 41:292 கொரி 12:11 இல்லையே, அஞ்ஞானிகளின் பலிகள் இறைவனுக்கல்ல, பிசாசுகளுக்கே பலியிடப்படுகின்றன. அதனால், நீங்கள் பிசாசுகளுடன் பங்காளிகளாய் இருப்பதை நான் விரும்பவில்லை. வெளி 9:20சங் 106:37-39உபா 32:16-172 கொரி 4:4லேவி 17:72 நாளாக 11:15 கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும், பிசாசுகளுடைய பாத்திரத்திலிருந்தும் நீங்கள் குடிக்க முடியாது; கர்த்தரின் பந்தியும், பிசாசுகளின் பந்தியும் ஆகிய இரண்டிலும் நீங்கள் பங்குள்ளவர்கள் ஆகமுடியாது. மத் 6:241 இராஜா 18:212 கொரி 6:15-17ஏசா 65:111 கொரி 10:16உபா 32:37-381 கொரி 8:10 இவ்வாறு, நாம் கர்த்தருக்கு எரிச்சலூட்ட முயலுகிறோமா? நாம் அவரைவிடப் பலமுள்ளவர்களா? உபா 32:21உபா 32:16எபி 10:31உபா 4:24உபா 6:15பிரச 6:10யாத் 20:5யாத் 34:14

விசுவாசிகளின் சுதந்திரம்

“எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமையுண்டு” என்று சொல்லப்படுகிறது. ஆனால் எல்லாமே பயனுள்ளதாயிராது. “எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமையுண்டு.” ஆனால், எல்லாம் வளர்ச்சியடைவதற்கு உகந்தவையல்ல. 1 கொரி 6:121 கொரி 8:9எபே 4:29ரோம 14:19-201 தெச 5:11ரோம 15:1-2ரோம 14:151 கொரி 14:17 ஒருவனும் தனது நலனை மட்டுமே தேடக்கூடாது; மற்றவர்களது நலனையும் தேடவேண்டும். ரோம 15:1-2பிலி 2:4-51 கொரி 10:33பிலி 2:211 கொரி 9:19-231 கொரி 13:52 கொரி 12:14

இறைச்சிக் கடையில் விற்கும் எதையும் மனசாட்சியின் நிமித்தம் எவ்வித கேள்வியும் கேட்காமல் நீங்கள் வாங்கி சாப்பிடலாம். 1 தீமோ 4:41 கொரி 8:7தீத் 1:15ரோம 14:141 கொரி 10:27-29அப் 10:15ரோம 13:5 ஏனெனில், “பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தருடையவை.” 2 சங் 24:1சங் 50:12யாத் 19:5உபா 10:14யோபு 41:111 தீமோ 6:171 கொரி 10:28

அவிசுவாசியொருவன் உங்களை சாப்பாட்டிற்கு அழைக்கும்போது, அங்கு நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிறதை மனசாட்சியின் நிமித்தம், எவ்வித கேள்விகளையும் கேட்காமல் வாங்கி சாப்பிடுங்கள். 1 கொரி 10:25லூக் 10:7-81 கொரி 5:9-112 கொரி 1:132 கொரி 4:22 கொரி 5:11லூக் 15:23லூக் 19:7 ஆனால் ஒருவன் உங்களுக்கு, “இது பலியிடப்பட்டது” என்று சொன்னால், அவனுக்காகவும், மனசாட்சியின் நிமித்தமும் அதைச் சாப்பிடவேண்டாம். 1 கொரி 8:10-131 கொரி 8:7ரோம 14:151 கொரி 10:26எரே 27:5-6மத் 6:31-32சங் 115:16உபா 10:14 நான் குறிப்பிடுவது உங்களுடைய மனசாட்சியை அல்ல, மற்றவனுடைய மனசாட்சியையே குறிப்பிடுகிறேன். ஏனெனில் எனது சுதந்திரம், ஏன் இன்னொருவனது மனசாட்சியின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்? 1 கொரி 9:19ரோம 14:15-211 கொரி 8:9-131 கொரி 10:322 கொரி 8:211 தெச 5:22 இறைவனுக்கு நன்றி செலுத்தியே நான் உணவைச் சாப்பிடுகிறேன். அப்படியானால் நான் நன்றி செலுத்தியதைக்குறித்து, ஏன் யாராவது என்னைக் குற்றப்படுத்தவேண்டும்? ரோம 14:61 தீமோ 4:3-4

ஆகவே நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும் வேறு எதைச் செய்தாலும், அவையனைத்தையும் இறைவனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள். கொலோ 3:17கொலோ 3:231 பேது 4:11உபா 12:7உபா 12:18சகரி 7:5-6உபா 12:12லூக் 11:41 யாருக்குமே இடறலை ஏற்படுத்தக் காரணமாயிராதேயுங்கள். நீங்கள் யூதர்களுக்கோ, கிரேக்கர்களுக்கோ இறைவனுடைய திருச்சபைக்கோ, இடையூறாய் இருக்காதீர்கள். அப் 20:281 கொரி 10:33ரோம 14:131 கொரி 8:132 கொரி 6:3அப் 24:161 கொரி 11:221 தீமோ 3:15 அவ்வாறே நானும், எல்லாவற்றிலும், ஒவ்வொருவரையும் பிரியப்படுத்தவே முயற்சிக்கிறேன். நான் என்னுடைய நன்மையைத் தேடுகிறவனாயிராமல், பலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதற்காக, அநேகருடைய நன்மையையேத் தேடுகிறேன். 1 கொரி 10:24கலா 1:101 கொரி 9:19-23ரோம 15:2-32 கொரி 12:19ரோம 11:142 கொரி 11:28-29